இலக்கியம்
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 2
(அமெரிக்க அரசியலிலும் இதெல்லாம் சாதாரணமப்பா..) சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தபடி அயோவா காகஸ் மற்றும் நியூ ஹாம்ப்ஷயர் ப்ரைமரி இரண்டும் நடந்து முடிந்துவிட்டன. அவற்றின் முடிவுகளை அறியும் முன்னர் காகஸ் மற்றும் ப்ரைமரி ஆகியவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். காகஸ் (Caucus) காகஸ் என்பது கட்சியில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் (registered members of a party) கலந்து கொண்டு அதிபர் பதவிக்குப் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களின் கொள்கைகளையும், அரசியல் பலம் மற்றும் செல்வாக்கையும் புரிந்து கொள்ளும் […]
மின்வலை இணைய நடுத்துவம் பேணல் (Net Neutrality)
மின்வலை இணைய நடுத்துவம் பேணல் Net Neutrality உங்கள் கைத்தொலைபேசியில், கணனியில் ஓடும் படம் சற்று வேகம் குறைந்து காணப்படுகிறதா? சிலசமயம் ஒட்டு மொத்தமாக இணைப்புத் துண்டிக்கப் பட்டு விட்டதா? அது பற்றி எவ்வளவு தூரம் சிந்தித்திருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா? அனேகமாக நாம் அதை பொருட்படுத்தாமல் மீழ படத்தைப் பார்க்க முனைவோம் என்பதே பொதுவான பதில். ஆயினும் நீங்கள் பார்க்கும் படம் பற்றிய தகவலைப் பின்னணியில் ஒரு கணனியில் இருந்து மற்றய கணனிக்குப் பரிமாற பல […]
நிழலும் அரசியல்வாதிகளும் !
நிழல் …. காலையில் முன்னே சென்று வணங்குகிறது ! தேர்தலின்போது நம்மையெல்லாம் அரசியல்வாதிகள் வணங்குவதைப் போல. நிழல்… பிற்பகலில் நம் பின்னே தொடர்கிறது ! தேர்தல் நாளன்று நம் ஓட்டுக்காக. நம் பின்னே வரும் அரசியல்வாதி போல. நிழல் … இரவில் அது இருக்கும் இடம் தெரியாமல் மறைகிறது ! வெற்றி பெற்ற பிறகு தொகுதிப் பக்கமே வராத அரசியல்வாதி போல ! பூ. சுப்ரமணியன்,
காதலாகிக் கசிந்துருகி…..
“ மங்களம், சமையல் ஆயிடுத்தா… டைம் ஆறதுடி….” சாம்பு மாமா அவசரப்படுத்திக் கொண்டிருந்தார். ”ஆயிண்டே இருக்குன்னா.. என்னத்துக்கு இப்டி வெந்நீரக் கொட்டிண்ட மாதிரி பதற்றேள்” – இது மங்களம் மாமி. “இல்லடி, நம்ம தியேட்டர்ல முதல் மரியாதை படம் போட்ருக்காண்டி, ரெண்டாவது ஆட்டம் போலாமேனுட்டு…” ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருந்த சாம்பு மாமாவுக்கும் நாற்பதுகளின் இறுதியிலிருந்த மங்களம் மாமிக்கும் அப்படி ஒரு அன்னியோன்யம். குழந்தைகள் இல்லை, ஆனால் அது பற்றிய கவலையை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் […]
மழைப்பாட்டு
பெருநிலத்தின் பரந்த வெளியில் நிறைந்திருந்த பதமழையின் வாசம் அவனை ஏகாந்த நிலைக்கு இட்டுச் செல்கிறது உழவு மாடுகள் இழுத்துச் செல்கிற ஏர்முனை கலப்பை சலசலப்போடு நகர்ந்து வழுக்கேறிய வண்டல் மண்ணை பதப்படுத்தத் தொடங்குகிறது தென்திசை வரப்பு முனை இறுதி வெளிச்சுற்றின் போது வெறித்திருந்த மழை பொழியத் தொடங்கி வியர்வை உமிழ்ந்திருந்த அவனுடலில் இறங்குகிறது மழைக்குளிர்ச்சியில் மனம் கிளர்ச்சியுற்ற அக்கணத்தில் மழைப்பாட்டைப் பெருங்குரலெடுத்து அவன் இசைக்கத் தொடங்குகிறான் அக்குரலில் அவனது அப்பாவின் சாயலிருப்பதை இனங்கண்டு கொண்டு அசை போட்டவாறு […]
சென்ரியு கவிதைகள்
கூட்டிப் பெருக்கிக் கழித்தாலும்
தீரவில்லை போகவில்லை மன வீட்டின்
குப்பை
பட்டமரமும் துளிர்த்தது
எம் எஸ் சுப்புலட்சுமியின்
கான மழையால்
இதழ்
உன் இதழெனும் மடலில்
கவிதை தீட்டி
இளைப்பார …
என் மனம் துடிக்கிறதே!
உன் இதழோரம்
கவியாயிரம் பாட உன்
கதவோரம் நான்வர
என் மனம் எத்தனிக்கிறதே!
ஆத்ம சாந்தி
காஷ்மீர், அதற்கு இரண்டு தலை நகரங்கள். குளிர் காலத்தில் ஜம்மு மற்றும் வெயில் காலத்தில் ஸ்ரீநகர். அந்த ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியைச் சுற்றிப் பார்த்து விட்டுத் தன் அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் செல்வம். பசி வயிற்றைக் கிள்ளியது. தால் ஏரிக்கு அருகிலிருந்த கடையில் சப்பாத்தியும், பன்னீர் சாமனும் வேண்டுமென்று சொல்லி விட்டு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தான். நண்பன் சங்கரும், அவனும் குளிர்கால ஆடை ஏற்றுமதி வியாபாரம் செய்கிறார்கள். இன்று சங்கர் வியாபார விஷயமாக வேறு நண்பரைக் […]
Bollywood Dance Scene – Interview
On the evening of December 12, 2015, the Panippookkal team arrived at Tapestry Folkdance Center to chat with the Bollywood Dance Scene Twin Cities. All sorts of colors and shades came into view as the energetic team entered the dance area. I understood that it was their last class for 2015, but I wouldn’t have […]
காதலும் கடந்து போகுமோ?
பனிக்காலங்களில் போர்ச்சில் அமர்ந்து அந்த ஏரிக்கரையைப் பார்த்துக் கொண்டிருப்பது விக்கிக்கு மிகவும் பிடிக்கும். உறைந்து போய் வெண்படுகையாய் மாறிப் போன ஏரி; இலைகள் உதிர்ந்து கிளைகள் பரவிக் கிடக்கும் மரங்கள்; ஒரு பக்கமாகக் காற்று வீசியதால் அவற்றில் பாதிப் பக்கங்களில் ஒட்டியும் ஒட்டாமலும் காற்றில் ஊசலாடிக் கொண்டிருக்கும் பனித்துகள்கள்; இரவு தொடங்கப் போகிறது எனக் கட்டியங்கூறும் தூரத்து வீடுகளில் மஞ்சளாய் எரியும் விளக்குகள்; எங்கிருந்து வந்தன என்று அறியாத வண்ணம் விர்ரென்று பறந்து போகும் சிறு பறவைகள் […]






