இலக்கியம்
எசப்பாட்டு – உலகக் கோப்பை
உலகக் கோப்பையென உலாவரும் ஆட்டம் உழைப்பவன் படைப்பவன் அனைவரின் நாட்டம் உண்மையில் பார்க்கையில் உழன்றிடும் தேட்டம் உயர்வறுத்து பந்தயமே பெரிதாக்கும் கூட்டம் !! திறமைமிக்க அணியே தேர்ந்து வென்றிடுமென திடமாய்ச் சொல்லிடவியலா திறனற்ற அவலம் திக்கெட்டும் புகழ்மணந்த தீர்க்கமான ஆட்டமது திசைதவறிப் போனதோவெனத் திகைத்தழியும் தருணம் !!! ஆடுபவன் அனைவருமே அறிவில்லா மடையனாகும் ஆட்டத்தைக் களித்திடும் அண்டமெலாம் மூடர்களாம் ஆங்காரமாய்ச் சொல்லிட்ட அறிவாளி சரியெனவே ஆக்கியது இவர்களின் அளவற்ற பணத்தாசை !!! […]
அமெரிக்க இருதய மாதம்
நான் விசேட விரைவோட்டப் போட்டிக்காரனும் இல்லை, விளையாட்டு வீரனும் இல்லை எனக்கேன் இருதய நாடிக்கணக்கு? என்று நாம் கேட்டுக் கொள்ளலாம். இதன் காரணம் காலாகாலத்தில் வயது ஏறுதல் மற்றும் இளமுதிர்வு காலத்தை (40 – 55 வயதுகள்) அடைதல் போன்றனவாகும். இந்தக் காலகட்டத்தில் ஏற்படக்கூடிய இருதயப் பிரச்சினைகளை முடிந்த அளவு முன்கூட்டியே தெரிந்து கொள்ளுவது என்பது தான் விவரம் தெரிந்த மருத்துவ நிபுணர்கள் தரும் பதில். எமது இருதய அடிப்பு அல்லது நாடித்துடிப்பு என்பது எத்தனை தரமுடன் […]
பெண்ணின் பெருந்தக்க யாவுள
யாரோ தன் அறைக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு ,தூக்கம் கலைந்து , கண்களை மெல்லியதாய்த் திறந்தாள் காவ்யா. வார்டு பாய் வந்து பாலும் ரொட்டியும் வைத்துவிட்டுச் சென்றான். மெல்ல கட்டிலில் இருந்து எழுந்து ,தாங்கித் தாங்கி நடந்து சென்று முகம் கழுவி மீண்டும் வந்து கட்டிலில் அமர்ந்தாள் . இரவு நன்றாக மழை பெய்திருக்க வேண்டும். ஆஸ்பத்திரியின் மெல்லிய திரைச்சீலைகள் விலகி, கொஞ்சம் குளிர்ந்த காற்றைத் தந்தது. சூடான பாலைக் குடித்தபடியே திரைச் சீலைகளை ஒதுக்கியபடி […]
மாற்றமே உலக நியதி
அதிகாலை மணி நான்கு. திடீரென்று யாரோ உசுப்பியது போல எழுந்தார் சதானந்தன். ஒரு விநாடியில் முழுவதுமாக விழித்தும் விட்டார். இனம் புரியாத ஒரு சங்கடம் அவர் மனதில் உருவானது. அது என்னவென்று புரியவில்லை. சிறிது நேரம் கண் மூடி உறக்கம் செய்ய முயற்சித்தார். பலன் இல்லை. அருகில் வித்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். சிறிது நேரம் அவளைப் பார்த்தபடி அமைதியாகப் படுத்திருந்தார். உடல், மனம் இரண்டும் உறங்க மறுத்தது. இன்று அவர் வாழ்வின் முக்கியமான நாள். அவரது […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-11
(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-10) பண்பாட்டுச் சிக்கல் உலகில் வாழும் எல்லா இனங்களுக்கும் தனித்துவமான மொழி, பண்பாடு என்பன இன்றியமையாதனவாக அமையப் பெற்றிருக்கும். எதை விட்டுக் கொடுத்தாலும் தமது தனித்துவத்தின் அடையாளங்களான இவற்றை விட்டுக்கொடுக்க இலகுவில் யாரும் முன்வர மாட்டார்கள். ஆனால் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு இவை சவால் நிறைந்ததாக மாறியிருக்கின்றன. புலம்பெயர்ந்து சென்ற பலர் தாம் வாழ்கின்ற நாடுகளில் தமது பண்பாட்டைக் கட்டிக் காக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படுகின்றனர். கலாசார விழாக்களை வருடந்தோறும் […]
ஊட்டச்சத்தும் ஊகங்களும்
உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வது, நமக்கு மட்டுமல்லாது நமது பிள்ளைகளுக்குச் சரியான வழிகாட்டுதலுக்கும் உதவும் என்ற நோக்கத்தில் இந்த கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு விழிப்புணர்வு நோக்கில் எழுதப்பட்டதே தவிர பரிந்துரை அல்ல. மார்ச் மாதம் ஊட்டச்சத்தினை வலியுறுத்தும் மாதம் ( National Nutrition month). ஊட்டச்சத்து எனும் சொற்பிரயோகம், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுடன் மட்டுமே தொடர்புடையது என்று பலரும் நினைக்கிறோம். நம் அனைவருக்கும் உடல் முக்கியமானதொரு சொத்து. சுவர் இருந்தால் தான் சித்திரம் […]
லெமுரியா
லெமுரியா பற்றி ஏற்கனவே பல விடயங்களைப் பனிப்பூக்கள் இதழ்களில் பார்த்திருக்கிறோம். இந்தக் கட்டுரையில் லெமுரியா என்ற கண்டம் பற்றிய மூல வரலாற்றைப் பார்க்கலாம். சுமார் 19ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவிற்குத் தென்கிழக்கில் உள்ள மடகாஸ்கர் என்ற தீவில் லெமுர் என்ற விலங்கு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த விலங்கு மனிதனுக்கும் குரங்கிற்கும் பொதுவான ஒரு மூலமாக இருக்கலாம் என்று விலங்கியல் வல்லுனர்களால் நம்பப்பட்டது. இந்த வகை விலங்குகள் பார்ப்பதற்கு 50% குரங்கு, 25% மனிதன், 10% பூனை, 15% அணில் […]
ஐ பட விமர்சனம்
ஷங்கர் இயக்கத்தில் உருவான, திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ஐ படத்தை திரையில் பார்த்த எனது அனுபவத்தை இங்கு பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன். “யானை வரும் பின்னே ;மணியோசை கேட்கும் முன்னே” என்பதற்கிணங்க, சங்கரின் திரைப்படமாகிய ஐ வெளிவருவதற்கு முன்பே பரபரப்புகளும் பேட்டிகளும் படக்காட்சிகளும் இணையத்தளத்தில், வலம் வர தொடங்கி விட்டன. இது மேலும் எனது ஆவலைப் பெருமளவில் தூண்டிவிட்டது என்னமோ உண்மைதான். திரைப்படம் வெளிவரும் நாளும், தமிழர் தைப்பொங்கல் நாளும் ஒன்றாக அமைந்துவிட நாட்களை எண்ணத் […]
பிள்ளைகளும் மின்நுகர்கருவி உபயோகங்களும்
முன்குறிப்பு – இந்தக்கட்டுரை பயம், பூச்சாண்டி காட்டுவதற்காக எழுதப்படவில்லை. மாறாக பெற்றோர்களைச் சற்றுத் தட்டியெழுப்பி சிந்திக்க வைக்கவே எழுதப்பட்டுள்ளது. கண் இமைக்கவே காட்டாறு மாதிரி ஓடும் மின்தகவல் நூற்றாண்டில் பிள்ளைகளின் கைத்தொடர்பு சாதனங்களைத் தவிர்ப்பதா? மட்டுப்படுத்துவதா? இது நடைமுறைக்கு நேர்மாறாக அல்லவா இருக்கிறது என்றும் நினைப்போம் நாம். ஆயினும் வளரும் மூளைக்கும் அதி மின்தகவல் நுகர்தலுக்கும் இடையே பிரதி விளைவுள்ள தொடர்புகள் உள்ளன என்கின்றன பத்து வருடங்களிற்கு மேற்பட்ட ஆராய்ச்சிகள். இதற்கான காரணங்களை மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள் […]
பணயம்
பார்க்கிங்கிற்குள் நுழையும் போது ஏழு இருபத்தி நான்காகிவிட்டிருந்தது. போச்சு. இன்று சரியான நேரத்தில் ட்ரெயினைப் பிடிக்க முடியாதெனத் தோன்றியது சாரிக்கு. வழக்கமாக பிடிக்கும் ட்ரெயினைப் பிடித்தாலே நார்த் ஸ்பிரிங்கிலிருந்து ஏர்போர்ட் போய்ச் சேர ஒரு மணி நேரமாவது ஆகிவிடும். ஏழு இருபத்தியாறை விட்டால் அடுத்த வண்டி ஏழு முப்பத்தி எட்டுக்குத் தான். எல்லாம் அந்த வால்வோ சண்டாளனால் வந்தது. வீட்டை விட்டு சரியான நேரத்துக்குத் தான் கிளம்பினான் சாரி. இத்தனைக்கும் வைஷூ ஸ்கூல் பஸ்ஸுக்கு லேட்டாகி […]






