\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

ஏ புள்ள……!!!

Filed in இலக்கியம், கவிதை by on December 25, 2016 0 Comments
ஏ புள்ள……!!!

கஞ்சிக் கலயம் கொண்டு கடைக்கண்ணால் எனைக் கட்டி இழுத்துக் கொண்டு களத்து மேட்டில் நடந்து வயக்காட்டுப் பக்கம் போற புள்ள ….! கட்டழகு மேனியால் இந்த மாமன் மனதை களவாடியவளே வழியில் கள்ளர் பயமிருந்தால் சொல்லு புள்ள கள்ளழகராய் ; கட்டிளங் காளையாக வழித் துணையாக நானும் வாறேன் புள்ள …! கண்ணாலே கதை பேசி கயவரைக் காலால் புறந்தள்ளிவிட்டு கண் நெறஞ்ச மச்சானைக் கண்ணுக்குள்ளே பூட்டி வைச்சு….. கருமேகக் கூட்டம் வருமுன்னே விரசா வீடு வந்து […]

Continue Reading »

 கதவடைப்பும் கழுமரங்களும்

Filed in இலக்கியம், கதை by on December 25, 2016 0 Comments
 கதவடைப்பும் கழுமரங்களும்

1996. “வீணாப்போனவங்க. இப்பிடி பண்ணிட்டாங்களே…”அங்கலாய்த்தபடி  தொழிற்சங்க அலுவலகத்துக்குள் பிரவேசித்த விஜயன் காலியா யிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து கொண்டான். தொழிற்சங்கத் தலைவர் குப்புசாமியின் முகத்திலும் கலவரச்சாயல் படிந்திருந்தது.கவலையால் ஏற்கனவே கருத்திருந்த முகம் மேலும்  கறுப்பாகியிருந்தது. “எல்லாம் மொதலாளிங்க பாத்து செய்ய வேண்டியது.இப்ப பாரு எல்லாத்துக்கும் பிரச்சினை” என்றார். “ஆமாங்கண்ணே.வேலூர் சிட்டிசன் வெல்பேர் அசோசியேஷன் தான் கேஸ்ஸ ஃபைல் பண்ணியிருக்காங்க.அவங்க பார்வைல இது சரி தான்.ஆனா நம்ம வயித்து பொழப்பப்பத்தி நெனச்சி பாத்தாங்களா இல்லையான்னு தான் தெரியில”. ”எல்லாஞ் […]

Continue Reading »

என் பார்வையில் இசை மேதை பாலமுரளி

Filed in இலக்கியம், கட்டுரை by on December 11, 2016 0 Comments
என் பார்வையில் இசை மேதை பாலமுரளி

திரு BMK என்ற இசை இமயத்தைப் பற்றிப் பேசவோ எழுதவோ எனக்கு ஞானமும் தகுதியும் கிடையாது.  ஆனாலும் அவர் மேல் கொண்ட பக்தியும் ரசிக உத்வேகமும் என்னை இவ்வரிகளை எழுத தூண்டுகின்றன.  நான் BMK அவர்களின் பரம ரசிகர்களைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவள். லால்குடி பரம்பரை பாலக்காடு மணி பரம்பரை என்பது போல BMK யின் ரசிக பரம்பரை, பெருமையும் தனித் தன்மையும் வாய்ந்தது ஆகும். தேனில் மூழ்கி எழுந்த குரலின் கம்பீரம், கிருதிகளை வழங்கும் பாங்கு, […]

Continue Reading »

அட்சய பாத்திரம்

Filed in இலக்கியம், கவிதை by on November 27, 2016 0 Comments
அட்சய பாத்திரம்

எண்ணங்கள் நினைவுகள்
கற்பனைகள் கவலைகள்

காதல்கள் மோதல்கள்
பழக்கங்கள் வழக்கங்கள்

சிந்தனைகள் சிரிப்புகள்
உறவுகள் பிரிவுகள்

Continue Reading »

காத்திருப்பு

Filed in இலக்கியம், கவிதை by on November 27, 2016 0 Comments
காத்திருப்பு

காத்திருப்பு சுகமானது காதலில்
காதலியின் வரவை எதிர்பார்த்துக் காதலனும்
காதலனுக்காக அவளும் காத்திருப்பாள்
கருவாச்சி மனதினுள் பொங்கிடுவாள்….!

கட்டிய கணவனைக் கனிவோடு வரவேற்றிட
கட்டைவிரலால் கோலமிட்டே வாசலிலே நின்றிடுவாள்

Continue Reading »

அறிந்தும் அறியாமலே….!!!

Filed in இலக்கியம், கவிதை by on November 27, 2016 0 Comments
அறிந்தும் அறியாமலே….!!!

உணர்வுகள் மறந்த உடலொன்று
உறக்கம் கொள்ளும் பகலையும்
உன் நினைவைச் சுமந்த ஞாபகங்கள்
இரவிலும் விழித்திருக்கும் என்பதை
உணர்ந்தாயோ?

கட்டழகு மேனியில் கரைந்த பொழுதையும்
கள்ளச்சிரிப்பில் உறைந்த கனத்தையும்

Continue Reading »

மினியாபொலிஸில் இருந்து யாழ்ப்பாணம் வரையான பயணப் பாதையில்…

Filed in இலக்கியம், கட்டுரை by on November 27, 2016 0 Comments
மினியாபொலிஸில் இருந்து யாழ்ப்பாணம் வரையான பயணப் பாதையில்…

( பயணக் கட்டுரை) மிகவும் நெருக்கடியான ஒரு மாலைப் பொழுதில் அன்றொருநாள் எனது தாய் நிலத்தை விட்டு நீங்கியே ஆக வேண்டிய கட்டாயச் சூழலில் இரவோடு இரவாக ஊர்விட்டு நீங்கினோம். எனது தாய்நாட்டையும் உறவுகளையும் பிரிந்து சரியாகப் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் தாயகம் நோக்கிய எனது பயணம் மினியாபொலிஸ் விமான நிலையத்தில் இருந்து தொடங்கியது சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு தான் ஆண்டுப் பலன் நன்றாக எனக்கு வேலை செய்திருக்கின்றது போல.… இந்தப் […]

Continue Reading »

நன்றி நவிலலும், நுகர்வோர் கூத்தும் (Thanks Giving)

நன்றி நவிலலும், நுகர்வோர் கூத்தும் (Thanks Giving)

நவம்பர் மாதம் வந்து விட்டால், தேங்க்ஸ் கிவிங்கிற்கு (Thanksgiving) என்ன செய்யலாம் என்று அமெரிக்கர்கள் யோசிப்பார்களோ, இல்லையோ, என்ன வாங்கலாம் என்று அமெரிக்காவில் இந்தியர்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு பொருள் தேவையோ, இல்லையோ, டிஸ்கவுண்ட் என்ற சொல் மீது அலாதி ப்ரியம் நம்மவர்களுக்கு. டிஸ்கவுண்ட் என்று வந்து விட்டால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்போம், டீல் இல்லையென்றால் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்பது போல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அமெரிக்கத் தேங்க்ஸ் கிவிங் வரலாறு பதினாறாம் நூற்றாண்டில் […]

Continue Reading »

ஐநூறாம் ஆயிரமாம்

Filed in இலக்கியம், கட்டுரை by on November 27, 2016 0 Comments
ஐநூறாம் ஆயிரமாம்

ஃப்ளைட் விட்டிறங்கி ஏர்ப்போர்ட் விட்டு வெளியில் வருகையில் டாக்ஸி எடுத்துக் கொண்டு செல்லக் கூடக் கையில் சல்லிக்காசில்லை என்ற நிலை சாதாரணமாக நம் போன்ற வணிகப்பயணிகளுக்கு ஏற்படுவதில்லை… ஆனால் சமீபத்தில் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டோம்… திடீரென, அறிவிக்கப்பட்ட நான்கே மணி நேரத்திற்குள் நம் பாக்கெட்டிலிருந்த ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வெறும் காகிதங்களாக மாறி எதற்கும் பயனில்லாதவையாகிப் போயின.  இந்தியப் பிரதமர் நவம்பர் 8 ஆம் தேதியன்று இரவு, சரியாக 8 மணிக்குத் தொலைக்காட்சிகளில் தோன்றி, இன்று […]

Continue Reading »

பிரக்ஸிட்டும் கேலக்ஸிட்டும் (Brexit & Calexit)

Filed in இலக்கியம், கட்டுரை by on November 27, 2016 0 Comments
பிரக்ஸிட்டும் கேலக்ஸிட்டும் (Brexit & Calexit)

சமீப காலங்களில் பிரபலமடையத் துவங்கியுள்ள ஒரு ஒட்டுச்சொல் ‘எக்ஸிட்’.  அவற்றில் ஒன்று நம் வீட்டின் கொல்லைப் புறக் கதவைத் தட்டத் துவங்கியுள்ளது.  உலக அரங்கில் நடந்த பல நேர்வுகள், அமெரிக்கத் தேர்தலால் அதிக முக்கியத்துவம் பெறாமல் போயின. அவற்றில் ஒன்று ‘பிரக்ஸிட்’ . பிரக்ஸிட் (Brexit) முதலாம், இரண்டாம் உலகப் போர்களுக்குப் பின்னர் உலகம் முழுதும் பெரும் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டன.  பஞ்சம், பட்டினி, நோய்கள், வறுமை எனப் பல கொடுமைகள் பூதாகாரமாக வளர்ந்து உலக நாடுகளை […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad