கட்டுரை
கோவிட் சம்மர்

ஒவ்வொரு வருடமும் சம்மர் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்த வருடம் ‘ஒரு மாதிரி’யாகப் போய்விட்டது. அமெரிக்காவில் சம்மர் வருவதற்கு முன்பு, கோவிட்-19 வந்துவிட்டது. ஜனவரி, பிப்ரவரியில் கோவிட்-19 என்றால் அது எங்கோ சீனா பக்கம், கொரியா பக்கம் நடக்கும் விஷயம் என்பது போல் அமெரிக்காவில் இருந்தார்கள். பின்பு நோய்த்தொற்றின் வீரியம் புரிந்து மெதுவாக மார்ச்சில் லாக்டவுன் என்பது போல் ஒன்றை அறிவிக்கும் போது, அமெரிக்கா கொரோனா புள்ளியியல் வரைபடத்தில் வீறுநடை போட்டு முன்னணிக்குச் சென்றுவிட்டிருந்தது. பள்ளிகளுக்கு வசந்தகால […]
அச்சமில்லை! அமுங்குதலில்லை!

பாரதி நினைவு நூற்றாண்டு தொடங்கியிருக்கும் இந்த வேளையில், என் மனக்கண்ணில் தெரியும் பாரதிக்கும் எனக்கும் நடந்த உரையாடல் இது. இன்று நம் அனைவரின் நினைவுகளிலும் பாரதி இருக்கிறான். என் நெஞ்சுக்குள்ளும் இருக்கிறான். கனல் பறக்கும் கண்களோடு, கட்டு மீசையோடு. காட்சிப் பிழையல்ல. நிஜம். முதலில் அவனுக்கு ஒரு பகீரங்க மன்னிப்புக் கடிதம்: பாரதி, பாரதத்தின் தீ நீ! தேசபக்தி வளர்த்த தென்னவன்! ஜாதி இருள் அகற்றிய ஜோதி! […]
உண்மைக்கும் அபிப்பிரயாத்திற்கும் இடையுள்ள வேறுபாடுகள்

மின்வலயத்தகவல் நொடிக்கு நொடி பாய்ந்து வரும் இந்தத் தரணியில் தகவலைப் பகுத்தறியும் ஆற்றலுக்கு சவாலும் அதிகரித்தவாறேயுள்ளது. பகிரப்படும் தகவல்களில் எது உண்மை, எது வெறும் அபிப்ராயம் / கருத்து என்று அறிந்து, அதற்கேற்ப நாம் கிரகித்துத் தொழிற்படுவது அவசியமாகின்றது. எது உண்மை, எது அப்பிப்பிராயம், எது செய்தி, எது வதந்தி என்று தெரிந்து தகவலைக் கிரகிப்பது தற்போது அத்தியாவசியமாகிறது. மின்னியல் தகவலே வாழ்வு என்று அமையும் இந்தத் தருணத்தில் வாழ்வில் ஏமாறாமல் இருக்கவும், ஊடகப் பொதுநலனை பேணவும் […]
நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பெர்க் (RBG)

இந்தியாவில் பாலின வேறுபாடுகள் தலை விரித்தாடிக் கொண்டிருந்த காலத்தில் பெண் ஆணுக்குச் சமம், சமூகத்தில் பெண்கள் ஆணுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவரில்லை என்ற புரட்சியை எழுப்பி, அஞ்சா நெஞ்சத்துடன் அதற்குத் தானே முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி. இன்றும் பெண்ணுரிமைக்கான அடையாளமாகத் திகழ்பவர்களில் முக்கிய இடம் பெறுபவர் மருத்துவர் முத்துலட்சுமி. உலகெங்கும் ஆண், பெண் இன பேதங்கள் அகற்றப்பட வேண்டுமென்ற குரல்கள் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலும் கூட ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அப்படி ஒலித்து வந்த வலுவான குரலொன்று […]
காமன் டிபி கலாச்சாரம்

கடந்த சில ஆண்டுகளாகக் காமன்டிபி (Common DP) கலாச்சாரம் என்று ஒன்று தொடங்கி வெகு விமரிசையாக நடந்து வருகிறது. டிவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகத் தளங்களில் இருக்கும் பயனர் புகைப்படத்தை (Display Picture) சுருக்கமாக டிபி (DP) என்கிறார்கள். ஏதேனும் ஒரே நிகழ்வை ஒட்டி, பெரும்பாலோர் அந்த நிகழ்வு சம்பந்தமான ஒரு புகைப்படத்தைத் தங்களது பயனர் படமாக வைத்துக்கொள்ளும்போது, அது நல்லதொரு கவனத்தைப் பெறும் என்பதால், அதற்கான புகைப்படத்தை நன்றாக வடிவமைத்து அனைவரிடமும் பகிர்ந்து, […]
கமலா ஹாரிஸ்

