admin
admin's Latest Posts
மாற்றம்
டாம் என்கிற தமிழரசன் முகத்தில் ஒரு பரபரப்புத் தெரிந்தது. மினியாபோலிஸ் இருந்து லாஸ் வேகாஸ் புறப்படத் தயார் ஆகி கொண்டிருந்தான். அதுவும் இல்லாமல் அவனுடைய நெருங்கிய நண்பனுடைய வருகைக்காகவும் காத்துக் கொண்டிருந்தான். நண்பன் ரஞ்சித் தொலைபேசியில் எவ்வளவு கேட்டும் டாம் பதில் சொல்ல மறுத்தான். “நேரில் வா பேசிக்கொள்ளலாம். இரண்டு நாளைக்கு வேண்டிய துணிமணி எடுத்துக்கொண்டு வா” என்றான். ரஞ்சித் தனது மனைவியை இழந்து ஒரு வருடம் தான் ஆகிறது. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. திடிரென “வா […]
கற்கை நன்றே !!
பொட்டல் காடெல்லாம் புழுதியாப் பறக்குது
நட்டநடு வீட்டடுப்பில் நாய்பூனை தூங்குது
கட்டடம் கழனியெல்லாம் கனவுபோல மறையுது
பட்டமரம் போலவெங்கும் பஞ்சமாத் தெரியுது…..
தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம் ! சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகளைக் குறித்துத் தலையங்கம் தீட்டலாம் என்பது திட்டம். ஒன்று, தமிழ்த் திரையுலகில் பிரபலமான பாடலாசிரியரான நா. முத்துக்குமாரின் அகால மரணம். இசையால் முழுவதுமாக ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு, கிட்டத்தட்ட வரிகளே, கவிதைகளே தேவையில்லை என்ற நிலையை அடைந்து விட்டத் தமிழ் திரையிசையுலகில், சமீபக் காலத்தில் தரமான, சுவையான கவிதைகளைத் தந்த மிகச் சிலரில் அவரும் ஒருவர். கருத்துக்கள் செரிந்த பாடல்களாயினும் சரி, காதல் ரசம் சொட்டும் மெல்லிசையாயினும் சரி, சமீபக் காலங்களில் […]
ஆட்டிஸம் – பகுதி 9
(பகுதி 8) ஆட்டிஸத்துடன் புழங்கும் சமூகத்திற்கு, நம்பிக்கையூட்டும் விதமாக, நேர்மறையான எண்ணங்களுடன் எதையும் அணுகுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இது அனைத்து மனித சமூகத்திற்கும் தேவையான ஒன்று என்றாலும், பாதிப்புள்ளானவர்களுக்கு மிகவும் தேவையான, உதவிகரமான ஒரு பண்பு. பொதுவாக, நாமனைவருமே நல்ல விளைவுகள் வரவேண்டுமென நினைத்து, நல்லதையே செய்கிறோம். நம்பிக்கையூட்டும் விதமாகச் செயல்படுவது நல்லதையே செய்வதற்கு ஒரு உந்து சக்தியாகவே அமைகிறது, ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் இதற்கு விதி விலக்கல்ல. இந்த வழிமுறை ஆட்டிஸக் குழந்தைகளை […]
எங்கெங்கும் ஏரி…
நியூயார்க்கிற்கு வானுயர்ந்த கட்டிடங்கள், ஃப்ளோரிடாவிற்குக் கேளிக்கைப் பூங்காக்கள், கொலரடோவிற்கு மலைத்தொடர்கள், வேகாஸிற்குச் சூதாட்ட விடுதிகள் என்பது போல மினசோட்டாவிற்குப் பெருமை சேர்ப்பது ஏரிகள். பாருங்கள், எவ்வளவு ரம்மியமான அழகு சேர்க்கும் பெருமை!! ஒன்றல்ல, இரண்டல்ல பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏரிகள் கொண்ட மாநிலம், மினசோட்டா. இதைக் கேள்விப்பட்டு, பிறகு மினசோட்டாவிற்கு வந்த பிறகு, எங்கு பார்த்தாலும் நீர் நிலைகள் இருக்க, எனக்குத் தோன்றியது – “இது அனைத்தையும் கூட்டி தான் பத்தாயிரமோ?”. நாங்கள் இருந்த அபார்ட்மெண்டில் கூட, ஒரு […]
வஞ்சனை செய்வோரே …! பைபிள் கதைகள்
திருவிவிலியத்தின் (பைபிள்) பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள நிகழ்வைப் பார்ப்போம். ஆதிகாலத்தில் பாபிலோனில் யோவாக்கிம் என்னும் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சூசன்னா என்ற பெண்ணை மணந்தார். அவர் ஒரு பேரழகி. அதோடு கடவுளுக்கு அஞ்சி நடப்பவர். சூசன்னாவின் பெற்றோர்களும் நேர்மையானவர்கள். சூசன்னாவின் கணவர் யோவாக்கிம் பெரும் செல்வந்தர். அவரது வீட்டுக்கு அருகிலேயே அவருக்கு ஒரு தோட்டம் இருந்தது. யூதர்கள் அவரிடம் வருவது வழக்கம்; ஏனெனில் மற்ற எல்லாரையும்விட அவர் மிகவும் மதிக்கப் பெற்றார். அக்காலத்தில் யூதர்கள் மத்தியில் […]
கவிதைக் கண்கள் !
உன் பார்வைகள்
என் மீது
பட்டுத் திரும்பியபோது
என் உடம்பில்
புது இரத்தமே பாய்ந்தது !
என் இதயம்
எல்லாம்
கவிதைகள் நிரம்பின !
ஏண்டியம்மா எங்க போற?
வயக்காட்டில உழைச்சுக் களைச்ச
மாமன் மனசை விரசாப் போயி
முந்தானையில் அள்ளி முடிய
முந்திட்டுப் போறியோ….
ஏக்கங்களை நெஞ்சில் வச்சு
எட்டி நின்னு பார்த்த பொண்ணு
மாமன் கையில் தாலி வாங்க
துள்ளிக் குதிச்சு போறியோ…
The Lost Anklet
Human brain has unimaginable amount of potential and we, as a society, have only scratched the surface when it comes to understanding the fullest potential of it let alone be utilizing it. Experts classify human brain into two major sections; the rear lobe and the frontal lobe. Without getting into too much technicalities, if we […]
இந்திய சுதந்திர தின விழா 2016 – மினசோட்டா
இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியா அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த 20ம் தேதி நடத்தினர். லேசான மழை தூவிக் கொண்டேயிருந்த போதிலும், விழா மைதானத்தில் பல வகையான இந்திய உணவகங்கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள், குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டுப் பகுதிகள், மெஹந்தி கூடங்கள் என நிரம்பி வழிந்தது. இவை தவிர மினசோட்டாவிலுள்ள இந்தியச் சங்கங்களின் கூடங்களும் இடம்பெற்றிருந்தன. சுமார் […]







