admin
admin's Latest Posts
ரமலான்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நாம் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. அவை 1.ஈமான் கொள்வது (அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. முகமது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள்) ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றுவது. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது. ஸகாத் வழங்குவது. இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது. பன்னிரெண்டு முஸ்லிம் மாதங்களில் ரமலான் மாதத்திற்குப் பல சிறப்புகள் உள்ளது. இந்த மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன்முஸ்லிகளுக்குக் […]
செங்கை ஆழியான்
1941 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஒரு சராசரிக் குடும்பத்தில் கந்தையா, அன்னபூரணி தம்பதிகளுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்து “குணராசா” என்ற பெயர் சூடப்பட்ட இவர் கல்வியிலும் இலக்கியத்திலும் பல்வேறு அரச பணிகளிலும் செய்த பல சாதனைகளைக் கணக்கிடுவது கடினம். பலருக்கு கதாசிரியராக, அரச அதிகாரியாக, நாவலாசிரியராக, இன்னும் பல வடிவங்களில் தெரிந்த குணராசா, எழுதிச் சிவந்த கைகளுக்குச் சொந்தக்காரனாதலால் தனக்குத் தானே “ செங்கை ஆழியான்” எனப் புனை பெயரைச் சூட்டிக்கொண்டு எண்ணிலடங்காத பல இலக்கியங்களைப் படைத்தார். […]
எது பெண்மை ?
ஒரு மாதிரி சமையல் வேலையை முடித்தாள் தேவி. சமையல் அறையின் மேஜையை அழுத்தி மறுமுறை அழுத்தி துடைத்து விட்டு கையை உதறி அதை குப்பையில் எறிந்தாள். “ஹ்ம்ம்” என்ற ஒரு பெருமூச்சு அவளை அறியாமல் வந்தது. இன்னும் அரை மணி நேரம் இருக்கு கிளம்ப, அப்புறம் மீது குட்டியை கூப்பிட்டுக்கிட்டு வரணும். சுவற்றில் இருந்த அந்த குட்டி மீதுவின் புகைப்படத்தைப் பார்த்தபொழுது ஒரு உற்சாகம் பொங்கியது. அந்த குட்டி வாண்டின் சேட்டைகளும்,விளையாட்டும் எப்பொழுதும் மகிழ்வு தான். இன்று […]
தீபன் – துரத்தும் துயரம்
சென்ற வருடம், கேன்ஸ் மற்றும் பிற திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளைப் பெற்ற ஃபிரெஞ்ச் திரைப்படமான “தீபன்“, மினியாபோலிஸ் அப்டவுன் தியேட்டரில் ஜுன் மாத நடு வாரத்தில் திரையிடப்பட்டது. ஃபிரான்சில் வசிக்கும் பிரபல இலங்கைத் தமிழ் எழுத்தாளரான ஷோபா ஷக்தி, இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்கம் – ஃபிரெஞ்ச் இயக்குனர் அவ்தியாத். — நான் தூத்துக்குடியில் இருந்த பொழுது, சிறு வயதில் அடிக்கடி இரு சாதிகளுக்கிடையே நடைபெறும் சாதி கலவரங்களைக் காணும் பொழுது, இது […]
தமிழிசை இது நம் மக்களிசை
ஒரு சனிக்கிழமை இரவு தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். செய்வதறியாது படுக்கையிலிருந்து வெளி நடப்புச் செய்த எனக்குக் கிடைத்த அரிய காட்சியது. மதிமங்கிய பொழுதினிலும் மூன்று குமரிகள் ஒய்யாரமாக உலவிக் கொண்டிருந்தார்கள். அரைமயக்கத்தில் இருந்த எனக்கு முன்னவளும் பின்னவளும் அன்று பெரிதாக ஈர்க்கவில்லை. ஆயினும் இடையவளின் வனப்பும் மென்மையும் என்னைச் சற்று ஈர்க்கவே செய்தது. அணைத்துக் கொள்ளும் ஆசையினால் அருகினில் சென்றேன், பெயரைக் கேட்டேன், இசை என்றாள், ஊர் தமிழகம் என்று பேசத் தொடங்கினாள். பேசிய […]
