\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

ஆட்டிஸ அன்புத் தம்பியுடனான அன்றாட வாழ்க்கை

Filed in இலக்கியம், கட்டுரை by on October 31, 2016 0 Comments
ஆட்டிஸ அன்புத் தம்பியுடனான அன்றாட வாழ்க்கை

பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட என் தம்பி சஞ்சித் எனக்குக் கிடைத்ததை ஆசிர்வதிக்கப்பட்டதாகவே கருதுகிறேன். இந்தப் பத்து வருட காலத்தில், பல ஏற்றத்தாழ்வுகள் வாழ்க்கையிலே, ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் இது போன்ற ஒரு தம்பி கிடைத்தது தவறு என்று எண்ணியதில்லை, இனிமேலும் எண்ணப்போவதில்லை என்பது உறுதி. அன்பான, அறிவான, பாசம் மிகுந்த அற்புதக் குழந்தை என் தம்பி, வாழ்க்கையில் ஒரு நாள் மிகவும் உயர்ந்த நிலைக்கு வருவான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. […]

Continue Reading »

காதல் பிசாசே ..

Filed in இலக்கியம், கதை by on October 31, 2016 0 Comments
காதல் பிசாசே ..

ஒன்பது மணிக்கே வெயில் சுட்டெரித்தது. பரங்கிமலை ரயில் நிலையத்தில் வெயிலைப் பொருட்படுத்தாது  கூட்டம் நிரம்பி வழிந்தது. நீலப் புடவை கட்டிய பெண் ஒருத்தி ‘பரக் .. பரக்’ என்று இரண்டு கைகளிலும் தென்னந் தொடப்பத்தைப் பிடித்து பெருக்கிக் கொண்டிருந்தார். யாரோ சாப்பிட்டுவிட்டுப் போட்ட கொய்யாப் பழத்தின் ஒரு பாதி உருண்டோடியது. எங்கிருந்தோ விர்ரென்று பறந்து வந்த காகம் அரை செகண்ட் அமர்ந்து, தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்து, கா கா என்று கரைந்து பழத்தைக் கொத்திக் கொண்டு […]

Continue Reading »

கவித்துளிகள்

கவித்துளிகள்

இயற்கையின் சாரல் வறட்சியின் வெற்றி மழைத்துளி மண்ணைத் தொடும் வரை… வந்தபின் வறட்சியின் சுவடு மறைந்தே போய்விடும்…. மண்ணின் வாசமும் மழையின் சாரலும் மகிழ்ச்சியில் மனம் இலேசாகி நம் நாசித் துவாரங்களை ஊடுருவும் ….!! தளிர்கள் செழித்து செடியாகி செடி நுனியில் வண்ணமிகு மொட்டுக்கள் நாணி மலர்ந்து தலை துவட்டும் …..!! மொட்டுக்கள் நனைந்திடக் கூடாதென இலைகள் கேடயக் குடைகளாகும் காற்றின் சலசலப்பில் இலைக் குடைக்குள் மறைந்தபடி கண்ணாமூச்சி விளையாடும் மழைத்துளிகளோடு…..!! மனம் கமழ் பூமணங்கள் காற்றில் […]

Continue Reading »

க்ளோத்திங் ஆப்ஷனல்

க்ளோத்திங் ஆப்ஷனல்

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்….. என்று அசுர தொனியில் அலாரம் அடித்துக் கொண்டிருந்தது…. எதிர்பாராத நேரத்தில், தலையில் பெரிதாக ஏதோ விழுந்தது போல துள்ளிக் குதித்து எழுந்தாள் ஷாலினி. எழுந்து இருட்டில் சுற்று முற்றும் பார்த்தாள். இருட்டு கண்களுக்குப் பழகும் வரையில் ஒன்றும் புரியவில்லை. படுக்கைக்குப் பக்கத்திலிருக்கும் நைட் ஸ்டாண்டில் உள்ள அலாரம் க்ளாக் ஆறு மணி பதினைந்து நிமிடம் என்று நீல நிற நியான் ஒளியில் கண்களைக் கூசிக் கொண்டு, கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது…. இப்பதான் படுத்த […]

Continue Reading »

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 9

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 9

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 9 கடந்த சில வாரங்களாக, ஏணிகளும், பாம்புகளும் கொண்ட பரமபத விளையாட்டைப் போன்று அமைந்திருந்தது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களின்  நிலை. இந்தக் கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதியில், ஜனநாயகக் கட்சியின் ஹிலரி கிளிண்டன் கணிசமான வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாகவும், இந்நிலை எப்போது வேண்டுமானாலும் மாறக் கூடும் என்றும் முடித்திருந்தோம். செப்டம்பர் மாத மத்தியில் நிலைமை மாறி, டானல்ட் ட்ரம்ப் வெகுவாக முன்னேறி, இரண்டு புள்ளிகள் வித்தியாசத்திலேயே பின்தங்கியிருந்தார். பின்னர் நடந்தேறிய […]

Continue Reading »

