admin
admin's Latest Posts
ஆட்டிஸம் – பகுதி 9
(பகுதி 8) ஆட்டிஸத்துடன் புழங்கும் சமூகத்திற்கு, நம்பிக்கையூட்டும் விதமாக, நேர்மறையான எண்ணங்களுடன் எதையும் அணுகுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இது அனைத்து மனித சமூகத்திற்கும் தேவையான ஒன்று என்றாலும், பாதிப்புள்ளானவர்களுக்கு மிகவும் தேவையான, உதவிகரமான ஒரு பண்பு. பொதுவாக, நாமனைவருமே நல்ல விளைவுகள் வரவேண்டுமென நினைத்து, நல்லதையே செய்கிறோம். நம்பிக்கையூட்டும் விதமாகச் செயல்படுவது நல்லதையே செய்வதற்கு ஒரு உந்து சக்தியாகவே அமைகிறது, ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் இதற்கு விதி விலக்கல்ல. இந்த வழிமுறை ஆட்டிஸக் குழந்தைகளை […]
தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம் ! சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகளைக் குறித்துத் தலையங்கம் தீட்டலாம் என்பது திட்டம். ஒன்று, தமிழ்த் திரையுலகில் பிரபலமான பாடலாசிரியரான நா. முத்துக்குமாரின் அகால மரணம். இசையால் முழுவதுமாக ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு, கிட்டத்தட்ட வரிகளே, கவிதைகளே தேவையில்லை என்ற நிலையை அடைந்து விட்டத் தமிழ் திரையிசையுலகில், சமீபக் காலத்தில் தரமான, சுவையான கவிதைகளைத் தந்த மிகச் சிலரில் அவரும் ஒருவர். கருத்துக்கள் செரிந்த பாடல்களாயினும் சரி, காதல் ரசம் சொட்டும் மெல்லிசையாயினும் சரி, சமீபக் காலங்களில் […]
கற்கை நன்றே !!
பொட்டல் காடெல்லாம் புழுதியாப் பறக்குது
நட்டநடு வீட்டடுப்பில் நாய்பூனை தூங்குது
கட்டடம் கழனியெல்லாம் கனவுபோல மறையுது
பட்டமரம் போலவெங்கும் பஞ்சமாத் தெரியுது…..
மாற்றம்
டாம் என்கிற தமிழரசன் முகத்தில் ஒரு பரபரப்புத் தெரிந்தது. மினியாபோலிஸ் இருந்து லாஸ் வேகாஸ் புறப்படத் தயார் ஆகி கொண்டிருந்தான். அதுவும் இல்லாமல் அவனுடைய நெருங்கிய நண்பனுடைய வருகைக்காகவும் காத்துக் கொண்டிருந்தான். நண்பன் ரஞ்சித் தொலைபேசியில் எவ்வளவு கேட்டும் டாம் பதில் சொல்ல மறுத்தான். “நேரில் வா பேசிக்கொள்ளலாம். இரண்டு நாளைக்கு வேண்டிய துணிமணி எடுத்துக்கொண்டு வா” என்றான். ரஞ்சித் தனது மனைவியை இழந்து ஒரு வருடம் தான் ஆகிறது. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. திடிரென “வா […]
அறுந்த ஆனந்த யாழ் – நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி
கடவுளுடன் சீட்டாடுவது கொஞ்சம் கடினமானது எவ்வளவு கவனமாக இருந்தாலும் பார்க்காமலே அறிந்து கொள்கிறார் 2000 ஆம் ஆண்டில் டீன்-ஏஜைக் கடந்தவர்களுக்கு, தங்களுக்கான இளமை, காதல், சோகம், பாசம் போன்ற உணர்வுகளைப் பாடல்களாக வார்த்தெடுத்துக் கொடுத்தவர், கவிஞர் நா. முத்துக்குமார். அதனாலேயே, நா. முத்துக்குமார் மறைந்த செய்தியை ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று கேட்டபோது, அது இத்தலைமுறையினருக்குப் பெரும் இழப்பைக் கொடுப்பதாக இருந்தது. 1975இல் காஞ்சிபுரத்தில் பிறந்த நா.முத்துக்குமார், இளம் வயதிலேயே தனது தாயாரை இழந்தார். அந்தச் சோகம் […]
இந்திய சுதந்திர தின விழா 2016 – மினசோட்டா
இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியா அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த 20ம் தேதி நடத்தினர். லேசான மழை தூவிக் கொண்டேயிருந்த போதிலும், விழா மைதானத்தில் பல வகையான இந்திய உணவகங்கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள், குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டுப் பகுதிகள், மெஹந்தி கூடங்கள் என நிரம்பி வழிந்தது. இவை தவிர மினசோட்டாவிலுள்ள இந்தியச் சங்கங்களின் கூடங்களும் இடம்பெற்றிருந்தன. சுமார் […]
The Lost Anklet
Human brain has unimaginable amount of potential and we, as a society, have only scratched the surface when it comes to understanding the fullest potential of it let alone be utilizing it. Experts classify human brain into two major sections; the rear lobe and the frontal lobe. Without getting into too much technicalities, if we […]
ஆடிக் கிருத்திகை 2016
ஆடி மாதக் கிருத்திகை நாளன்று தமிழ்க் கடவுள் முருகனுக்கு விழா எடுப்பது தொன்று தொட்டு நடந்து வரும் வழக்கம். உலகெங்கிலுமுள்ள முருக பக்தர்கள் ஆடிக் கிருத்திகை திருவிழாவன்று பால் குடம், காவடி எடுத்து சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு மினசோட்டாவில் இருக்கக் கூடிய ‘மேப்பிள் குரோவ்’ ஹிந்துக் கோவிலில் ஜூலை மாதம் 30ம் தேதி ஆடிக் கிருத்திகை திருவிழா கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் முருகப் பெருமானுக்கு, சிறப்பு ஆடை அலங்காரம், சிறப்பு வழிபாடு என பல சிறப்பு […]
தி லாஸ்ட் ஆங்க்லெட்
(Click here for English Version) காலப் புத்தகத்தில் பக்கங்களைப் பின்னோக்கிப் புரட்டி, ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பின்பு சென்று பார்ப்போம். 1910 ஆம் வருடம். நெட்ஃப்ளிக்ஸ் இல்லா காலம். சினிமா என்றொரு பதமே, அப்பொழுது தான் உருவாகி இருந்தது. அனைத்துலக மக்களின் பொது மொழியான மௌன மொழியில் படங்கள் உருவாகிக்கொண்டிருந்த நேரம். அப்போது இந்தியாவின் முதல் சினிமா வெளியாகி இருக்கவில்லை. அச்சமயம், மினியாபோலிஸில் சதர்ன் தியேட்டர் திறக்கப்பட்டு, மௌனப் படங்கள் திரையிடப்பட்டுக்கொண்டு இருந்தது. இன்னும் பல […]
பேஸுபான் – பாலிவுட் டான்ஸ்
மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவலில் பாலிவுட் டான்ஸ் குழுவின் பேஸுபான் (Bezubaan) என்னும் நடன நாடகக் காட்சியைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. Bezubaan என்றால் குரலற்றவன். இந்தத் தலைப்பைக் கேட்டால், ஏதோ ஒரு சீரியஸான ஃபீல் கிடைக்கிறதல்லவா? ஆனால், இது ஒரு வண்ணமயமான, ஆடல், பாடல், ஜாலி, ஃபீல் குட் நாடகம். ஒரு சீரியஸான மையக் கருத்துடன். பாலிவுட் டான்ஸ் சீன் – மினசோட்டாவின் ஃபேமஸ் இந்திய நடனக்குழு. நடனம் தான் இந்தியத் தன்மை கொண்டது. மற்றபடி, அனைத்து […]







