இலக்கியம்
கவித்துளிகள் சில…
அம்மாவின் ஓயாத இருமல் கண்ணீராய் வெளிவரும் ஆண்டுகள் கடந்த தாய்ப்பால் ***** கோடை வெயில் நிழலை அழித்தது திடீர் மழை ***** தப்பித்த சிறு பூச்சி பேருருவாய் மேல் விழுந்தது மின்விளக்கின் மேல் தஞ்சம் ***** தென்றலின் இனிமைப் பேச்சு விழுந்து சிரிக்கும் சருகுகள் அச்சத்தோடு மனிதன் ***** அகன்ற கருப்புத்தாள் கண்மூடி எழுதுகிறேன் இரவுக் கவிதை சா. கா. பாரதி ராஜா
ஸ்டெர்லைட்டை ஏன் மூட வேண்டும்?
ஸ்டெர்லைட் நிறுவனம் 1993 இல் தாமிர உற்பத்தி தொழிற்சாலையைத் தூத்துக்குடியில் அமைக்கப்போவதாகச் செய்திகள் வந்த சமயத்திலிருந்தே, தூத்துக்குடியில் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. அச்சமயத்தில் தூத்துக்குடியில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த என்னைப் போன்றவர்கள் தொடர் பேரணி போன்ற போராட்டங்களில் கலந்துகொண்டோம். உள்ளூர் பொதுமக்களின் சம்மதம் இல்லாமல், மாநில அரசின் ஆதரவைப் பெற்று 1996இல், மக்களின் பாதுகாப்பை மண்ணுக்குள் புதைத்துவிட்டு, தனது உற்பத்தியைத் தொடங்கியது ஸ்டெர்லைட் தொழிற்சாலை. இன்று இந்தியாவின் முன்னணி தாமிரத்தொழிற்சாலை என்ற நிலையில், ராட்சத உற்பத்தியைக் கொட்டிக்கொண்டிருக்கிறது இந்நிறுவனம். அதன் […]
அம்மா
தன்னகத்தே இன்னும் ஓருயிராய் தவப்புதல் கொண்டு பெண்ணகத்தே உண்டான பெருமிதம் கொண்டு கண்ணகத்தே காக்கின்ற இமைபோல என்னை உன்னகத்தே காத்தருளினாய்! கால்பதிவுகள் முதலில் உன் கருவறையில் தொடங்கி உன்னை உதைக்கும் போதிலும் கண்ணே! மணியே என்றென்னை தடவிக் கொடுத்து கதைகள் பேசி மொழி பயிற்றுவித்து விதையிட்ட நற்செயல் யாவும் உன் கருவறையிலேயே தொடங்கிவிட்டாய்! வலிமை சேர்த்து வலியைத் தாங்கி என் இதயத்தைத் தனியாய் இயங்க வைத்தாய்! நடைபயிலும் போதெல்லாம் நான் பிடிக்கும் உன் விரல்கள் பசியாறும் வேளையெனில் […]
சிலுவையின் காதல் கடிதம்
அன்புள்ள நித்ரா, என்றும் உன் நலன் விரும்பும் சிலுவை எழுதுவது. நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்தக் காலத்தில் கடிதம் எழுதுவதெல்லாம் பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம். இப்போது கூட நீ இதை ஒரு சின்ன சிரிப்போடு தான் படித்துக்கொண்டிருப்பாய். இதை படித்து முடிக்கும் போது உன் கருத்து மாற வாய்ப்பிருக்கிறது புகைப்படம் போல கடிதமும் காலத்தின் ஆவணம். அன்பின் வார்த்தைகளை, பிரியங்களை, அக்கறை கலந்த கண்டிப்புகளைத் தாங்கி வரும் கடிதங்கள் எந்தக் காலத்திலும் தொலையப்போவதில்லை இல்லையா? நமக்கு மிகப் […]
விடியல் ..
