\n"; } ?>
Top Ad
banner ad

அன்றாடம்

சமையல் : ஸ்பானியப் பயேயா (Spanish Paella)

சமையல் : ஸ்பானியப் பயேயா (Spanish Paella)

இது என்ன வினோதமானப் பெயராக இருக்குதே என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் நீங்கள் கடலுணவுப் பிரியர் என்றால்  உங்களுக்காகக் காத்திருக்கிறது இந்த ஸ்பானியக் கடலுணவுப் பொக்கிஷம். இவ்விடம் நாம் தரும் ஸ்பானிய பயேயா சமையல் குறிப்பு,  தமிழ் சமையலறையில் எளிதாக உருவாக்கிக் கொள்ளக்கூடியது. மேலும் சைவம் மட்டுமே சாப்பிடக்கூடியவர்களும் இதை எவ்வாறு செய்யலாம் என்ற குறிப்பும் கீழே வழங்கப்பட்டுள்ளது. ஸ்பானிய பயேயா உண்மையில் இத்தாலி நாட்டு வெலேன்சியா கடல் சார்ந்த இடத்திலிருந்து உருவானது என்று கருதப்படுகிறது. இத்தாலியரும், […]

Continue Reading »

சாலப் பெருங்களி யிஃதே – பாகம் 1

சாலப் பெருங்களி யிஃதே – பாகம் 1

எல்லோரா குடைவரைக் குகைகள் சிறு வயதில் வரலாற்றுப் பாடத்தில் குடைவரைக் கோயில்கள் பற்றிப் படித்ததுண்டு. அவற்றில் முக்கியமானவைகளாக, உலகப் பிரசித்தி பெற்ற அஜந்தா மற்றும் எல்லோராக் குகைகளைப் படித்ததுண்டு. அவற்றை நேரில் பார்த்து மகிழும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. அந்த அனுபவம் பனிப்பூக்கள் வாசகர்களுக்காக! மஹாராஷ்ட்டிர மாநிலத்தில், ஔரங்காபாத் நகரம் ஓரளவுக்குப் பிரபலமானது. பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நகரம், இந்தியாவில் அதிவேகமாக வளரும் இரண்டாம் / மூன்றாம் ரக நகரங்களில் ஒன்றாகும். 1610 ஆம் […]

Continue Reading »

வர்ணத்தில் கிறிஸ்துமஸ்

வர்ணத்தில் கிறிஸ்துமஸ்

இருண்ட பனிக்கால விடியலின் சூரியோதயம். சோகமாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. அரை விழித்த பறவைகளின் ஆரவாரம், இன்னும் இரை தேடியபடி. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பாடசாலைகள் கூட வீட்டில் இருந்த படியே நடைபெறுவதால், கடந்த பத்து மாதங்களாகப் பிள்ளைகளுக்கு வீடு கிட்டத்தட்ட ஒரு சிறைச்சாலை போல மாறியிருந்தது. வீட்டுச் சிறையில் இருந்து அவர்களுக்கு ஒரு சிறிய விடுதலை கிடைப்பதையிட்டுப் பிள்ளைகள் இருவரும் காலையிலிருந்தே பெரும் ஆரவாரமாக இருந்தார்கள். எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் கொடுக்கக்கூடிய மிக மதிப்புமிக்க விஷயம் பணம் […]

Continue Reading »

பனிக்காலச் சுகங்கள்

பனிக்காலச் சுகங்கள்

 மீண்டும் மினசோட்டாவில் பனிக்காலம் வந்துவிட்டது. இந்த வருடம் பனி பிந்தினாலும், எம்மை குளிரும்,  இருளும் சூழ்ந்து வருகின்றன. இந்தக் குளிர் நாட்களில் சூரியன் பிந்தி உதித்து, முந்தி அத்தமிப்பது வழக்கம். எனவே முகில் கூடிய மந்தமான வானம், மங்கும் ஒளி இவ்விடத்தின் இயல்பான இயற்கை நிலையாகிப்போனது. இது சலிப்பான சூழலாக இருக்கும் என்று நாம் சிந்திக்கவும் செய்யலாம்  அதன் ஒரு காரணம் பூமியின் மத்திய கோட்டுக்கு அருகாமையில் வெயில் வெளிச்சத்துடன் வெப்ப வலயத்தில் (Tropics) இருந்து வந்த […]

Continue Reading »

புது வடிவில் பழமொழிகள்

புது வடிவில் பழமொழிகள்

நாம் பலரும் அறிந்த பழமொழிகள் முகவடி (Emoji) தொடர்களாகத் தரப்பட்டுள்ளன.  கண்டுபிடிக்க முயலுங்கள்!                            

