இலக்கியம்
நிதர்சனம்
சரமென பொழிந்த நீர்த்துளி ஓடையில்
சுகித்து மகிழ்ந்து நீராடி ஓய்கையில்
சிப்பியென் இதழோரம் தங்கிய ஓர்துளியை
சிதறாது துடைத்திட ஓர் பணிப்பெண்!
பொங்கக் காசு
பொங்கலோ பொங்க… பொங்கலோ பொங்க… ஊரு செழிக்க, ஊத்த, மழை பெய்ய.. பொங்கலோ பொங்க… நாடு செழிக்க, நல்ல மழை பெய்ய.. பொங்கலோ பொங்க… தனது கர்ண கொடூரக் குரலுடன் சத்தமாய்ப் பாடிக் கொண்டே, கையிலிருந்த தட்டு ஒன்றில் சிறு குச்சியால் தட்டிக் கொண்டே வீட்டு முற்றத்தில் பொங்கி வழியும் பொங்கல் பானையைச் சுற்றிக் கொண்டு நடந்து சென்றார் ராமச்சந்திர அம்பலம். அவரைப் பின்பற்றி அவரின் மனைவி, மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் மற்றும் முதல் மருமகள், […]
புதுமைப் பதுமை
வழிமீது விழிவைத்துக் காத்திருந்தாள், கன்னல்
மொழிபேசி மனங் கவரும் ஏந்திழையாள்
களிபாடிச் சேர்ந்திருக்கப் பார்த்திருக்கும், சிற்பி
உளிபேசும் சிறப்பான கற்சிலையாய்…
நீ இங்கு நிஜமானால்…
ஒத்தயில நிக்கும் புள்ள
ஒளிவிளக்கில் ஒளிரும் முல்ல
சித்தமெல்லாம் கலங்கிப் போக – என்
சிந்தையிலே வந்தாய் பெண்ணே
என் காதலி
தூரிகையில் தோன்றிய தேவதையே!
சிலர் காதலிக்க கவிதை எழுதுவர்!
சிலர் காதலித்து கவிதை எழுதுவர்!
நான் கவிதை எழுத உனைக் காதலித்தேன்!!!
யோகியின் சித்ததில் உதித்து
கணினியில் வளர்ந்தவளே!
கனை எடுத்து உனை வெல்லேன்!
என் கவி கொண்டு உனைக் கொள்வேன்!!!
உறைபனியில் மீன் பிடித்தல்
அமெரிக்காவிலுள்ள மினசோட்டா மாகாணம், மற்றும் கனடாவிலுள்ள ஒன்டாரியோ மாகாணங்களில் வாழும் மக்கள் பனிக்காலத்தில் பல்லாயிரம் ஏரிகள், ஆறுகளில் இந்நாட்டு மக்கள் பலர் உல்லாசமாகப் பனிக் கொட்டில் (icehouse/tent) கட்டி மீன் பிடிப்பதைப் பார்த்திருப்போம். உஷ்ணப் பிரதேசத்தில் இருந்து வந்த மக்களாகிய எமக்கு உறைபனியில் குளத்திற்கு நடுவில் போவது பாதுகாப்பானதா என்றும் தோன்றும். ஆயினும் வடஅமெரிக்க மாநிலங்கள், மாகாணங்கள் உறைபனியை அதிகம் பெறுவதால் இவ்விடம் வாழும் மக்கள் நீர் உறையும் தட்ப வெப்பங்களை அறிந்து, உறைபனிப் பருமனையும், மற்றைய […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-10
விசாச் சிக்கல் புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழும் தமிழர்களில் பலர் தாம் சென்று குடியேறிய நாடுகளில் தங்குவதற்கான சட்டரீதியிலான அனுமதிப் பத்திரம் (எளைய) இன்றியே பயணங்களை மேற்கொண்டிருந்தனர். இதனால் அந்தந்த நாட்டிற்குரிய சட்டங்களின்படி புலம்பெயர்ந்து சென்ற பலர் நாடு கடத்தப்பட்டனர். வேறு சிலர் சிறை வைக்கப்பட்டனர். பலர் அபராதத் தொகையுடன் அனுமதிக்கப் பட்டனர். இன்னும் பலர் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டனர். தாம் எண்ணி வந்த எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களாகிப் போக, புலம்பெயர்ந்த நாடுகளிலும் இவர்களுக்கான சுதந்திரம் மறுக்கப்பட தமது எதிர்காலக் […]
மாற்றம் தேவை
“Sorry sir, I will make sure it won’t happen again!” என ப்ரித்வியின் அம்மா பள்ளி முதல்வரிடம் கேட்டுக்கொண்டாள். அவள் கண்களில் கோபம் தெரிந்தது. ப்ரித்வி மெளனமாக பக்கத்தில் அமர்ந்திருந்தான். பள்ளி முதல்வர் கடும் குரலில் “He need to learn to share with others. Otherwise he will get into fight again and again. Prithvi, let this be the last time we call on […]
கண்கள் இல்லாக் காதல்
கண்கள் இல்லாக் காதல் கண்கள் காணாக் காளையர் தமக்கும் கருத்தில் வந்து தோன்றும் காதல் பெண்கள் உறவு புரிந்தவர் எவர்க்கும் புறத்தில் நின்று போற்றும் காதல். தேசம் விட்டுத் தேசம் பெயர்ந்து காசது தேடிக் கடலும் கடந்த பாசம் மிக்க பலரும் போற்றும் சுவாசம் ஒத்த உணர்வே காதல். இளமையில் தோன்றி பூரித்து நின்று இனிமையே என்றும் வலம்வர இயைந்து வளமையும் தாண்டி வறுமையே வரினும் தனிமையது இன்றித் தழுவுவதே காதல். உடலின் அழகை உணர்வில் […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 15
அத்தியாயம் 14 செல்ல இங்கே சொடுக்கவும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதியது போன்று பல மொழிகள் தமிழில் இருந்து தோன்றின அவற்றில் கடைசியாக தோன்றிய மொழி மலையாளம். இதை ஒத்துக்கொள்ள சிலர் தயங்கினாலும் பெரும்பான்மையானோர் ஒத்துக்கொள்கிறார்கள். திராவிட மொழி வரலாற்றை முதன் முதலில் ஆராய்ந்த அறிஞர் கால்டுவெல் அவர்கள் மலையாளம் தமிழின் ஒரு பிரிவு என அபிப்ராயம் தெரிவித்தார். ஏ.ஆர்.ராஜராஜவர்மாவின் கருத்தின்படி, மலைநாட்டிலே பேசப்பட்டு வந்த தமிழே சம்ஸ்கிருதத்தின் தாக்கத்தினால் மலையாள மொழியானது என்ற கருத்தைத் தெரிவிக்கின்றார். இன்றும் […]






