\n"; } ?>
Top Ad
banner ad

கதை

எதிர்பாராதது – பாகம் 2

Filed in கதை, வார வெளியீடு by on December 3, 2017 0 Comments
எதிர்பாராதது – பாகம் 2

  * பாகம் 1 * தொலைபேசி மணி அடித்தது. ரிங் டோனை வைத்து அது கங்காவின் செல் என்று அறிந்து பேசாமல் இருந்தார் தாமோதரன். அவளுக்கு ஃபோன் வந்தால் அவர் போய் எடுக்க மாட்டார். அவளே வந்து எடுக்கட்டும் என்று இருந்து விடுவார். அதுபோல் அவருக்கு ஃபோன் வந்தால் அவளும் போய் எடுப்பதில்லை. அடித்து ஓயட்டும், நமக்கென்ன என்று விட்டுவிடுவாள். இப்போது மணி அடித்துக் கொண்டேயிருந்தது. நிற்கிறவரை அடிக்கட்டும்…எனக்கென்ன? என்று உட்கார்ந்திருந்தார். அவள் எங்கே என்ற […]

Continue Reading »

வாய்ப்புகள் திரும்புவதில்லை

Filed in கதை, வார வெளியீடு by on December 3, 2017 0 Comments
வாய்ப்புகள் திரும்புவதில்லை

நூறாவது தடவையாக திலகவதி கதிர் கூறிய வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொண்டாள். சுற்றி வளைத்துப் பேசினாலும் கடைசியில் அவன் பேசிய மொத்தப் பேச்சின் அடக்கமும் அந்த ஒரு வாக்கியத்தில்தான் முடிவு பெற்றது. ‘நல்ல நண்பர்களாக இருக்கும் நாம் ஏன் கணவன்-மனைவியாகக் கூடாது?’ என்ன துணிச்சல்? என்ன ஒரு துரோகம்? திலகவதி ஒரு அறிவுஜீவி. தான் படிக்கும் இரசாயனப் பாடம்தான் அவளது முதல் காதல். அதில் முனைவர் பட்டம் பெற்று மேல் படிப்புக்கு வெளிநாட்டுப் பல்கலையில் நுழைய வேண்டும் என்பதுதான் […]

Continue Reading »

எதிர்பாராதது…!? (பாகம் 1)

Filed in கதை, வார வெளியீடு by on November 26, 2017 0 Comments
எதிர்பாராதது…!? (பாகம் 1)

“ஒரு வீடு நல்லாயிருக்கணும்னா அந்தக் குடும்பத் தலைவன் சரியா இருக்கணும்….எல்லா விஷயத்துலயும், தான் சரியா இருக்கிறது மூலமா மற்றவர்களுக்கு அவன் ஒரு வழி காட்டியாகவும், தவறுகள் நடக்கக் கூடாதுங்கிறதைப் பாதுகாக்கிறதாகவும் அமையும். அப்பத்தான் குடும்பத்துல இருக்கிற மற்ற உறுப்பினர்களுக்கு அவன் மேல ஒரு மரியாதையும், மதிப்பும், அவரவர் செயல்கள் மேலே ஒரு பயமும், கருத்தும், கரிசனமும் இருக்கும்….” சொல்லிவிட்டு கங்காவின் முகத்தை உற்று நோக்கினார் தாமோதரன். எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாயிருந்தாள் அவள். பதில் சொன்னால் மேலும் […]

Continue Reading »

போர்வை

Filed in கதை, வார வெளியீடு by on November 19, 2017 0 Comments
போர்வை

மினியாபொலிஸில் பேய் மழை பெய்து கொண்டிருக்கிறது. லேசாகக் குளிரும் இந்த அறையில் போர்வைக்குள் தஞ்சம் புகுந்து ஜன்னலின் வழியே மழையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதாவது எழுதலாம். என்ன எழுதுவது..? இந்த மழை பற்றியா? வேண்டாம் நிறைய எழுத வேண்டும். இந்த மழையின் குளிரிலிருந்து காக்கும் இந்தப் போர்வை பற்றி எழுதலாமா ..? அட, புதுசா இருக்கே..!! எழுதுவோம்.. நல்லா இருந்தா பாராட்டிச் சொல்லுங்க.. நல்லா இல்லைனா..? வேற என்ன பண்றது ? அதையும் சொல்லுங்க .. கேட்டுத் […]

Continue Reading »

குடிமகனின் மகன்

Filed in கதை, வார வெளியீடு by on November 12, 2017 1 Comment
குடிமகனின் மகன்

1966 ஆண்டில் நான் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றபின், சிறீ லங்கா தொலை தொடர்பு திணைக் களத்தில் சிரேஷ்ட பொறியியலாராக உத்தியோகம் கிடைத்து வேலை செய்த காலகட்டத்தில், எனக்கு அறிமுகமான பல இன நண்பர்கள் அதிகம். அதற்குக் காரணம் நான் தமிழ் ஆங்கிலம், சிங்கள மொழிகளைச் சரளமாகப் பேசுவேன். அதோடு எல்லோருடனும் அன்பாகப் பழகும் குணம் உள்ளவன்.  அப்போது  திருமணமாகாத நான் தங்கியிருந்தது கொழும்புக்கு அருகேயுள்ள வெள்ளவத்தையில், சம்மரி என்று அழைக்கப்படும மூன்று அறைகளைக் கொண்ட வாடகைவீட்டில். […]

Continue Reading »

இரவல் சொர்க்கம்

Filed in கதை, வார வெளியீடு by on November 5, 2017 0 Comments
இரவல் சொர்க்கம்

‘ஓர் உயிரைக் காப்பாற்ற இன்னோர் உயிரைப் பறித்தது முறைதானா?’  ‘பிள்ளையைக் காக்க கணவருக்கு முடிவளித்தது சரியா?’  ‘வாழ்வில் இனி எனக்கு நிம்மதி கிட்டுமா?’  கத்தியின்றி இரத்தமின்றி கேள்விகளாலேயே ரணமாக்கும் வல்லமைகொண்ட வக்கீலான மனசாட்சியிடமிருந்து தப்ப முடியாது தவித்துக்கொண்டிருந்தாள் ஆதிரை.    கேள்விகள்…. கேள்விகள்…. விடாது துரத்தும் கேள்விகள்…  எங்கே ஓடுவாள் ஆதிரை? ஓடத்தான் முடியுமா? கடந்த ஆறுமாதத்திற்கு மேலாக ஓடி ஓடியே உருத்தெரியாது போய்விட்டாளே! இனியும் ஓடுவதில் அர்த்தமில்லை எனும் நிலையில் சுருண்டு விழுந்தவளுக்கு, அந்த ஆயாசம்கூட […]

Continue Reading »

அடச்சே என்ன வாழ்க்கை இது

Filed in கதை, வார வெளியீடு by on October 30, 2017 1 Comment
அடச்சே என்ன  வாழ்க்கை இது

காலை மணி ஐந்து.  பக்கத்தில் இருந்த அலாரம் அடித்தது. முதல் நாள் இரவு offshore call லேட்டா தான் படுத்திருந்தாள். உடல் எழுந்திருக்க மறுத்தது. திரும்பி படுக்கத் தோன்றிய மனதை அடக்கி எழுந்தாள் அகல்யா. காலை கடன்களை முடித்து விட்டு சமையல் அறைக்கு உயிர் கொடுத்தாள். குழந்தைகளின் மதிய உணவை வேகமாக தயார் செய்தாள். கடிகாரம் மீது ஒரு கண்ணை வைத்தபடி, மூத்தவன் அதர்வா பையிலும், சின்னவள் ஆதிரை பையிலும் மதிய டப்பாக்களை அடைத்தாள். மணி 6.15. […]

Continue Reading »

அனுபவம் புதுமை

Filed in கதை, வார வெளியீடு by on October 22, 2017 0 Comments
அனுபவம் புதுமை

ஜூன் மாதத்தில் ஒரு நாள், என் மகள் அம்மு கேட்டாள், “அப்பா, என் பிறந்த நாளுக்கு எனக்குப் பரிசுபொருள் எதுவும் வேண்டாம். எனக்குப் பிடித்த இசைக்குழுக் கச்சேரிக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்”. நானும் இது அக்டோபரில் தானே என்று நினைத்துச் சரி என்று சொல்லிவிட்டேன். அன்று ஆரம்பித்தது என் அனுபவப் பயணம். தினமும் “டிக்கெட் வாங்கியாச்சா” என்று கேட்டவண்ணம் தான்  பேச்சைத் துவங்குவாள். அவள் சொன்ன படியே ஆளுக்கு நூறு டாலர் செலவழித்து “இமேஜின் டிராகன்ஸ்” ( […]

Continue Reading »

அசௌகரிய வீடு

Filed in கதை, வார வெளியீடு by on October 22, 2017 0 Comments
அசௌகரிய வீடு

இலையுதிர் காலத்தில் ஏரிக்கரை மரங்களின் நிறம் மாறுகின்றது. இலைகள் மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பாக மாறுகின்றன. சில்லென்ற குளிரில் சில புற்களும் உலருகின்றன. ஏரிக்கு அருகே பல குட்டைகளும், வாய்க்கால்களும் உள்ளன. இவற்றில் மிதக்கும் அல்லிப்பூக்களும், அயல் நீர்த் தாவரங்களும் பூத்து ஓய்கின்றன. அல்லிக் கொடிகள் குட்டை மேல் நீர் கடந்து தெரிகின்றன. வட்ட இலைகள் வாடுகின்றன. இது இலையுதிர் கால இறுதியில் குட்டைகளின் தன்மை. நீரில் வளரும் தாவரங்கள் கோடை வெய்யிலில் பெருகும். பின்னர் அடுத்த வருடத்திற்கு உதவும் உக்கல் மண்ணாக […]

Continue Reading »

குற்ற உணர்ச்சி

Filed in கதை, வார வெளியீடு by on October 15, 2017 0 Comments
குற்ற உணர்ச்சி

“சாமிநாதன் நான் டெய்லி சொல்லிட்டு இருக்க முடியாது, உங்களாலே நேரத்துக்கு வர முடிஞ்சா வேலைக்கு வாங்க, இல்லையின்னா வேலைக்கு வர வேண்டாம்” அப்பா அவரிடம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்ட கண்ணனுக்கு கோபம் ஒரு பக்கம், சிரிப்பு ஒரு பக்கம் வந்தது. இந்தச் சாமிநாதனை இதோடு எத்தனை தரம்தான் இப்படி மிரட்டிக் கொண்டே இருப்பார். அவரும் பதிலுக்கு, ”சரிங்க முதலாளி, இனிமே நேரத்துல வந்துடறேன்” .இதே வார்த்தைகள்தான் இவரிடம் வரும். இவனும் பல முறை அப்பாவிடம் சொல்லி விட்டான், ”அப்பா அவருக்கு ஓய்வு கொடுத்துடலாம், […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad