\n"; } ?>
Top Ad
banner ad

கதை

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்…..

Filed in இலக்கியம், கதை by on November 4, 2013 0 Comments
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்…..

”இவர் எப்பவும் இப்படித்தான், சொல் பேச்சுக் கேக்கறதே இல்லை. தன் பொண்டாட்டி, குழந்தை குடும்பம்னு ஏதாவது நெனப்பு இருந்தாத்தானே.. பரோபகாரம், மத்தவாளுக்குச் சேவை செய்ரோம் பேர்வழின்னு, சொந்தக் குடும்பத்தைப் பத்திக் கவலையே இல்ல”…. சரஸ்வதி மாமியின் புலம்பல் தொடர, பொழுது புலர்ந்தது என்ற எண்ணத்துடன் பதில் எதுவும் கூறாமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று கிளம்பத் தயாரானார் சாம்பு மாமா. தனது மஞ்சள் பையில், தர்பை, பூணூல் எனத் தர்ப்பணத்திற்குத் தேவையான பொருள்களை எடுத்து வைத்துக் கொண்டார். […]

Continue Reading »

JUST JESS

Filed in இலக்கியம், கதை by on November 3, 2013 0 Comments
JUST JESS

சாலை நெளிந்து வளைந்துச் சென்றுக் கொண்டிருந்தது. நடுநிசியைக் கடந்த நேரம். அடர்த்தியான மேகங்களிடையே தனது ஒளிக்கதிரை எப்படியாவது செலுத்தி விட நிலவு முயன்று கொண்டிருந்தது. சாலையின் இருபக்கங்களிலும் வளர்ந்திருந்த அடர்ந்த மரங்கள் மேகத்தைக் கடந்து விழுந்த ஒரு சில ஒளிக்கீற்றையும் தரையில் விழுந்திடாதவாறு மறித்திருந்தது. வினோத்தின் காரிலிருந்து விழுந்த வெளிச்சம் மட்டும் அந்த கும்மிருட்டை இரண்டாகப் பிளந்து கொண்டு போய்க் கொண்டிருந்தது. அவ்வப்போது வெளிச்சத்தை நோக்கிப் பறந்து வந்த சின்ன பூச்சிகள் கார் காற்றைக் கிழித்துக்கொண்டு வரும் […]

Continue Reading »

பயணங்கள் முடிவதில்லை!

Filed in இலக்கியம், கதை by on October 6, 2013 4 Comments
பயணங்கள் முடிவதில்லை!

“ம்மா … என்னோட பர்ப்பிள் கலர் நெயில் பாலிஷ் எங்க?” மாடியிலிருந்து சுமதியின் குரல். “ஏண்டி இப்படிக் கத்தற.. தொண்டை வத்தி போற மாதிரி .. இரு வர்றேன்” அவளை விட அதிகமாகக் கத்தினாள் ராஜி – சுமதியின் அம்மா. “ஏங்க… இந்த குக்கர்ல பருப்பு வெச்சிருக்கேன் .. மூணாவது விசில் வந்தா ஆஃப்  பண்ணிடுங்க .. அவ எதோ கேக்கறா .. நான் எடுத்து கொடுத்துட்டு வந்திடறேன் ..” என்று ஈரக் கையை நைட்டியில் துடைத்து […]

Continue Reading »

இந்தியப் பயணம்

Filed in இலக்கியம், கதை by on October 6, 2013 1 Comment
இந்தியப் பயணம்

உணர்வுகள் – கடவுள் மனிதனுக்கு அளித்த வரம். உறவுகள் – அந்த வரத்தை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பாலங்கள். காலையிலெழுகையில் வீட்டின் வாசலில் காகம் கரைந்தால் உறவுகள் வீட்டிற்கு வரப்போவதற்கான அறிகுறி என்பது என் கிராமத்தின் நம்பிக்கை, உணர்வு. இதில் அறிவியல் இருக்கிறதாவென்று நானறியேன், ஆனால் மனது உறவினர் கொண்டு வரப்போகும் தின்பண்டங்களை எதிர்பார்க்கத் தொடங்கிவிடும். அழகிய மாலைப் பொழுதில் சாவதானமாக அமர்ந்து உணவு உட்கொள்ளும்பொழுது வரும் விக்கல் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வாழும் உடன்பிறந்தவளின் […]

Continue Reading »

வாங்க ப்ரீயா பேசலாம் !!

Filed in இலக்கியம், கதை by on October 6, 2013 1 Comment
வாங்க ப்ரீயா பேசலாம் !!

என்னா ஊருங்க இது? ஒன்னு பேஞ்சு கெடுக்குது.. இல்ல காஞ்சு கெடுக்குது.. அதுவிமில்லீன்னா குளிரித் தொலைக்குது .. பொறக்காலப் போயி ஒக்காரதுக்குள்ளாற பொடனி எல்லாம் வெறச்சுப் போச்சுது.. பெருசா இல்லாட்டியும், ஊருக்கு அந்தாப்பல ஒரு சின்ன வூட்ட வாங்கிப் போட்டேனுங்க.. (நீங்க நெனக்கிற மாதரயெல்லாம் ஒன்னுமில்லீங்க .. சின்ன சைஸ் வூடுங்க ..) அது என்றான்னா நமுக்கு சோலி சாஸ்தியாப் போனது தான் மிச்சமுங்… எதையும் அனுபவிக்க முடிலீங்க.. ”காப்பி கீப்பி குடிக்கிறாங்களா மாமோவ்?” எங்கூட்டம்மணி. “காப்பி […]

Continue Reading »

மனப் போராட்டம்

Filed in இலக்கியம், கதை by on October 6, 2013 1 Comment
மனப் போராட்டம்

“உன் புக்கைக் கொஞ்சம் தரியா?”
வலப்புறம் திரும்பி வனப்புடன் அமர்ந்திருந்த மாணவிகளின் மத்தியில் அன்றலர்ந்த மலர்போல வீற்றிருக்கும் பாரதியைப் பார்த்துக் கேட்டான் கணேஷ்.
இளங்கலை மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவ மாணவியர்கள் ஆசிரியருக்காகக் காத்திருக்கும் இடைவெளியில் பேசிக் கொண்டிருந்தனர்.

Continue Reading »

ஓய்வு

Filed in இலக்கியம், கதை by on August 7, 2013 4 Comments
ஓய்வு

”கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா பிரவர்த்ததே உத்திஷ்ட நரஷார்தூலா கர்த்தவ்யம் தெய்வமான்மிகம்” தெய்வீக த்வனியில் எம். எஸ். சுப்புலக்‌ஷ்மி அவர்கள் டேப் ரிகார்டரில் பாடிக் கொண்டிருக்க, என்றைக்கும் போல் அன்றைக்கும் அதிகாலையில் எழுந்து, கிணற்றில் தண்ணீர் இறைத்து கிணற்றடியைக் கழுவி விட்டுக் கொண்டே குளித்து முடித்தார் கோவிந்த ராஜய்யர். பாதிக் குளியலில் துவங்கிய மந்திர உச்சாடனங்கள் பூஜை அறையைச் சுத்தப் படுத்தும்பொழுதும்  தொடர்ந்து, சாமிப் படங்களிலிருந்த நேற்றைய பூமாலைகளை அகற்றுகையில் உடன்வந்து, தீபம் ஏற்றுகையில், ஊதுபத்திக் […]

Continue Reading »

கனவு மெய்ப்பட வேண்டாம்

Filed in இலக்கியம், கதை by on August 7, 2013 2 Comments
கனவு மெய்ப்பட வேண்டாம்

பிரீமியர் டைட்டில் கம்பெனியில், கடைசிப் பக்கத்தில் கையெழுத்துப் போட்டு முடித்தான் தினேஷ். “எக்ஸ்செல்லன்ட … யூ ஆர் டன் வித் ஆல் சைனிங்க்ஸ் .. யுவர் ஹவுஸ் இஸ் சோல்ட் அண்ட் க்ளோஸ்ட் நவ் .. ஹியர் இஸ் யுவர் செக் ..” எனச் செக்கைக் கொடுத்தாள் லிண்டா. செக்கை வாங்கிப் பார்த்தான். “யூ கேன் கிவ் த கீஸ் டு ஹிம்” எனச் சொல்லிக்கொண்டே அனைத்துக் காகிதங்களையும் ஒரு நீளமான கோப்பில் போட்டு, தினேஷிடம் கொடுத்துவிட்டுக் […]

Continue Reading »

நான் நாத்திகன்

நான் நாத்திகன்

“சொர்க்கத்திற்கு முகவரி என்ன?”… எனது ஏழு வயது மகள் தன் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்தட்டை மும்மரமாகத் தேடிக் கொண்டிருக்கையில், பின்னால் நின்று வெறுமையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்குச் சட்டென மனதில் எழுந்தது இந்தக் கேள்வி. வாழ்த்தட்டை அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றிப் பல ஆண்கள். குழந்தைகளுடன் வந்தவர்கள் – என்னைப் போல – மனைவிமார்களுக்குக் குழந்தைகள் சார்பாக ஒரு வாழ்த்தட்டை வாங்க வந்ததாக ஊகித்துக் கொண்டேன். தனியாக வந்திருக்கும் ஆண்களை அவரவர்களின் அன்னையருக்காக வந்திருப்பதாக […]

Continue Reading »

காய்கறித் தோட்டம்

Filed in இலக்கியம், கதை by on May 24, 2013 1 Comment
காய்கறித் தோட்டம்

பக்கத்தில் படுத்திருந்த, முன்தூங்கி பின் எழும் பத்தினி இடுப்பில் குத்தினாள். “ஏண்டி உயிர வாங்கற.. கொஞ்ச நேரம் தூங்க விடு …” “இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? ஹோம் டிப்போவில கார்டனிங் வொர்க் ஷாப் .. மறந்துட்டேளா?” என்றவாறு வசதியாகத் திரும்பிப் படுத்து கொண்டாள். ஓ… அந்த நாள் வந்து விட்டதா? மினசோட்டாவில் ஏன் பன்னிரண்டு மாதங்களும் பனிக்காலமாகவே இருக்கக் கூடாது என்று தோன்றியது எனக்கு. “காப்பின்னு ஏதோ ஒண்ணு குடுப்பியே, அதையாவது கலந்து குடேண்டி” “ஏன்? […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad