இலக்கியம்
காதல்
அந்தி சாயும் வேளையிது மல்லியின் வாசம் வருடுகிறது தென்றல் என்னை இழுக்கிறது காதலன் வரவிற்காக ஏங்குகிறது …! சோலைக்குயில் கூவும் நேரமிது உறைபனியின் நடுக்கம் குறைகிறது பால்நிலவு அவளால் எரிகிறது கண்ணாளனை நோக்கியே காலம் கனிகிறது..! காதலில் இன்பம் பொங்குகிறது மோகத்தின் வேதனை பொங்குகிறது இதழில் கவியெழுதத் துடிக்கிறது காதலனின் நெஞ்சில் சாய்ந்திடத் துடிக்கிறது …! மோகத்தின் உச்சத்தில் உறைகிறது மனம் இன்பத்தின் லயத்தில் லயிக்கிறது இரவின் நீலத்தை வேண்டுகிறது காதலனின் வரவை […]
வித்தகன் பாலகுமாரன்!
என்னெழுத்தின் வித்தவன் எழுதுவதில் வித்தகன் எத்துறையிலும் வித்துவான் எத்தலைப்பையும் விளக்குவான்! மாதவப் பெரியோரையும் மாதவிடாய்த் துயர்களையும் மானுடனின் வாழ்க்கையையும் மாண்புடனே படைத்திட்டவன்!! இறையருளை ஏத்தியவன் இரைந்துநீதி பேசியவன் இகவாழ்வு நீத்துச்சென்று இறையடியில் அமைதிகாண்க!! -மதுசூதனன் (Picture Courtesy: https://www.writerbalakumaran.com)
எழுத்தாளர் பாலகுமாரன்
‘ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ – தமிழ் பேசும் பலரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பயன்படுத்திய இந்த வரிகளை எழுதியவர் இன்று இல்லை! 1980களில் தமிழறிந்த இளவட்டங்களைத் தனது வசீகர எழுத்துக்களால் கட்டிப்போட்ட, ‘எழுத்துச் சித்தர்’ என்று கொண்டாடப்படும் பாலகுமாரன் மறைந்துவிட்டார். சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சமயத்தில்,புதுக்கவிதை எனும் கவிதைக் கிறுக்கல்கள் புற்றீசல் போல பெருகியபோது க. நா. சு என்ற இலக்கிய விமர்சகர் ‘எழுத சோம்பல் படுகிறவன் புதுக் கவிதை எழுதுகிறான்’ என்று சொன்னதைக் […]
ஒரு நாள் போதுமா?
சேருங்காலச் சுகத்தில் உதித்த உயிரை ஒருமுழக் கொடி பிணைத்த உடம்பை பிரித்தெறிந்த நொடியில் அணைந்து போகாது வரிந்தெடுத்து நெஞ்சோடு அணைத்த வித்தகமே! அன்று தொடங்கி அந்தம் வரையில் என்றும் சேய்நலம் கருதும் தாய்மையே நின்றன் திருப்புகழை நினைந்து உருகிட இன்றொரு நாள் மட்டும் போதுமா? உந்தியெழும் சூரியன், அந்திசாயும் சந்திரன் சிந்திச்சிதறும் கார்காலம், நிந்தைதரு வேனிலென விந்தைமிகு இயற்கையது பிறழ்ந்து தவழ்ந்தாலும் சிந்தைமாறா சிரத்தையோடு மக்களை நேசிப்பாயே! துறவுபூண்ட ஞானிகளும் மறக்கவியலா உறவு வரவுஅளக்கும் வணிகரும் கணிக்கவியலா […]
கேம்பிரிஜ் அனலிடிக்கா சொடுக்குதல் மூலம் சூசக வாக்குகள்
அமெரிக்காவில் 87 மில்லியன் பிரசைகளின் முகநூல் (Facebook) தனிப்பட்ட தகவல்கள் சூறையாடப்பட்டு தகாதவகையில் 2016 தேர்தலில் உபயோகிக்கப்பட்டமை கவலைக்குரிய விடயம். மின் இணைய சொடுக்கலிலிருந்து சுயேட்சை வாக்குகளுக்கு வரம்பு கட்டி, தேர்தலில் சாதகமான வேட்பாளர் பெட்டிகளை நிரப்புவது சாத்தியம் என்ற நிலைமையை அமெரிக்கா எதிர்கொண்டுள்ளது. இந்தச் சூசக நடவடிக்கை சுதந்திர நாட்டின் சுயேட்சை மக்கள் எனும் சிந்தனைக்கு முரணானது. எனினும் இன்று மக்களின் முகநூல் (Facebook), டுவீட்டர் (Twitter) போன்ற சமூக வலயங்களை. முன்னர் இருந்த பொதுசன […]
