இலக்கியம்
கிறிஸ்த்மஸ் தினச் செய்திகள்
பனிப்பூக்கள் வாசகர்கள் அனைவருக்கும் கிறிஸ்தமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இறைமகன் இயேசு பாலன், உங்கள் குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் அன்பையும் சமாதானத்தையும் ஆசீர்வாதத்தையும் நிரம்ப பொழிந்து, அனைவரையும் குழந்தை உள்ளம் கொண்டவர்களாக மாற்றி நமக்கு புனித வாழ்வின் மகத்துவத்தை உணர செய்து, ஒருவரை ஒருவர் ஏற்றுகொண்டவர்களாக அன்பையும் சகோதரத்துவத்தையும் பறைசாற்ற வாழ்த்துகிறேன். கிறிஸ்துமஸ் என்பது உலகத்தில் இறைவனுடைய அவதாரத்தை நினைவு கூறுவது. இந்த கிறிஸ்து பிறப்பு வரலாற்றில் 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வோ அல்லது வருடம் ஒருமுறை […]
மினசோட்டா குளிர்
மினசோட்டாவின் ஒரு சிறப்பம்சம், அதன் குளிர். ‘என்னது, குளிரா? அதான், இங்கே கடியான விஷயம், பாஸ்!!’ என்பவரா நீங்கள்? 13000 ஆண்டுகளுக்கு முன்பு, பனியுகம் (Ice Age) முடிவுற்ற சமயத்தில், இங்குச் சராசரி தட்பவெட்ப நிலை -16 டிகிரிக்கும் கீழே இருந்தது. இது ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் இருக்கும் தட்ப நிலை. கால ஓட்டத்தில், நல்லதோ, கெட்டதோ இந்த நிலை மாறி, தற்போது மனிதர்கள் வாழும் நிலைக்கு வந்திருக்கிறது. இந்தாண்டு டிசம்பர் 18ஆம் தேதியன்று, மினசோட்டாவின் குளிர் -20 […]
கிறிஸ்மஸ் கிஃப்ட்
வழக்கம்போல காலை ஐந்தரை மணிக்கு அலாரம் தலையில் சம்மட்டி போல் அடிக்க, போர்வையை விலக்கி விட்டு எழுந்தான் கணேஷ். திரை நீக்கித் திறந்திருந்த ஜன்னலின் வெளியே பார்க்க, இன்னும் கும்மிருட்டு நிரம்பியிருந்தது. ”யப்பா, இன்னிக்கு ஒரு நாள் ஆஃபிஸ் போனாப் போதும், கிறிஸ்மஸ் நியூ இயரோட சொந்த லீவையும் சேத்து பத்து நாள் எங்கயும் போக வேண்டாம்”.. சிறு குழந்தை போல விடுமுறையை நினைத்துக் கொண்டே குளியலறை நோக்கிச் சென்றான். பல் தேய்க்கலாம் என்று குழாயைத் திறந்தால் […]
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம் !!
வைகறைப் பொழுதினிலே வான்திறக்கும் முன்னமேயே
வைத்திருந்த நீரதிலே வாசலையும் தெளித்தெடுத்தே
வைப்பதற்குப் பூசணியும் வரைந்தெடுத்த மாக்கோலமே
வையமனைத்திற்கும் மார்கழி வந்ததனைச் சொல்லிடுதே !!
ஓசோன் துளை
புறஊதாக் கதிரால் ஆகுமாம்
ஓசோன் படலம்
அக்கதிரால் சிதைவும் அடையுமாம்
ஓசோன் படலம்
மின்சாதனப் பொருளால் வருமாம்
குலோரோ சேர்மம்
2016 – ஒரு பார்வை
எல்லா வருடங்களைப் போலவே, இந்த ஆண்டிலும் உலகம் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டிருக்கிறது. பல நல்லது கெட்டதுகளைச் சந்தித்திருக்கிறது. தூக்கி வாரிப்போடும் சம்பவங்களைச் சகஜமாகக் கடந்திருக்கிறோம். சிலது வெறும் சம்பவங்கள், சிலது மைல்கல்கள், சிலது திருப்புமுனைகள். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதேனும் வகையில் முத்திரை பதித்திருக்கும் 2016ஆம் ஆண்டின் டைரிக்குறிப்புகளில் எழுதப்பட்ட முக்கிய உலக நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்கலாமா? கனடா தமிழர் பாரம்பரிய மாதம் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதியன்று, கனடா பாராளுமன்றத்தில் ஜனவரி மாதத்தைத் தமிழர் பாரம்பரிய மாதமாக […]
அனுபவ வாழ்க்கை
வண்டியை நிறுத்திவிட்டு, பக்கத்தில் இருந்த கைப்பையை எடுத்தாள் த்ரிவேணி. கைப்பை அருகில் இருந்த கோப்பையும் எடுத்துக் கொண்டாள் . அன்றைய நாளை மனதில் ஒட்டிய படி இறங்கினாள் . இன்றைய பொழுது ஒரு புதிய பெண் வந்து வகுப்பில் இணைவதாக, ஒரு வாரம் முன்பே பள்ளி முதல்வர் வேணியிடம் அறிவித்திருந்தார். வண்டியைப் பூட்டி விட்டு வகுப்பை நோக்கி நடக்கத் தொடங்கினாள். கருமையான நிறத்தில் ஒரு “ஃபார்மல்” பாண்ட் , வெளிர் நிறத்தில் ஒரு முழுக்கைச் சட்டை. தோள் […]
ஸ்திதப் பிரக்ஞன்
இந்த சமஸ்கிருத வார்த்தையை முதன்முதலாகக் கேள்விப்பட்டது, சமீபத்தில் மறைந்த திரு. சோ ராமசாமி அவர்கள் முன்னாளைய பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் குறித்து 1990 களில் எழுதிய கட்டுரையில்தான். இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்று புரிந்திராத காலமது. சோ அவர்கள் மொரார்ஜி தேசாய் குறித்து எழுதுகையில், இந்த வார்த்தையில் பொதிந்துள்ள பல தத்துவார்த்தப் பொருட்களை விளக்கியிருப்பார். அவற்றில் ஒன்று, சாதாரண மனிதராகவே வாழ்ந்து, உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் சாட்சி பாவத்தில் பார்த்திருந்து, நடுநிலைமையில் மட்டுமே […]
கதவடைப்பும் கழுமரங்களும்
1996. “வீணாப்போனவங்க. இப்பிடி பண்ணிட்டாங்களே…”அங்கலாய்த்தபடி தொழிற்சங்க அலுவலகத்துக்குள் பிரவேசித்த விஜயன் காலியா யிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து கொண்டான். தொழிற்சங்கத் தலைவர் குப்புசாமியின் முகத்திலும் கலவரச்சாயல் படிந்திருந்தது.கவலையால் ஏற்கனவே கருத்திருந்த முகம் மேலும் கறுப்பாகியிருந்தது. “எல்லாம் மொதலாளிங்க பாத்து செய்ய வேண்டியது.இப்ப பாரு எல்லாத்துக்கும் பிரச்சினை” என்றார். “ஆமாங்கண்ணே.வேலூர் சிட்டிசன் வெல்பேர் அசோசியேஷன் தான் கேஸ்ஸ ஃபைல் பண்ணியிருக்காங்க.அவங்க பார்வைல இது சரி தான்.ஆனா நம்ம வயித்து பொழப்பப்பத்தி நெனச்சி பாத்தாங்களா இல்லையான்னு தான் தெரியில”. ”எல்லாஞ் […]
செல்வி . ஜெயலலிதா ஜெயராம்
‘புரட்சித் தலைவி’, ‘அம்மா’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டு வந்த தமிழக முதல்வர், செல்வி ஜெயலலிதா ஜெயராம், உடல் நலக் குறைவா ல் இம்மாதம் (டிசம்பர்) ஐந்தாம் தேதி காலமானார். அன்னாரது மறைவுக்கு, பனிப்பூக்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இரண்டு மாதங்களுக்கு மேலாக, உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தாலும், அவரது போராடும் வைராக்கிய குணத்தினால் காலனை வென்று, மீண்டு வருவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது கட்சியினருக்கும், பொது மக்களுக்கும் அவரது மரணம் பேரதிர்ச்சியை அளித்துள்ளது. […]






