இலக்கியம்
ஆட்டிஸம் – பகுதி 8
(ஆட்டிஸம் – பகுதி 7) ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை உள்ள குடும்பத்திற்கு, நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் சமூகமாக ஒன்று கூடுதல் ஒரு கடினமான சோதனையாகக் கூடும். பல கேள்விகளையும், பல விதமான பார்வைகளையும் சந்திக்க வேண்டிவரும். அதுபோன்ற இடங்களுக்குக் கிளம்புவதற்கு முன்னர், குழந்தை இன்று எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்குமா, அதிகமாகச் சிரித்துக் கொண்டிருக்குமோ அல்லது அழுது கொண்டிருக்குமோ, எங்காவது மோதிக் கொண்டு காயப்பட்டுக் கொள்ளுமோ, மற்ற சக குழந்தைகளுடன் சரியாகப் பழகுமோ – இது போன்ற […]
காதல் கொண்டேனடி !
நீ காஷ்மீர் சென்றால்
இமயமலையே திரும்பிப் பார்க்கும்
நீ கன்னியாகுமரி சென்றால்
கடலும் எழுந்து பார்க்கும்
யார் இந்த ( கன்னிய)குமாரி என்று
நீ எல்லையில் நடந்தால்
தீவிரவாதமோ தவிடு பொடியாகும்
சேலையின் தகதகப்பில் கடுங்குளிரும்
தென்றலாய் வருடிடும்
செம்புலப் பெயல் நீர்…….
“கமான்.. காந்தி கேரளாலதான் பொறந்தாரு”… மூன்றாவது முறையாக அடித்துச் சொல்லும் அருணாவை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த கணேஷ் என்ன சொல்வதென்று புரியாமல் திகைப்புடன் நிற்கிறான். “இல்லம்மா, நான் தான் சொன்னேனே… வந்து…” வாக்கியத்தை முடிக்கு முன்னர் கணேஷை இடை மறித்த அருணா, “நான் மம்மிக்கிட்ட கேட்டுக் கன்ஃபர்ம் பண்ணிக்கிறேன்” என்று முறைப்புடன் அந்த இடத்தை விட்டு அகன்றாள். “ம்ம்…. இந்தப் பொண்ணையா நாம?….” என்று நினைக்கத் தொடங்கி, ”நோ நோ.. அப்டி நெனைக்கக் கூடாது” தன்னைத் தானே […]
லெக்ஸி
வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்டது. லிவிங் ரூமில் தனது விரிப்பில் படுத்திருந்த லெக்ஸி எழுந்து வாலை ஆட்டிக்கொண்டு ஓடியது. மடிக்கணினியில் எதையோ பார்த்தவாறு, ஃபோனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த பவி “வாசல்ல யாரோ வந்திருக்காங்க போலருக்கு..நான் அப்புறமா கூப்பிடட்டுமா .. ம்ம்? சரி.. நீயே கூப்பிடு” என்று சொல்லி ஃபோனைத் துண்டித்துவிட்டு எழுந்தாள். அதற்குள் கதவோரக் கண்ணாடி வழியே ஒரு சிறுமி நின்று கொண்டிருப்பதைப் பார்த்த லெக்ஸி, பவியிடம் ஓடி வந்து வேகமாக வாலை ஆட்டியவாறு, கதவைச் சீக்கிரம் […]
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 7
அடுத்தடுத்த வாரங்களில் இரண்டு பெருங்கட்சிகளின் மாநாடு நடந்து முடிந்து விட்டன. கிளீவ்லாண்ட், ஓஹையோ வில் ஜுலை 18-21 நடைபெற்ற குடியரசுக் கட்சி மாநாட்டில் அக்கட்சி சார்பில் டானல்ட் ஜான் ட்ரம்ப் அதிபராகவும், மைக்கேல் ரிச்சர்ட் பென்ஸ் துணை அதிபராகவும் முன்னிறுத்தப்பட்டுள்ளனர். பிலடெல்ஃபியா, பென்சில்வேனியாவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி மாநாட்டில் ஹிலரி ராடம் கிளிண்டன் அதிபராகவும், டிமோதி மைக்கேல் கெய்ன் துணை அதிபராகவும் அறிவிக்கப்பட்டனர். குடியரசுக் கட்சி மாநாடு பொது மக்களாலும், ஊடகத் துறையினராலும், அரசியல் நோக்கர்களாலும் பெரிதும் […]
ஆட்டிஸம் – பகுதி 7
(ஆட்டிஸம் – பகுதி 6) செய்த விஷயங்களையே திரும்பத் திரும்பச் செய்வதென்பது ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் காணப்படும் பொதுவான ஒரு பழக்கமாகும். தங்களுக்கென்று ஒரு சூழலை, கிட்டத்தட்ட ஒரு கூடு போல வகுத்துக் கொண்டு, அதனை விட்டு வெளியில் வராமல் வாழ்ந்து கொண்டிருப்பது அவர்களின் வழக்கமாகும். அந்தக் கூட்டை விட்டு வெளியே வந்தால் அவர்கள் மிகவும் அமைதியிழந்து காணப்படுவர். மன அழுத்தம் அதிகரித்து, பதட்டம் மிகுந்து துயரப்படுவர். சிகிச்சை செய்யும் முறைகளும், பள்ளிகளும் அந்தக் குழந்தைகளை வழக்கமான […]
பிள்ளைகளும் பெற்றார்களும் புத்தகம் வாசித்தல்
சின்னஞ்சிறு சிட்டுக்களாகிய எமது குழந்தைகளின் மூளைகள் துரிதமாக வளரும் உடல் அங்கமாகும். புத்தகம் வாசித்தல் பயிற்சியானது சுகாதீனமான மூளை வளர்ச்சியின் அத்திவாரம். சிறு பிள்ளைகள் மூளையின் வளர்ச்சியில் 90 சதவீதமானது தாயார் தன்னுள்ளே சுமக்கும் தறுவாயிலிருந்து 5 வயது வரை நடைபெறும். மூளையானது மற்றைய உடல் தசைகள் போன்று பயிற்சியால் வலிமையடையும் பாகம். ஆயினும் ஒரு வித்தியாசம் என்னவென்றால் அது தனது பிரதான வளர்ச்சியைப் பிள்ளையின் முதல் 60 மாதங்களிலேயே பூர்த்தி செய்து கொள்ளுகிறது. உடலின் வெளிப் […]
இந்திய தரிசனம்
நான் அமெரிக்காவில் கம்பெனி மாறியவன். பெங்களுர் ஏர்போர்டில், என்னை அமெரிக்காவிற்கு அனுப்பிய, நான் பணிபுரிந்த முந்தைய நிறுவனத்தின் வரவேற்பு விளம்பரத்தைப் பார்த்த போது, “வாடா மவனே வா” என்று எனக்காகவே வைத்ததைப் போலவும், வைவதை போலவும் இருந்தது. பெங்களூர் ஏர்போர்ட்டில் வை–ஃபை தேவையென்றால், அதற்கு நாம் நமது மொபைல் நம்பரைக் கொடுத்து, அதில் அவர்கள் அனுப்பும் OTPயை எடுத்து எண்டர் செய்து, அதை அவர்கள் சரி பார்த்து, பிறகு இலவச வை–பை கொடுக்கிறார்கள். எந்த நாட்டு மொபைல் […]
எது பெண்மை ?
ஒரு மாதிரி சமையல் வேலையை முடித்தாள் தேவி. சமையல் அறையின் மேஜையை அழுத்தி மறுமுறை அழுத்தி துடைத்து விட்டு கையை உதறி அதை குப்பையில் எறிந்தாள். “ஹ்ம்ம்” என்ற ஒரு பெருமூச்சு அவளை அறியாமல் வந்தது. இன்னும் அரை மணி நேரம் இருக்கு கிளம்ப, அப்புறம் மீது குட்டியை கூப்பிட்டுக்கிட்டு வரணும். சுவற்றில் இருந்த அந்த குட்டி மீதுவின் புகைப்படத்தைப் பார்த்தபொழுது ஒரு உற்சாகம் பொங்கியது. அந்த குட்டி வாண்டின் சேட்டைகளும்,விளையாட்டும் எப்பொழுதும் மகிழ்வு தான். இன்று […]
செங்கை ஆழியான்
1941 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஒரு சராசரிக் குடும்பத்தில் கந்தையா, அன்னபூரணி தம்பதிகளுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்து “குணராசா” என்ற பெயர் சூடப்பட்ட இவர் கல்வியிலும் இலக்கியத்திலும் பல்வேறு அரச பணிகளிலும் செய்த பல சாதனைகளைக் கணக்கிடுவது கடினம். பலருக்கு கதாசிரியராக, அரச அதிகாரியாக, நாவலாசிரியராக, இன்னும் பல வடிவங்களில் தெரிந்த குணராசா, எழுதிச் சிவந்த கைகளுக்குச் சொந்தக்காரனாதலால் தனக்குத் தானே “ செங்கை ஆழியான்” எனப் புனை பெயரைச் சூட்டிக்கொண்டு எண்ணிலடங்காத பல இலக்கியங்களைப் படைத்தார். […]