இந்திய தரிசனம்
நான் அமெரிக்காவில் கம்பெனி மாறியவன். பெங்களுர் ஏர்போர்டில், என்னை அமெரிக்காவிற்கு அனுப்பிய, நான் பணிபுரிந்த முந்தைய நிறுவனத்தின் வரவேற்பு விளம்பரத்தைப் பார்த்த போது, “வாடா மவனே வா” என்று எனக்காகவே வைத்ததைப் போலவும், வைவதை போலவும் இருந்தது. பெங்களூர் ஏர்போர்ட்டில் வை–ஃபை தேவையென்றால், அதற்கு நாம் நமது மொபைல் நம்பரைக் கொடுத்து, அதில் அவர்கள் அனுப்பும் OTPயை எடுத்து எண்டர் செய்து, அதை அவர்கள் சரி பார்த்து, பிறகு இலவச வை–பை கொடுக்கிறார்கள். எந்த நாட்டு மொபைல் […]
உண்மையான அன்பே உலகிற்கு விளக்கு – பைபிள் கதைகள்
“உலகில் வெறுப்பது யாரக இருந்தாலும், நேசிப்பது நீங்களாக இருங்கள்”, என்றார் அன்னை தெரசா. எத்தனை யுகங்கள் கடந்து சென்றாலும் அன்பின் வடிவமாகப் போற்றப்படுவது மாசற்ற தாயன்பே என்பது மிகையல்ல. காரணம்…… வார்த்தைகளே இல்லாத வடிவம் அளவுகோலே இல்லாத அன்பு சுயநலமே இல்லாத இதயம் வெறுப்பைக் காட்டாத முகம் ……………… அதுதான் அம்மா கிறிஸ்துவ மறையின் புனித நூலாம் திருவிவிலியத்தின் (பைபிள்) பழைய எற்பாட்டில் கூறப்பட்டுள்ள ஒரு நிகழ்வில் நீதியின் தேவன் பொய்மையின் கொடூரத்தை வெளிக் கொணர்ந்து உண்மையான […]
பிள்ளைகளும் பெற்றார்களும் புத்தகம் வாசித்தல்
சின்னஞ்சிறு சிட்டுக்களாகிய எமது குழந்தைகளின் மூளைகள் துரிதமாக வளரும் உடல் அங்கமாகும். புத்தகம் வாசித்தல் பயிற்சியானது சுகாதீனமான மூளை வளர்ச்சியின் அத்திவாரம். சிறு பிள்ளைகள் மூளையின் வளர்ச்சியில் 90 சதவீதமானது தாயார் தன்னுள்ளே சுமக்கும் தறுவாயிலிருந்து 5 வயது வரை நடைபெறும். மூளையானது மற்றைய உடல் தசைகள் போன்று பயிற்சியால் வலிமையடையும் பாகம். ஆயினும் ஒரு வித்தியாசம் என்னவென்றால் அது தனது பிரதான வளர்ச்சியைப் பிள்ளையின் முதல் 60 மாதங்களிலேயே பூர்த்தி செய்து கொள்ளுகிறது. உடலின் வெளிப் […]
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 6
(அமெரிக்கத் தேர்தல் – பகுதி 5) ஒரு வழியாக ஜூன் மாதம் பதினான்காம் தேதியோடு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ப்ரைமரிகள் முடிவடைந்தன. குடியரசுக் கட்சி சார்பில், அனைத்து போட்டியாளர்களும் சில வாரங்களுக்கு முன்னர் விலகிக் கொண்டுவிட டானல்ட் ட்ரம்ப் மட்டுமே எஞ்சியிருந்தார். ஹிலரி கிளிண்டன் கடைசி நேர பலத்த போட்டிக்குப் பின்னர், பெரும்பான்மையான பிரதிநிதிகளின் ஆதரவோடு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் என்ற நிலையை எட்டியுள்ளார். தான் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதைத் தன்னந்தனியாக வந்து செய்தியாளர்கள் முன் […]
சுதந்திர தேவி
ஆரவார மில்லா அட்சன் ஆற்றில்
ஆர்பாட்டா மில்லா அலைகள் நடுவே
அகிலம் போற்றும் விடுதலைச் சின்னமாய்
அகவை மறுத்து நிற்கிறாள் அந்நங்கை.
ஆணவமிகு ஆதிக்க ஆட்சியாளர் ஒழிந்திட
ஆற்றல்மிகு ஆதவனின்கீழ் அனைவரும் சமமெனும்
ஆவணமதை ஒருகையிலும் அடிமையிருளைப் போக்கிட
ஆழிகாற்றும் அணைக்காவிளக்கை மறுகையிலும் ஏந்தியிருப்பாள்.