மினசோட்டாவின் பாப் டிலனிற்கு Bob Dylan நோபல் இலக்கிய விருது

மினசோட்டாவின் பாப் டிலனிற்கு Bob Dylan நோபல் இலக்கிய விருது

மினசோட்டாவின் பாப் டிலனிற்கு நோபல் இலக்கிய விருது மினசோட்டா மாநிலத்தின் மைந்தரான ஆங்கில இசைக் கவி திரு. பாப் டிலன் அவர்கட்கு, சுவீடிஷ் அக்காடமி, 2016ம் ஆண்டு அகில உலகப் புகழ் வாய்ந்த நோபல் இலக்கிய விருதினை அக்டோபர் மாதம் 13ம் திகதி 2016 வழங்கியுள்ளது. பாப் டிலனிற்கு வயது 75. நோபல் இலக்கிய விருதினை வாங்கிய இரண்டாவது இசைக் கவிஞர் இவரே. இதன் முன்னர் 1993ம் ஆண்டு  இலக்கியப் பரிசினைப் பெற்றவர் திரு ரோனி மோரிசன். […]

Continue Reading »

தரவுத் திருட்டுகள்

தரவுத் திருட்டுகள்

பழங்காலங்களில் ஒரு பொருளுக்கு ஈடாக இன்னொரு பொருளைப் பரிமாறிக் கொள்ளும் ‘பண்டம் மாற்றும்’ முறை வழக்கத்தில் இருந்தது. தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் தேவையான அனைத்தையும் தானே தயாரிக்க முடியாமல் போன பொழுது, மனிதனுக்கு அடுத்தவரிடமிருந்து பொருளை வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போது தான் தயாரிக்கக் கூடிய அல்லது தனக்குக் கிடைக்கக் கூடிய பொருளை அடுத்தவரிடம் கொடுத்து, அவரிடமிருந்து தனக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டான். பிற்காலங்களில் பரிமாறப்படும் பொருட்களின் தேவை மற்றும் உற்பத்தி இப்பரிமாற்ற முறைக்கு ஒரு […]

Continue Reading »

பெருகும் காதல் பூட்டு கலாச்சாரம்

பெருகும் காதல் பூட்டு கலாச்சாரம்

பெங்களூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, நண்பரொருவர் ஒரு திங்கள் கிழமையின் மதிய உணவுவேளையில் சொன்ன விஷயம் இது. வாரயிறுதியில் ஓசூரில் இருக்கும் கோவிலுக்குச் சென்றிருக்கிறார். நல்ல கூட்டம். நீள வரிசை. பொறுமையாக நகர்ந்து கொண்டிருந்தது, பக்தர் குழுக்கள். ஒரு பெரிய கதவைக் கடக்கும் போது, நமது நண்பர் அந்தக் கதவில் மாட்டியிருந்த ஒரு உலோக வளையத்தைத் தட்டியவாறு சென்றிருக்கிறார். அதைப் பார்த்த அவரது மனைவியும் அதை ஒரு தட்டுத் தட்ட, பின் தொடர்ந்த நண்பர் குடும்பமும் அந்தச் […]

Continue Reading »

மனிதரோடு மனிதர் பேசும் வழக்கம் இனி உண்டோ?

Filed in இலக்கியம், கதை by on October 3, 2016 6 Comments
மனிதரோடு மனிதர் பேசும் வழக்கம் இனி உண்டோ?

தொலைபேசி அழைக்கும் சத்தம் கேட்டது. கையை மடக்கி fit bit ஐ அழுத்தி அழைப்பது வாசு எனக் கண்டு கொண்டாள் . கடிகாரம் மணி 6 எனக் காட்டியது. அங்கே இப்போ மணி 5 தானே. தூக்கம் வரலையா? வியந்தபடி அழைப்பை இணைத்தாள் . “குட் மார்னிங் வாசு என்ன நம்ம ஊருTime zone லேயே இருக்கீங்களா?”. “ஆமாம் . சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு கிளம்பணும். பிரணவ் என்ன பண்ணறான் ?” “அவன் தூங்கறான். ஒரு அரைமணி […]

Continue Reading »

நவராத்திரி

நவராத்திரி

பாட்டி கொடுத்த முப்பெரும் தேவி செட், போன முறை திருச்சி போனபோது  வாங்கின கிருஷ்ணர் உறியடி செட், மைசூர் சாலையில் அத்தை வாங்கித்  தந்த அஷ்டலக்ஷ்மி செட். இப்படி ஒவ்வொண்ணும் பரணிலிருந்து இறங்க ,இறங்க நவராத்திரி களை கட்டத்  தொடங்கிவிட்டது.  ஒவ்வொரு முறையும் காலிறுதித் தேர்வுக்கு இறுதியில் வரும் அந்தப் பத்து நாட்கள் நவராத்திரி விடுமுறை மறக்க முடியாத ஒன்று. ஒரு ஓரமாக டப்பாக்கள் எல்லாம் அடுக்கி, இந்த முறை வித்தியாசமான முறையில் படி செய்ய முயற்சி […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad