admin
admin's Latest Posts
வெள்ளரிக்காய் சம்பல்
பட்டப் பகல் வெய்யிலில் உடலும் உள்ளமும் குளிர்மையடைய இனிய வெள்ளரிக் காய் இதமான இன்பம் தரும் காய்கறி. பிஞ்சு வெள்ளரிக் கொடியில் இருந்து கொய்து, கொறித்துச் சாப்பிடலாம். வெள்ளரிக்காயைப் பலவிதமாகவும் பக்குவப்படுத்தி நம்மூர் மக்களும், இவ்வூர் மக்களும் சாப்பிடலாம். இதோவொரு இலகுமுறை தேவையானவை 1 பெரிய வெள்ளரிக் காய் 1 காரட் 1 தேக்கரண்டி சிறிதாக நறுக்கிய புதினா இலைகள் ½ தேக்கரண்டி உப்பு 2 சிறிய வெங்காயம் 2 கட்டித் தயிர் (Greek Yogurt) 1 […]
கவித்துளிகள்
தன்னுள் பெண்மையை
உணர்ந்தாள் …
முதலாய் வெட்கப்பட்ட
பெண் !
தன்னுள் பெண்மையை
உணர்ந்தாள் ….
முதலாய் காதல் வயப்பட்ட
பெண் !
சாலையோர அனாதையாய் நான்
கண்டதும் காதல் கொண்டேன்!
கள் குடித்த மந்தி போல்!
இல்லான் உனை ஏற்க!
என் இல்லத்தார் எதிர்ப்புரைக்க!
உற்றோறும் பெற்றோறும் உறங்கும்
ஓர் இரவில் இல்லம் நீங்கி!
எங்கிருந்தோ வந்த நட்பு
எல்லா இடங்களிலிருந்தும் விரட்டப்பட்டு, எங்காவது சாப்பிடக் கிடைக்குமா என ஏக்கத்திலிருந்த அந்த தெரு நாய், அது படுத்திருந்த இடத்தில் மற்றொரு குட்டி நாய் படுத்திருப்பதைப் பார்த்து உர்… என உறுமி இது என் இடம் என்று எதிர்ப்பைக் காண்பித்தது. இதனைக் கண்டவுடன் அந்த இடத்தில் இருந்த நாய் வாலைப் பின் கால்களில் நுழைத்து வளைந்து குழைந்து மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. போகும்போது கூட ஓரக்கண்ணால் இது எங்காவது தன் மீது பாய்ந்து விடுமோ எனப் […]
இளையராஜா சல்யூட்ஸ் தியாகராஜா
மேப்பிள் குரோவ் ஹிந்து கோவிலில் மே 27ம் தேதி இளையராஜா சல்யூட்ஸ் தியாகராஜா என்ற தலைப்பில் சைந்தவி பிரகாஷ், நிரஞ்சன், கார்த்திக், அனுஷ், ஸ்ரீராம் ரமேஷ் மற்றும் செல்வா ஆகியோர் பங்கு கொண்ட இசை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது. இதற்கு சுபஸ்ரீ தணிகாச்சலம் தலைமை ஏற்றார். இந்த நிகழ்ச்சியை மினசோட்டாவில் கர்நாடக சங்கீதப் புகழ் திருமதி நிர்மலா ராஜசேகர் சிறப்பாகத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புகழ் பெற்ற கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை இளையராஜா எவ்வாறு அவரது […]
சலங்கை பூஜை
மினசோட்டாவில் வசிக்கும் குமாரி கிரன்மாயி அவர்களின் சலங்கை பூஜை ஹாப்கின்ஸ் கம்யூனிட்டி அரங்கில் ஜூன் 4 ம் தேதி நடைபெற்றது. 12 வயதே நிரம்பிய கிரன்மாயி மேபிள் குரோவ் பள்ளியில் ஆறாம் நிலையில் படிக்கிறார். கிரன்மாயி தனது ஐந்தாம் வயதிலிருந்து பரத நாட்டியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தாராம். ஆசிரியர் திருமதி பத்மஜா தாமிபிரகாடாவிடம் தொடங்கி, பின்பு ஆசிரியர் திருமதி சுசித்ரா சாய்ராம் அவர்களிடம் தொடர்ந்து பரத நாட்டியம் கற்றுக் கொண்டுள்ளார்.– ”கலா வந்தனம்” எனும் இந்த பரதநாட்டியப் […]
குறுக்கெழுத்துப் புதிர்
கோடை விடுமுறையைக் கழிக்க ஏதாவதொரு ஊருக்குக் குடும்பத்துடன் சென்று வரலாமெனப் பலரும் முனைந்து கொண்டிருக்கும் வேளையில், உங்களுக்கு உதவ உலக நகரங்கள் சில குறுக்கெழுத்துப் புதிராக பட்டியலிடப்பட்டுள்ளன. புதிரை விடுவித்து, உங்களது பயணத்தை முடிவு செய்யுங்களேன்!! குறிப்புகள் மேலிருந்து கீழ் 1. ஸ்கொயர் மைல் நகரம் என்றழைக்கப்படும் ஐரோப்பிய நகரம். (4) 3. மூன்றாவது ரோம் எனப்படும் நகரம்.(3) 4. ஹாலிவுட், கோலிவுட் வரிசையில் சாண்டல்வுட் திரைத்துறை நகரம்.(5) 8. சிங்கநகரம் எனப்படும் ஆசிய நகரம்.(6) 9. […]