Continue Reading »

செல்வி விஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

செல்வி விஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

வட அமெரிக்காவில், மினசோட்டா மாநிலத்தில் உள்ள மேபிள்  குரோவ்லில் வசிக்கும் பாஸ்கர் மற்றும் பானு கோபாலனின் மகள் செல்வி விஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்ட் 15ம் தேதி மினசோட்டாவில் மேபிள் குரோவ்  நகரிலுள்ள ஹிந்து  கோவிலில் நடைபெற்றது.அவரின் நடன ஆசிரியை திருமதி. சுஜாதா ஆகுறட்டி (Guru Smt.Sujatha Akurati) அவர்களிடம் கடந்த 12 வருடமாக நடனம் கற்று, இப்பொழுது அரங்கேற்றம் நடைபெற்றது. விழா நிகழ்ச்சியை பாஸ்கர், பானு கோபாலனின் குடும்பத்தினரும் மற்றும் அவரது நண்பர்களும் இணைந்து ஏற்பாடு […]

Continue Reading »

மினுக்க மினசோட்டா மின்னொளி அலங்காரம் (Glow Festival)

மினுக்க மினசோட்டா மின்னொளி அலங்காரம் (Glow Festival)

மார்கழி மாத மந்த இருட்டைப் போக்கும் முகமாக வந்துள்ளது GLOW Holiday Festival. இது மில்லியன் கணக்கில் மின்னொளி அலங்காரங்களை மினசோட்டா மக்களுக்கு,குதூகலமாகத் தருகிறது. இந்த இருட்டில், ஒளி இன்பத்தை மனதில் தரும் என்பதில் ஐயமே இல்லை. இந்த நிகழ்வு மினசோட்டா fairgrounds இல் இந்த விடுமுறை காலத்தில் நடைபெறுகிறது.  Fair Grounds முகவரி: 1265 Snelling Ave. N., St. Paul, MN 55108  இதன் இன்னொரு நற்செய்தி என்னவென்றால், அதை வாகனத்தில் இருந்தவாறே குடும்பமாக, […]

Continue Reading »

மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன்

தீபாவளி கொண்டாடுவதற்குப் பல காரணங்களைச் சொல்லுவார்கள். நமக்குக் காரணங்கள் தேவையில்லை. கொண்டாட்டம் தான் முக்கியம். எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, சாமி கும்பிட்டுவிட்டு, புத்தாடை அணிந்து, தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் சாப்பிட்டுவிட்டு, பட்டாசு வெடித்து, அவரவருக்கு ஸ்பெஷலான உணவை உண்டு, டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள் பார்த்தோமா, பண்டங்களை நண்பர்களுடன் பகிர்ந்தோமா, தியேட்டருக்குச் சென்று புதுப்படம் பார்த்தோமா என்றவாறு நமது தீபாவளிகள் நடந்து முடியும். இது கொரோனா காலம். பண்டங்களைப் பகிர முடியாது, தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாது. […]

Continue Reading »

சூரரைப் போற்று

சூரரைப் போற்று

சாமானியனும் உயரத்தில் பறக்க வேண்டும், பறக்க முடியும் என்ற நியாயத்தைப் பேசும் படமாகச் சூர்யாவின் “சூரரைப் போற்று” திரைப்படம் இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் இவ்வாரம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. இதுவரை ‘ஓடிடி’யில் வெளிவந்த திரைப்படங்கள் எல்லாம் சோபிக்காத நிலையில், இந்தப் படம் திரையரங்கில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஏர் டெக்கான்’ நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, அதனுடன் பிற விமான நிறுவனங்களின் கதையையும் சேர்த்து, அத்துடன் […]

Continue Reading »

அயலகம் ஆராதித்த தமிழ்க்கவிஞர்

அயலகம் ஆராதித்த தமிழ்க்கவிஞர்

ஈரோடு தமிழன்பன் வாசகர் வட்டம், அமெரிக்கா, அமெரிக்கத் தமிழ் வானொலி, ஒருதுளிக்கவிதை, புதுச்சேரி, உலகப் பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா மற்றும் வல்லினச் சிறகுகள் இணைந்து, மகாகவி ஈரோடு தமிழன்பன் 87ஆம் பிறந்த நாள் விழா இணையவழியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பல அறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, எப்பொழுதும் மகாகவிக்காகத் தங்களுடைய பங்களிப்பைத் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad