இலக்கியம்
தும்பிக்கை தரும் நம்பிக்கை
வாழ்க்கையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே இந்த வரிகளைக் கேட்டால் எல்லோருக்கும் அவரவரது வாழ்க்கையில் நடக்கும் ஏற்றங்களும் இறக்கங்களும் நினைவுக்கு வரும். அதுவே இந்த வரிகளில் உள்ள உண்மைக்கு அத்தாட்சி. எந்த ஒரு காரியம் செய்யும்போதும் சில தடங்கல்கள் வரத்தான் செய்யும். அதைப் பொறுமையுடனும் மனத்தெளிவுடனும் எதிர்க்கொண்டால் தடங்கல்கள் விலகி வெற்றிக்கு வழி கொடுக்கும். பொறுமையும் மனத்தெளிவும் எளிதில் எல்லோருக்கும் கிட்டுவதில்லை. தெய்வபக்தி இதற்கு பெரிய அளவில் உதவுகிறது. எந்த ஒரு காரியம் துவங்குவதற்கு முன்னர்ப் […]
எழுமின் இளைஞர்காள் !!
ஈராயிரம் ஆண்டென்பார் ஒருவர்
ஆறாயிரம் இருக்குமென்பார் இன்னொருவர்
தோராயமாய்ச் சொன்னால் பத்தாயிரத்திற்கும்
மேலென்று பகர்வார் மூன்றாமவர்
கணக்கிட முடியாத காலமென்பதால்
கல்தோன்றி மண் தோன்றுமுன்
தோன்றிய மூத்த மொழியிதெனக்
கணக்குச் சொல்வார் மற்றொருவர் !!
குருவிச்சி ஆறு
இது எங்கள் கிராமத்தின் இதய நாடி.
மாரியிலே ஊர் மூழ்கும்போது வடிகாலாய்
கோடையிலே எம் பயிர் வாடும்போது
உயிர் ஊற்றாய்
மாரிச் சொத சொதப்பில் காலுன்ற முடியாமல்
கோடிவரை வரத் துடிக்கும்
கொடு விலங்குக் கூட்டத்தை
அகழியாய் விரிந்துநின்று
ஊர் காக்கும் காவலனாய்,
எம் ஊரின் முகமாய்.முகவரியாய்
சொர்க்கத்திலொரு திருத்தம்
லிஸி குளித்து முடித்ததும் பசிப்பது போலிருந்தது. உடலில் டவலைச் சுற்றிக் கொண்டு கீழே இறங்கி வந்து கோப்பையில் காப்பி நிரப்பிக் கொண்டு ஜன்னலுருகே இருந்த சோபாவில் அமர்ந்தாள். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. மரத்திலிருந்த இலைகளும் மழையில் குளித்து அவளைப் போலவே புத்துணர்வுடன் பளிச்சென்று இருந்தன. கீழே விழுந்திருந்த ஒரு சில உதிர்ந்த இலைகள் மழையில் நனையாமல் இருக்க இங்குமங்கும் ஓடுவது போல் காற்றடிக்கும் திசையில் உருண்டோடின. தொலைபேசி ஒலித்தது. ஆஷிஷ். “ஹை பேபி .. தூக்கத்தைக் […]
தோழன்
பரந்து வளர்ந்த அரச மரம். ஒரு குறுநில மன்னனின் முழுச்சேனையும் அதனடியில் அமர்ந்தாலும் அனைவருக்கும் நிழல் தருமளவு விஸ்தாரமாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்திருந்த அற்புத மரம். அதனடியில் கருங்கற்களைக் கொண்டு ஒரு மேடைபோல் அமைக்கப்பட்டு அதன் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட கல்லாலான விநாயகர் சிலை. விநாயகர் சிலைக்கு அடியில் செதுக்கப்பட்ட சிறிய மூஞ்சூரு மற்றும் மோதகச் சிலைகள் அத்தனையும் தத்ரூபமாக வடிவமைக்கப் பட்டிருந்தன. சிலையைச் சுற்றிக் கம்பியினாலான கூடு ஒன்று அமைக்கப்பட்டு, அதைப் பூட்டி வைத்து யாரும் விநாயகரைத் […]
கைப்பேசிக் காதல்
முந்தியெல்லாம் நான்
சிக்கனத்தில் வாழ்ந்த போது
சொப்பனத்தில் மிதந்திருந்தேன்
காசைச் சேர்த்து நல்ல
கனவானாய் வாழ எண்ணிக்
கனவில் மிதந்திருந்தேன்.
கைப்பேசி வந்த பின்னர் – என்
கனவெல்லாம் ஓடிப் போச்சு – இனி
எப்போது பணம் சேர்த்து
பந்தாவாய் நான் வாழ்வேன்?
மாவுப் பண்டம்
அன்று வேலை முடிந்து வீட்டுக்கு வரும் பொழுதே ஒரு யோசனையாக வந்தாள் கலை. வீட்டிற்கு வந்தவுடன் வீட்டின் மையப் பகுதியின் வாசலில் பாண்டி விளையாடிக் கொண்டிருந்த செல்வியை வீட்டுக்கு வருமாறு சைகை செய்தவாறு, மையப் பகுதியின் அருகில் இருந்த சிறிய குறுக்குச் சந்தில் நடந்தாள். வீட்டின் பின் புறம் ஒரு சிறு அறை போல் காணப்பட்ட, அந்த அறையின் கதவினைத் தன்னிடம் உள்ள சாவி கொண்டு திறந்தாள். அந்தச் சிறிய அறை போல இருந்த வீட்டில் உள்ளே […]
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 10
முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணாமூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் கேட்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வர, கணேஷ் அதனைப் […]
மதங்கள் கடந்து மனிதம் தொட்டக் குரல்
‘இறைவனிடம் கையேந்துங்கள்’ என்று உலகோரைத் தன் கம்பீர வெண்கலக் குரலால் சுண்டியிழுத்தவர் இறைவனடி சேர்ந்து விட்டார்! தமிழகத்தில், 1925ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25ம் நாள், ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணத்தில் முஹம்மது இஸ்மாயில், மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் நாகூர் ஹனிஃபா. இவரது இயற்பெயர் இஸ்மாயில் முஹம்மது ஹனிஃபா. தனது இயற்பெயரைச் சுருக்கி இ.எம்.ஹனிஃபா என்று வைத்துக் கொண்டார். அவரது தந்தையின் பூர்விகமான நாகூர் சேர்ந்து கொள்ள நாகூர் ஹனிஃபா என்ற பெயர் பிரபலமடையத் […]
எசப்பாட்டு – வளர்ச்சியோ வீழ்ச்சியோ?
நாடாரு கடையதிலே
நாலாறு பொருள்வாங்க
நான்நடந்து போனதினம்
நாபகமா வந்துருச்சு….
நாகரிகம் வளந்துதுன்னு
நாட்டுப் புறத்திலயும்
நாம்பாத்து நடக்கையிலே
நாலஞ்சு லைன்கடைங்க…