ஒவ்வொரு காலையும் இதழோடு முட்டிக் கொண்டதன் ஈரம் காணாத சூடான கதகதப்பில் குடுவையில் அடைத்த தேன் துளிகள் போல பருகப் பருக இன்பமாய் முகரும் மூக்கின் நுனியில் வாசம் படர்ந்திடும் இயற்கையின் விடியலாய் ஒவ்வொரு முறையும் பருகுகையில் விழிகள் அழகாய் விழித்திடும் தூக்கத்திலிருந்து! நானருந்தும் தேநீர்! – ந. ஜெகதீஸ்வரன்
தேனீ அறியாத தேன்
அமெரிக்க ஊத்தப்பமான பேன் கேக்கில் (Pan Cake) தொட்டுக்கொள்ள அமெரிக்கர்கள் பயன்படுத்துவது மேப்பிள் சிரப் (Maple Syrup) எனப்படும் ஒரு தேன் போன்ற சமாச்சாரத்தை. சுவையாக, தேன் போன்ற தித்திப்புடன் இருக்கும். இது தேனீயிடம் இருந்து பிடுங்கிய தேன் இல்லை. மேப்பிள் என்ற மரத்திடமிருந்து எடுக்கும் தேன். குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் மேப்பிள் மரத்தைப் பற்றி அறிந்திருப்பார்கள். மிகவும் அழகாக இலைகளைக் கொண்ட மரம். கனடா நாட்டின் சின்னமாக, அதிகாரப்பூர்வ அரசாங்கச் சின்னமாக மட்டுமில்லாமல், கனடா நாட்டின் […]
விளம்பரக்கார உலகமடா
பக்கத்து வீட்டு கிட்டு மாமாவைத் தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது. அடையாறு , மத்ய கைலாஷ், வட பழனி ஏரியாக்களில் ரொம்ப பிரபலம் அவர். ஏதோ அரசியல் பிரமுகரோ , சினிமா பிரபலமோ, எழுத்தாளரோ இல்லை. ஆனாலும். பழக்கடை வியாபாரி முதல், பெட்டிக் கடை முதலாளிகள், தள்ளு வண்டி விற்பனையார்கள் , இப்படி எல்லோருக்கும் அவர் பரிச்சயம். அவர் என்ன வேலை செய்கிறார்னு யாருக்கும் தெரியாது. ஒரு நாள் மத்ய கைலாஷ் கோயிலைப் பெருக்கிக் கொண்டு இருப்பார் […]
ஸ்ரீதேவி – சிவகாசி மத்தாப்பூ
சினிமாவிலும் சரி, தினசரி பேச்சு வழக்கிலும் சரி அழகுக்கு உதாரணமாக அனைவரும் சொல்வது, ஸ்ரீதேவியைத்தான். இது ஏதோ அவர் கதாநாயகியாக நடித்துவரும் காலத்தில் சொல்லப்பட்டது அல்ல. இப்போது வரை அதுதான் நிலை. அப்படி அழகின் இலக்கணமாய்த் திகழ்ந்தவர். 1963 இல் சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி, கடந்த வாரம் துபாய்க்கு ஒரு திருமணத்திற்குச் சென்ற இடத்தில் தன்னுடைய 54 ஆம் வயதில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று மரணமடைந்த செய்தி, அவருடைய ரசிகர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஸ்ரீதேவி […]
ஜிடிபிஆருக்கு தயாரா?
தகவல் தொழில்நுட்பம் பல்வேறு காலக்கட்டங்களைத் தாண்டி வந்துள்ளது. எந்தளவுக்குப் பயன்களைத் தருகிறதோ, அதே சமயம் இன்னொரு பக்கம் பிரச்சினைகளையும் உருவாக்கி வருகிறது. இன்றைய காலத்தில் வேண்டியோ வேண்டாமலோ நம்மைக் குறித்த தகவல்களை இணையத்தில் பல்வேறு இடங்களில் பதிய வேண்டியுள்ளது. நாம் அறிந்தோ அறியாமலோ இந்தத் தகவல்கள் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படுகின்றன. இத்தகவல்கள் அனைத்தும் ஒருவருடைய அந்தரங்கம் சார்ந்தது மட்டும் அல்ல. அது ஒரு நிறுவனத்திற்குப் பொருள் ஈட்டும் பயனைத் தரும் நிலையில் இருப்பதால், அது அவருடைய தகவல் […]






