இலக்கியம்
நன்றி நவிலலும், நுகர்வோர் கூத்தும் (Thanks Giving)
நவம்பர் மாதம் வந்து விட்டால், தேங்க்ஸ் கிவிங்கிற்கு (Thanksgiving) என்ன செய்யலாம் என்று அமெரிக்கர்கள் யோசிப்பார்களோ, இல்லையோ, என்ன வாங்கலாம் என்று அமெரிக்காவில் இந்தியர்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு பொருள் தேவையோ, இல்லையோ, டிஸ்கவுண்ட் என்ற சொல் மீது அலாதி ப்ரியம் நம்மவர்களுக்கு. டிஸ்கவுண்ட் என்று வந்து விட்டால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்போம், டீல் இல்லையென்றால் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்பது போல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அமெரிக்கத் தேங்க்ஸ் கிவிங் வரலாறு பதினாறாம் நூற்றாண்டில் […]
ஐநூறாம் ஆயிரமாம்
ஃப்ளைட் விட்டிறங்கி ஏர்ப்போர்ட் விட்டு வெளியில் வருகையில் டாக்ஸி எடுத்துக் கொண்டு செல்லக் கூடக் கையில் சல்லிக்காசில்லை என்ற நிலை சாதாரணமாக நம் போன்ற வணிகப்பயணிகளுக்கு ஏற்படுவதில்லை… ஆனால் சமீபத்தில் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டோம்… திடீரென, அறிவிக்கப்பட்ட நான்கே மணி நேரத்திற்குள் நம் பாக்கெட்டிலிருந்த ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வெறும் காகிதங்களாக மாறி எதற்கும் பயனில்லாதவையாகிப் போயின. இந்தியப் பிரதமர் நவம்பர் 8 ஆம் தேதியன்று இரவு, சரியாக 8 மணிக்குத் தொலைக்காட்சிகளில் தோன்றி, இன்று […]
பிரக்ஸிட்டும் கேலக்ஸிட்டும் (Brexit & Calexit)
சமீப காலங்களில் பிரபலமடையத் துவங்கியுள்ள ஒரு ஒட்டுச்சொல் ‘எக்ஸிட்’. அவற்றில் ஒன்று நம் வீட்டின் கொல்லைப் புறக் கதவைத் தட்டத் துவங்கியுள்ளது. உலக அரங்கில் நடந்த பல நேர்வுகள், அமெரிக்கத் தேர்தலால் அதிக முக்கியத்துவம் பெறாமல் போயின. அவற்றில் ஒன்று ‘பிரக்ஸிட்’ . பிரக்ஸிட் (Brexit) முதலாம், இரண்டாம் உலகப் போர்களுக்குப் பின்னர் உலகம் முழுதும் பெரும் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டன. பஞ்சம், பட்டினி, நோய்கள், வறுமை எனப் பல கொடுமைகள் பூதாகாரமாக வளர்ந்து உலக நாடுகளை […]
படைத்துறை வீரர் தினம் 2016
நவம்பர் 11ம் தேதி, அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய அல்லது பணியாற்றிக் கொண்டுள்ள வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் படைத்துறை வீரர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க ஜெர்மானிய கூட்டணி போர் நிறுத்தம் அறிவித்த நேரமான 11வது மாதம், 11வது நாள் , 11மணியை 1919ம் ஆண்டு, அன்றைய அதிபர் வுட்ரோவ் வில்சன் வீரர்கள் தினம் என்ற விடுமுறை தினமாக அறிவித்தார். பின்னர் இது 1954 ம் ஆண்டு இது படைத்துறை வீரர் தினமாக அறிவிக்கப்பட்டது. மினசோட்டா மாநிலத்தில் 2016ம் […]
தீபாவளி – ஒரு ஒளிவீசுகின்ற பயணம்
