\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

நீங்களும் பிஎம்பி (PMP) ஆகலாம்!!

நீங்களும் பிஎம்பி (PMP) ஆகலாம்!!

முதலில், தலைப்பின் நடு வார்த்தையை விவரித்து விடலாம். பிஎம்பி (PMP) என்பதன் விரிவாக்கம் ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் ப்ரொஃபஷனல் (Project Management Professional) என்பதாகும். எந்தத் துறையிலும் ப்ராஜக்ட் மேனேஜராக இருப்பவர்கள், தங்கள் தகுதியை நிரூபித்துக் கொள்வதற்கான தேர்வைப் பற்றிய கட்டுரை இது. ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் இன்ஸ்ட்டிட்யுட் – பிஎம்ஐ (PMI), இதை நிர்வகிக்கிறது. ”மேனேஜராக வேலை பார்க்க ஏதாவது கத்துக்க வேணுமா” என்று நக்கல் அடிப்பவரா? நீங்களும் இதை வாசிக்கலாம். சரி, நிரூபிப்பது இருக்கட்டும். ப்ராஜக்ட் மேனேஜராக […]

Continue Reading »

சித்திரைத் திருமகள்

Filed in இலக்கியம், கவிதை by on April 13, 2016 1 Comment
சித்திரைத் திருமகள்

மானொத்த விழியாளின் மருகிய பார்வையும்
மாலையற்ற கழுத்தும் மலரில்லாக் கூந்தலும்
மாநிறச் சருமமும் மயக்குகின்ற விழிகளும்
மாலைச் சூரியனாய் மலர்ந்ததந்த வதனமும்

மாண்புமிகு நெற்றியின் மத்தியிலிட்ட சுடரும்
மாங்கனியாய்க் குவிந்த மதுததும்பும் அதரமும்
மாறனின் கணைகளுக்கு மடுவான நாசியும்
மாரிக்கால வருடலாய் மந்தகாசத் தோற்றமும்

Continue Reading »

நிறமற்ற சினிமா

Filed in இலக்கியம், கதை by on March 28, 2016 0 Comments
நிறமற்ற சினிமா

படம் ஓடிக் கொண்டிருந்தது…. அது நிறங்களின் சிறகை, திரை தாண்டி துளிர்த்துக் கொண்டிருக்கிறதோ… என்றொரு சந்தேகம்… சற்று நேரம் வரை வரவில்லை.. என் கண்கள் எனக்கு முன்னால் சற்று வலது பக்கம் அமர்திருந்த அவளைக் காணும் வரை…எனக்கு, திரை தாண்டிய நிறங்களின் கூடு என் மேல் பொழிகிறதோ என்று தோன்றவேயில்லை.. மாயங்களின் வலையை நான் பின்னிக் கொண்டே இருப்பதற்குத் தகுந்தாற் போல… அவள் முகம் இன்னும் சற்று மெல்ல திரும்பி இருந்தது…..என் கண்கள் பாதி கன்னம் தெரிந்த […]

Continue Reading »

குமரிக்கண்டம் எதிர்கோணம்

குமரிக்கண்டம் எதிர்கோணம்

குமரிக்கண்டத்தின் எதிர்கோணம் என்றவுடன் குமரிமுனைக்குத் தெற்கேயும் இன்றைய ஈழம் உள்ளிட்ட பகுதிகளை அடக்கியதாகவும், அதற்கும்  தெற்கே இன்னும் பெரும் நிலப்பரப்புடன் இருந்ததாக அறியப்பட்ட லெமூரியா என்னும் குமரிக்கண்டத்தை இந்தியாவிற்கு   வடக்கே இருந்ததாக சொல்லப் போகின்றாயா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஆனால் அது இந்தியாவிற்கு வடமேற்குத் திசையில் இருந்ததாக இந்த கட்டுரையில் சொல்லப் போகிறேன். லெமூரியா என்பது தமிழ் இலக்கியங்களின் சான்றுப்படியும், சில அறிஞர்களின் கூற்றுப் படியும் சுமார் 3000 மைல் அடங்கிய ஒரு மாபெரும் கண்டமாகத் […]

Continue Reading »

