இலக்கியம்
ஓட்டம்
கருவறை முதல் கல்லறை வரை ஒரு பெரு ஓட்டம் நடு நடுவே சிற்சில சில்லறை ஓட்டங்கள் பத்து மாதத்தில் உலகைத் தொட்டுவிட ஒரு ஓட்டம் பிறந்த எட்டு மாதத்தில் அடி எடுத்துவைக்க மறு ஒட்டம் இரட்டை வயதிற்குள் மழலையைக் கொட்டிவிட குட்டி ஒட்டம் பால்குடி மாறா வயதில் பால்வாடிக்கு ஒரு குறு ஓட்டம் பள்ளிக்கு சித்தம் கலங்கிட நித்தம் ஒரு ஓட்டம் கன்னியரும் காளையரும் கரைகாணா பேரின்ப பெரு ஓட்டம் நிலையில்லா மாந்தர்க்கு நிலையான ஆஸ்திக்கு நிகரில்லா […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-9
தகுதிக்கேற்ற தொழிலின்மை தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் நிற-இன ரீதியிலான வேறுபாடுகள் அதிகளவில் உணரப்பட்டன. தாயகத்தில் ஓரளவு படித்த பலரும் புலம்பெயர்ந்து சென்று தமது அந்தஸ்து, தகுதியை விடுத்து அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் காரணமாக எந்த வேலையினையும் செய்யத் துணிந்தார்கள். புதிய இடம், அந்நிய மொழியறிவு இன்மை போன்றனவும் புகலிடத் தமிழர்களை மிகவும் பாதித்தது. “தகுதி வேலை ஊதியம் சமன்பாடு குழம்பிய நிலையில் இன்னுமொரு முதலாளித்துவத் தெருவில் நான் ஒரு பிராங்கெனினும் என் […]
இயக்குனர் சிகரத்தின் இறுதிப் பயணம்
தமிழ்த் திரையுலகின் இயக்குனர் சிகரம் திரு. கே. பாலச்சந்தர் கடந்த செவ்வாய், டிசம்பர் 23ம் தேதி காலமானார். கைலாசம் பாலச்சந்தர் 1930 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஒன்பதாம் தேதி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்தில் பிறந்தவர். அறிவியலில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்று ஏ.ஜி.ஸ் (அக்கவுண்டன்ட் ஜெனரல்) அலுவலகத்தில் எழுத்தராக பணி புரிந்து வந்தார். இங்கு அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து நாடகங்கள் எழுதி, நடித்து அரங்கேற்றி வந்திருக்கிறார். ‘எதிர் நீச்சல்’, ‘நாணல்’, ‘மேஜர் சந்திரகாந்த்’ போன்ற […]
பார்த்ததில் ரசித்தது
”சிவாஜிக்கும் எம்.ஜி.ஆருக்கும் சண்டை வச்சா, ஆரு செயிப்பாக?” – எனக்கும் என் நெருங்கிய நண்பன் வெங்கடேசனுக்கும் சிறு வயதில் அடிக்கடி வரும் தகராறு இதுவே. நாங்களிருவரும் அவ்வளவு ஒற்றுமையான நண்பர்கள், ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் இருவரும் கீரியும் பாம்பும் போலச் சண்டை போடுமளவுக்கு விரோதிகள். மிகத் தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகன் அவன். நான் சிவாஜி கணேசனென்றால் உயிர் கொடுக்கவும் தயார்.. ”எம்.ஜி.ஆர் மாதிரி கத்திச் சண்டை போடமுடியுமாடா சிவாஜியால?” பொதுவாக என் தீர்ப்பு அனைத்தையும் மறு […]
முக்தி
கோவிந்த ராஜய்யரின் கவலையெல்லாம் ஒன்றே. சில நண்பர்களிடம் மட்டும் சொல்லி அங்கலாய்ப்பார். “பகவான் நல்ல வாழ்க்கையைக் கொடுத்துட்டான், ஒரு குறை இல்லாம குடும்ப ஷேமத்தைப் பாத்துண்டான்… இருந்தாலும் மனசைப் போட்டு வாட்டற ஒரே விஷயம் நேக்கு ஒரு புள்ளக் கொழந்த இல்லையேங்கறதுதான்.. நானும் லக்ஷ்மியும் என் பொண்ணு பிரபாவைப் புள்ள மாதிரிதான் வளத்தோம்.. ஆனாலும் கட்டையில போற காலத்துல அவளால எனக்குக் காரியம் செய்ய முடியாதே… புள்ள கையால காரியம் செஞ்சுக்காம பரலோகத்துல முக்தி கெடைக்கறது எப்டி?” […]
ட்ரிக் ஆர் ட்ரீட் (தந்திரமா? பரிகாரமா?)
