இலக்கியம்
கண்டுபிடி மிஸ்டர் ஸ்லையை!!
ஊடக அறம் என்ற வார்த்தை பிரயோகம், சமீப காலங்களில் அடிக்கடி நம்மிடம் அடிபடுகிறது. ஊடக நிறுவனங்களின் வியாபார வெறியினால் பலமாக அது மிதிபடுவதினால் ஏற்படும் சத்தம் காரணமாக இருக்கக்கூடும். தொலைகாட்சிகள், டிஆர்பிக்காக நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களைக் கோர்த்துவிட்டு, தூண்டிவிட்டு, குழாயடிச் சண்டையை ஏற்படுத்துகிறார்கள் என்றால், பத்திரிக்கைகள் சர்குலேஷனைக் கூட்ட கருத்துக் கணிப்பு, புலனாய்வு போன்றவற்றை உட்கார்ந்த இடத்தில் இருந்தே செய்கிறார்கள். சர்குலேஷனைக் கூட்ட, பத்திரிக்கைகள் கடைபிடிக்கும் பல யுக்திகளைக் கண்டிருக்கிறோம். உற்பத்திச் செலவுக்கு கீழே பத்திரிக்கையை விற்று, வாசகர் […]
மனிதனாக இரு !
சுடர் விளக்காக இரு
அது முடியாவிடில்
பரவாயில்லை.
இரவில்
சுடர் விடும்
மின் மினிப் பூச்சிகளைக்
கொன்று குவிக்காதே !
பள்ளி செல்ல
மனமில்லையா ?
மறதிக்குப் பின் வருவதே மரணம்
படுத்த படுக்கையாகி
விட்டேன்
மௌனமாய் உணர்கிறேன்…
திரும்ப முடியாமல்
படுத்தேயிருப்பதால்
முதுகெல்லாம் புண்கள்
ஒப்புக் கொள்கிறேன்…
தமிழ்ப் புத்தாண்டு
சித்திரைத் திருமகள் சிறப்புடனே வருகிறாள்
சீராட்டிப் பாராட்டிச் செழிப்பூட்ட வருகிறாள்
சிந்தனைச் சிற்பிகளைச் சிரந்தூக்கிச் செறுக்கேற்றி
சீலமாய் வாழ்பவரைச் செழுமையுடன் வைத்திடுவாள் !!
கத்திரி வெயிலிலே கழனியில் உழைப்பவரை
காரிருள் நேரத்திலும் களத்துமேடு காப்பவரை
கனத்த மழையினிலும் கடுந்தொழில் புரிபவரை
காத்திடுக இயற்கையெனக் கைகூப்பி அழைக்கிறாள் !
ஆணவம் கொ(ல்)ள்வோம்
உள்ளங் கலந்து உறவில் நுழைந்து
உவகை கொண்ட உடுமலைக் காதலரை
ஊரார் முன்னிலையில் தண்டித்து விட்டோமே.
ஊழிக்கால விடியலைத் துவக்கி விட்டோமே !
காதல் சின்னமெனப் பளிங்குக் கல்லறையைக்
காட்சிப் பொருளாக்கி, கதைபல சேர்த்தே
பரந்த உலகின் சிறந்த அதிசயமெனப்
பறைசாற்றித் தலை கிறங்க அலைந்தோமே !
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 3
2016, மார்ச் மாதம் அதிபர் தேர்தலில் பல திருப்பங்களைத் தந்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, வளர்ந்த நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவையும் அரசியல் சலசலப்புகள் விட்டு வைக்கவில்லை. பல மாநிலங்களில் பிரைமரி மற்றும் காகஸ் நடந்து முடிந்துள்ளன. இரண்டு கட்சிகளிலும் யார் அதிபர் தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற ஊகத்துக்கு இதுவரை, எந்தத் தெளிவுமில்லாத நிலை நீடிக்கிறது. நாம் முன்னர் பார்த்தபடி ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சி சார்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரதிநிகளைக் […]
நாப்பதுக்கு மேலே…
ஆஃபீஸுக்குள் நுழையும் போதே சிண்டியின் வாசம் – அவள் போடும் பெர்ஃப்யூம் வாசம் – முகத்தில் அடித்தது. என்ன இன்னைக்கு, அதுக்குள்ள வந்துட்டாளா என்று யோசித்துக் கொண்டே தனது கியூபுக்கு நடந்தான் சபா. அவன் நினைத்தது சரிதான். தூரத்திலிருந்தே கேட்ட குழைவுச் சிரிப்பு சிண்டி வந்துவிட்டிருந்தாள் என்று சொல்லியது. தனது கியூபில் பையை வைக்கும் போது, கண் தானாக எதிரேயிருந்த சிண்டியின் கியூபுக்குப் போனது. வெண்ணையின் வழவழப்பில், பெரிதாய், விம்மிப் புடைத்து, ரோஜா நிறத்தில், அவ்வளவு ஃப்ரெஷ்ஷாய், […]
முதுமையும் மழலையே
அதிகாலை நாலரை மணி அலாரம் அடித்தது. அழுத்திவிட்டு எழுந்தான் பத்ரி. முகம் துடைத்து, கைகளைப் பார்த்தான். பக்கத்தில், நேற்று இரவு படித்த அனாடமி புத்தகம் மின்விசிறி காற்றில் படபடவென அடிக்க, மெதுவாக அதை மூடி பையில் எடுத்து வைத்தான். கண்களைத் தேய்த்துத்’ தூக்கத்தைக் கலைத்துக் கொண்டான். வாசல் கதவைத்’ திறந்து வெளி காற்றை ஒரு நீண்ட மூச்சுடன் சுவாசித்துக் கொண்டான். “பத்ரி எழுந்திட்டியா ?”, உள்ளே இருந்து பாட்டியின் குரலுக்கு, “ஹ்ம்ம். நீங்க தூங்குங்க […]
ஆட்டிஸம் – பகுதி 4
(ஆட்டிஸம் – பகுதி 3) ஆட்டிஸத்துடனே வாழ்வை நடத்திச் செல்வது என்பது நிரந்தரமாகிவிட்டது எங்களுக்கு. இந்த நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு தினசரி வாழ்வை நடத்திச் செல்வது, எங்களைச் சுற்றியுள்ள உலகுடன் ஒட்டி வாழ்வது என்பதற்காகப் பல புதிய விஷயங்களையும், பழக்க வழக்கங்களையும் கற்றறிய வேண்டிய சூழல். எங்களைப் போலவே ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுடன் பழகுவதன் மூலம் இதனைக் கற்றறிவது எளிதாகும் என்று கண்டோம். எங்கள் குழந்தையை அழைத்துக் கொண்டு செல்லும் வழக்கமான இடங்களான மருத்துவமனை, சிறப்புப் பள்ளிகள் ஆகிய […]