உலகத் தாய்மொழி தினம் – 2016

உலகத் தாய்மொழி தினம் – 2016

அம்மா மடியில் படுத்துத் தூங்கும்போது கிடைக்கும் அமைதியும் உணரும் பாதுகாப்பும் வெளிநாடுகளில் நம் தாய்மொழியில் பேசும்போது நிச்சயம் உணரமுடியும். பேசுவதற்கும் எழுதுவதற்குமான கருவிதானே மொழி, இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்? என்று குறுகிய கண்ணோட்டத்தோடு கேட்கப்படும் கேள்விகளுக்கு, நம் வரலாற்றுப் பக்கங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள மொழிப் போராட்டங்களையும் உயிர்த் தியாகங்களையும் சற்று உற்று நோக்கினாலே பதில் எளிதில் கிடைத்துவிடும். மொழி என்பது ஓர் இனத்திற்கான தேசியம், பண்பாடு,தொன்மை மற்றும் கலாச்சாரத்தின் முதன்மை ஆகிய அடையாளங்களை வழங்குகிறது. ஓர் […]

Continue Reading »

கவித்துளிகள்

Filed in இலக்கியம், கவிதை by on March 28, 2016 0 Comments
கவித்துளிகள்

பிறந்த வீட்டில் ராணியாகவும்
புகுந்த வீட்டில் ஏணியாகவும்
வலம் வருகின்ற பாங்கினை
எங்கு கற்றாயடி !

வாழ்ந்த வீட்டிற்கும்
வாழவந்த வீட்டிற்குமான
இயற்கைச் சீற்றங்களைத்
தென்றலாக மாற்றிடும் சூட்சுமத்தை
எங்கு கற்றாயடி !

தாவணிக் கனவுகளைத் தரிசாக்கி

Continue Reading »

தனிமை தரும் சமூகவலயமா?

தனிமை தரும் சமூகவலயமா?

சமூகவலயம் தனிமை தருமா? இந்தக் கட்டுரையின் தலைப்பே சரியாகப் படவில்லையே என்று நீங்கள் எண்ணலாம். வாருங்கள் இதைப் பற்றி மேற்கொண்டு அலசுவோம். சுமார் பத்து வருடங்களின் முன்னர் நியுயார்க் நகரத்திற்கு அருகாமையில் கனக்டிக்கட் மாநிலத்தின் கீரீன்விச்  எனப்படும் ஒரு நகரத்தில் நடந்த சம்பவம். கீரீன்விச் அமெரிக்காவிலேயே மிகவும் வசதி மிகுந்த மத்திய அத்திலாந்திக் சமுத்திரக் கடற்கரையோர நகர் எனவும் கூறிக்கொள்ளலாம். இந்த நகரில் ஒரு சம்பவம் யாவரையும் பேச வைத்தது. பாரிய சொத்துடைய செல்வந்தப் பெண்மணி ஒருவர் […]

Continue Reading »

கண்டுபிடி மிஸ்டர் ஸ்லையை!!‏

கண்டுபிடி மிஸ்டர் ஸ்லையை!!‏

ஊடக அறம் என்ற வார்த்தை பிரயோகம், சமீப காலங்களில் அடிக்கடி நம்மிடம் அடிபடுகிறது. ஊடக நிறுவனங்களின் வியாபார வெறியினால் பலமாக அது மிதிபடுவதினால் ஏற்படும் சத்தம் காரணமாக இருக்கக்கூடும். தொலைகாட்சிகள், டிஆர்பிக்காக நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களைக் கோர்த்துவிட்டு,  தூண்டிவிட்டு, குழாயடிச் சண்டையை ஏற்படுத்துகிறார்கள் என்றால், பத்திரிக்கைகள் சர்குலேஷனைக் கூட்ட கருத்துக் கணிப்பு, புலனாய்வு போன்றவற்றை உட்கார்ந்த இடத்தில் இருந்தே செய்கிறார்கள். சர்குலேஷனைக் கூட்ட, பத்திரிக்கைகள் கடைபிடிக்கும் பல யுக்திகளைக் கண்டிருக்கிறோம். உற்பத்திச் செலவுக்கு கீழே பத்திரிக்கையை விற்று, வாசகர் […]

Continue Reading »

மீண்டும் தேவதாஸ் !

Filed in இலக்கியம், கவிதை by on March 28, 2016 0 Comments
மீண்டும் தேவதாஸ் !

அவள் பெயரோ
கவிதா
அவன் அவளிடம்
‘கவி’ தா ! என்றான்
அவளோ
தன் காதலைத்
தந்தாள்.

Continue Reading »

மனிதனாக இரு !

Filed in இலக்கியம், கவிதை by on March 28, 2016 0 Comments
மனிதனாக இரு !

சுடர் விளக்காக இரு
அது முடியாவிடில்
பரவாயில்லை.
இரவில்
சுடர் விடும்
மின் மினிப் பூச்சிகளைக்
கொன்று குவிக்காதே !
பள்ளி செல்ல
மனமில்லையா ?

Continue Reading »

ad banner
Bottom Sml Ad