அமெரிக்க நாடெங்கும் அனைத்துச் சிறுவர் சிறுமியரால் விரும்பிக் கொண்டாடப்படுவது ஆண்டுதோறும் அக்டோபர் 31ம் தேதி நடக்கும் ஹாலோவீன். இக்கொண்டாட்டத்தின் வரலாறு பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இந்நிகழ்வைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஹாலோவீன், அந்நாட்களில், அயர்லாந்தில், கிராமப்புறங்களில் ஒரு மதச்சடங்காக நடைபெற்று வந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. இன்னும் சில குறிப்புகள் இது மறைந்து போன புனித ஆத்மாக்களின் நினைவாகக் கொண்டாடப்பட்டது என்கிறது. மற்றுமொரு கருத்துப்படி இது நவம்பர் மாத முதல் இரண்டு […]
என் காவியம்
கையுயர்த்திப் பேசுகையில் மெய்வாய் மூடிக் கேட்டிருந்தேன் !! கண்விழித்துப் பார்க்கையிலோ கடைவிழிப்பார்வை விழக் காத்திருந்தேன் !! காலெடுத்து நடக்கையிலே என்வாசல் வந்திடத் துடித்திருந்தேன் !! களைமுகம் சிரிக்கையில் எனைப்பார்த்ததால் என மகிழ்ந்திருந்தேன் !! கவனமாய் அழகுதீட்ட காளையெனக்காக என்ற கனவிலிருந்தேன் !! கண்மூடித் தூங்குகையில் கனவினில் நானென எண்ணியிருந்தேன் !! கைகழுவிப் போனதனால் காவியம் பல தீட்டியவாறுள்ளேன் !!! வெ. மதுசூதனன்.
தோல்பாவைக் கூத்து
தமிழகத்தின் மிகத் தொன்மையான கலை வடிவங்களில் கூத்துக் கலையும் ஒன்று. சிறிய அளவில், குறைந்த அளவு பார்வையாளர்களைக் கொண்டு அரங்கேற்றப்பட்டு வந்த கூத்துக் கலையே பின்னர் நாடகம் , திரைப்படம் எனும் கிளைகள் தோன்றக் காரணமாக அமைந்தது. கிளைகளாகத் தோன்றிய நாடகக் கலையும், திரைக் கலையும் மிகப் பிரம்மாண்ட அளவில் வளர்ச்சியைக் கண்டாலும், அதன் ஆணி வேரான கூத்துக் கலை மட்டும் பெரிய அளவில் பாராட்டப்படாமல், கவனிக்கப் படாமல் எதோ கிராமத்து மக்களுக்காக, விழாக் காலங்களில் என்றேனும் […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-8
(பகுதி-7) பிரிவுத்துயர் எண்ணற்ற சொந்தங்கள் இருந்தும் அவர்களைப் பிரிந்து யாருமற்ற அனாதைகள் போல தனிமையில் வாழ்வது தான் துயர்களில் கொடுந்துயர். புலம்பெயர்ந்த இளைஞர்கள் பலர் இன்று உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாய், தந்தை, உடன் பிறப்புக்களைப் பிரிந்து உழைப்பு, உயிர்ப் பயம் போன்ற காரணங்களினால் புலம்பெயர்ந்தோர் சதா அதே நினைவுடன் தமது காலத்தைக் கடத்திக் கொண்டிருக்க மறுபுறம் மனைவி, பிள்ளைகளைப்பிரிந்து வெளிநாடுகளுக்குச் சென்று பல வருடங்களாகத் தனிமையில் வாடும் கணவன்மார் மற்றும் தந்தைமார்களின் நிலையோ […]
பெற்றோர்க்காக!!
அன்பில் எனை ஈன்றெடுத்து
ஆசையாய் வளர்த்தெடுத்து
இம்மையில் மறுமை சேர்த்து
ஈகையின் பெருமை வார்த்து