பொதுவாகவே அமெரிக்க அரசியலையும், அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும் பல உலக நாடுகள் கவனித்து வருவதுண்டு. அமெரிக்க அதிபர் தேர்தல் சமயங்களில் இது மேலும் பரபரப்படையும். இந்தாண்டு நடைபெறவுள்ள தேர்தல், உலக அரங்கில், குறிப்பாக ஆசிய, இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில் இந்தியர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், இத்தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் அக்கட்சி முன்னிறுத்தியிருக்கும் வேட்பாளரான கமலா ஹாரிஸ். இக்கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோசப் பைடனை காட்டிலும் கமலா ஹாரிஸின் […]
ஓர் அன்பு வேண்டுகோள்

2020 ஆண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பிரச்சினை அளிக்கும் ஆண்டாக இருக்கையில், மினசோட்டாவில் வசித்துவரும் விஜயின் குடும்பத்திற்குப் பேரிடி கொடுத்த ஆண்டாக அமைந்துவிட்டது. சென்னையைச் சேர்ந்த 35 வயதான விஜய் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்குப் பலரையும் போல கணினி வேலை நிமித்தம், அவருடைய குடும்பத்துடன் வந்தார். அவருடன் அவருடைய மனைவியும், ஐந்து வயதான மகனும் மினியாபொலிஸ் நகரத்தில் வசித்து வருகின்றனர். நான்கு மாதங்களுக்கு முன்பு, அவருக்கு உணவுக் குழாயில் கேன்சர் நோய் இருப்பது கண்டறியப்பட்டு, யூனிவர்சிட்டி ஆஃப் […]
கல்லூரிச் செலவிற்குத் தயாரா?

அமெரிக்காவில் அரசு மக்களிடம் இருந்து வசூலிக்கும் வரிப்பணம் மூலம் பள்ளிக்கல்வி இலவசமாக மக்களுக்கு அளிக்கப்படுகிறது. மத்திய அரசு வரிப்பணத்தில் 8% கல்விக்காகச் செலவிட, மீதி செலவை மாநில அரசின் வரிப்பணத்தில் இருந்து எடுத்துக்கொள்கிறார்கள். கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் இருந்தாலும், அதில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவே. பள்ளிக்கல்வி இலவசமாக அளிக்கப்படும் அமெரிக்காவில் கல்லூரி கல்விக்கான கட்டணம் மிக அதிகம். அதையும் இலவசமாக அளிக்கலாமே என்று கேட்டால், அதற்கேற்ப மக்களால் வரி அதிகமாகக் கட்ட முடியுமா […]
மாஸ்க் மகோன்னதங்கள்

ஒரு கடைக்குள் நுழைந்தோமானால், நாம் காணும் அனைவரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். முகத்தில் கண்கள் மட்டும் தெரிகிறது. அதிலும் சந்தேகப் பார்வை. இல்லை, அப்படியும் சொல்ல முடியாது. என்ன நினைக்கிறார்கள், நம்மைப் பார்த்துச் சிரிக்கிறார்களா, முறைக்கிறார்களா என ஒன்றும் புரியவில்லை. சினேகமாக எப்போதும் போல் மற்றவர்களைக் காணும் போது புன்னகைக்கிறோம். நாம் புன்னகைப்பது அவர்களுக்குத் தெரியாது என்று புரிந்தும் சிரித்து வைக்கிறோம். அந்த நட்பான புன்னகை நமது மாஸ்கினுள் அடக்கமாகி விடுகிறது. கர்ம சிரத்தையாக, பெரும்பாலோர் மாஸ்க்குடன் […]
அமெரிக்கப் பொருளாதாரமும் கொரோனாக் கொடுவினையும்

கடந்த ஒரு தசாப்தத்திற்கு பொருளாதார வளர்வில் உச்சத்தில் அமெரிக்கா இருந்தது, 2018 கடைசி காலம் வரை. அமெரிக்காவின் பாரிய வருமானவரிக் குறைப்பினாலும், அரசின் செலவழிப்பினாலும் உள்ளூர் மற்றும் உலகச் சந்தைகளும் பயனடைந்தன. அன்று அமெரிக்கப் பொருளாதாரமே உலகின் பொருளாதாரத்தை உயர்த்த வரையறை செய்தது, இன்று அதே பொருளாதாரம் கொரோனாக் கொடுவினைகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பிழைகளைச் செய்து இன்று உலகப் பொருளாதாரத்தை உருக்குலைக்கும் அபாயத்திற்கும் வந்துள்ளது. இன்று பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து படிப்படியாக வெளி வந்த நாடுகள் பலவும் […]