Deepavali – An illuminating journey ஸ்வரங்களின் வரிசை ஸ்வராவளி , நாமங்களின் வரிசை நாமாவளி, தீபங்களின் வரிசை தீபாவளி. தீப ஒளி இருளை விளக்கும் , வரிசையாக அடுக்கி வைத்த தீபங்கள் மகிழ்வும், நிறைவும் தரும். ராமர் காட்டிலிருந்து திரும்பி வந்த நிகழ்வு என ஒரு சாராரும் , நரகாசுரனை கிருஷ்ணர் வதைத்த தினம் என ஒரு சாராரும், மஹாவீரர் வீடு பேறு பெற்ற நாள் என ஒரு சாராரும் , குரு கோவிந்தர் தன்னை […]
டொனல்ட் ஜான் டிரம்ப் 45வது அமெரிக்க அதிபர்
அமெரிக்காவின் 45வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் டொனல்ட் ஜான் டிரம்ப் பனிப்பூக்கள் குழுவின் சார்பில் அவருக்கு எமது உளங்கனிந்த வாழ்த்துகளைச் சமர்பிக்கின்றோம். இரண்டாண்டுகளுக்கு முன்னரே முழு நேர அரசியலில் நுழைந்த அவர், பலவித ஹேஷ்யங்களைப் பொய்யாக்கி, விரைவில் அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார். பல பரபரப்புகளுக்குப் பின்னர் அதிபர் தேர்தலில் வென்றது அவரது முதல் வெற்றிப் படியென்றே சொல்ல வேண்டும். வர்த்தகம், தொழில் நுட்பம், கல்வி, மருத்துவம், வாழ்க்கை முறை, விஞ்ஞானம், விளையாட்டு என இன்னும் ஏராளமான துறைகளில் […]
கணனிக் கணிப்புக்குக் கொத்தடிமையாலாகாது
இன்று கணனித் துறையில் கற்சிலைக்கும் கற்பூர வாசனையறியாத கழுதைக்கும் கதர் வேட்டி கட்டியது போல ஏந்திரக் கற்றல் (அனுமானிப்புக் கற்றல்) Machine Learning எனப்படும் பல்லாண்டு கால அனுமானிப்பு புதிய பொலிவைப் பெற்றுள்ளது. சேவை வர்த்தகத்தில் புதிய மென்பொருள் உருவாக்குதலிலும், புதிய வர்த்தக, சூழல் புதிர்களை புதிய – புதிய அறிவியல் சிந்தனைகள், கண்டுபிடிப்புக்கள் மூலம் தீர்க்காமல் வழித் தேங்காயை எடுத்து தெருச்சாமிக்கு அடிக்கும் பலரையே வர்த்தகக் கணனித் துறையில் காணக்கூடியக் கூடியதாகவுள்ளது. ஆடம்பர உடை உடுத்தலில் […]
காகிதக் கப்பல்கள் !
குடிசையில் வாழ்ந்தாலும்
மழை வெள்ளம் வந்துவிட்டால்
குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்
காகிதங்களைக் கிழித்து மடித்து
கத்திக்கப்பல், சாதாக் கப்பல்
காகிதக் கப்பல்கள் உருவாக்கி
மழை நீரில் மிதக்க விட்டு
மகிழ்ச்சி பொங்க ரசிப்பார்கள் !
காணாத அழகு
அவளின் உதட்டுச் சிவப்பைக் கண்டிருந்தால்
இளங்கோ சிலப்பதிகாரம் எழுதாமல்
சிவப்பதிகாரம் எழுதியிருப்பாரோ ?
அவளின் குரலைக் கேட்டிருந்தால்
வள்ளுவன் குறளை எழுத மறந்து
குரலை ஆராய்ந்து எழுதியிருப்பாரோ?
மினசோட்டாவில் கார் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்குவது எப்படி?
பொறுப்புத் துறப்பு – இது தனிப்பட்ட, சொந்த அனுபவம் சார்ந்து எழுதபட்டது. ஆளாளுக்கு வேறுபடலாம். ஓட்டுனர் உரிமம் வாங்க, கார் ஓட்ட தெரிந்தால் மட்டும் போதாது. அது ஓரளவுக்குச் சுலபம். வாகனத்துறை தேர்வாளரைத் திருப்திபடுத்துமளவுக்கு, கார் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். அது தான் சிரமம். தேர்வாளர் மனதிற்குள் வைத்திருக்கும் அளவுகோல்கள் ஊருக்கு ஊர் மாறுபடும். ஆளாளுக்கு மாறுபடும். அது புரிபட்டு விட்டால், உங்களுக்கான லைசன்ஸ் தயார். மேலோட்டமாகச் சொல்லுவது என்றால், கார் லைசன்ஸ் என்னும் மாயக் கிளியை […]