விடியும் நல்ல நாளை
விளம்பி வருடம் வரும் நேரம் விளிம்பில் வெதும்பி நிற்கிறது தமிழகம்! விரும்பியோ விரும்பாமலோ தமிழ் எனது விலாசம் விருந்தினரை வந்தாரை வாழவைப்பது எம் கலாச்சாரம்! விளம்பரத்திற்காக இந்தியனை வேற்றுமைபடுத்தி வீண் கலகம் செய்து விஷத்தை கக்கும் விஷமிகளின் வஞ்சனை வலையில் வீழ்ந்து விந்தைகாரர்களின் வசீகரத்தில் கட்டுண்டுக் கெட்டது! வினோதமாய் அன்னியமானது என் தமிழகம் இன்று! வீறுகொண்ட தன்னலமற்ற தலைவனைத் தேடுகிறது விவேகமான விவேகானந்தரின் இளைஞனுக்கு ஏங்குகிறது! வித்திட்டவரல்லவா நாம்? நாகரீகத்துக்கு வித்திட்டவரல்லவா நாம் […]
முதுமைக் காதல்
மெருகூட்டும் உன் கன்னங்கள் மருவற்ற முகத்திற்கு அழகு சேர்க்க!! மொழிபேசும் உன் இதழை மெய்மறந்து நான் பார்த்திருக்க வளையோசை கேட்டுக்கொண்டே மடிமீது தலை சாய்க்க!! அசைந்தாடும் கூந்தல்; அதில் அலைபாயும் காற்று இசையாவும் உந்தன் கால்கொலுசில் விளையாடும் அழகே!! கதைபேசும் கவிதையே கைகோர்க்கும் தாரகையே விலைபேசும் உன் கண்ணோடு உரையாடல் நான் தொடங்க! வார்த்தைகள் தடுமாறி குறிலும் நெடிலுமாய் முடிவுற்று போயின! எதைச் சொல்லி மறைப்பேன் – நான் உன் சிரிப்பொலியில் […]
நி(தி)றம்படப் பழகு
ஏனோ இந்தக் கேள்வி இப்போதெல்லாம் சுஜாவிற்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்த தொடங்கி இருந்தது. அவள் எவ்வளவுதான் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள நினைத்தாலும் சில நேரங்களில் அது முடியாமல் போய்விடுவதும் உண்டு.அவள் தன் கட்டுப்பாட்டை இழக்கும் போதெல்லாம் அவள் கணவனிடமிருந்து வரும் விமர்சனம் இப்போதெல்லாம் அவளிற்குப் பழக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. அவன் தினமும் அவளிடம் “ சுஜா எதையும் மறந்து விடுவதுதான் குழந்தைகளின் இயல்பு. நீ அறிவுரை சொல்லும் நேரத்தில் அதை எவ்வளவு வேகமாக ஒரு குழந்தையால் புரிந்து கொள்ள […]
இணையத்தில் இனிமையாக இருந்து கொளல் எப்படி?
நாளாந்த நடத்தைகள் பற்றி இணையத்தில் துச்சமான, துக்கமானச் செய்திகள், அறிக்கைகள் வருகினும் அவற்றை முற்றிலும் உண்மையென நம்பி நாம் எடுத்துக் கொள்ளலாகாது. மனிதாபிமானம் என்பது இலத்திரனியல் நூற்றாண்டிலும் தொன்மையானது . இது நாம் நாளாந்தம் மற்றவருடன் பேணக் கூடியது, பேணவேண்டியது. இதே மனிதாபிமானத்தை நாம் நாளாந்தம் உபயோகிக்கும் இணையத்திலும் கடைபிடிக்கவேண்டும், இணையத்தில் தொடர்பு நன்னெறிகளைப் பேணல் மற்றவர்கள் நுகர்வுக்கு ஒரு கருத்தை எழுதும் போதும் சற்றுச் சிந்தித்து எழுதுவதும் , சித்தரிப்புக்களைப் பகிர்வதும் நலம். நாம் பரிமாறும் […]
புன்னகை
வரிகள் இல்லாத பொது மொழி வார்த்தைகள் சேராத வாய்மொழி உதடுகளின் விரிப்பில் மனதை மயக்கிய மாய மருந்து… சில காலடித் தூர நடை ஒரு சிறு சுவர் தாண்டல் உதிர்த்த சிறு புன்னகை பகை மறந்த கை குலுக்கல் ஒற்றை மரம் நடுதல் சுயம் இழக்காத உறவாடல் அத்தனையும் சேர்ந்து அறுத்ததெறிந்தது ஆறாப் பகையை தியா –






