\n"; } ?>
Top Ad
banner ad

அன்றாடம்

நன்றி நவிலல் நாள் – பிரதிக்ஷனா 5 கி.மீ, ஓட்டம் 2018

நன்றி நவிலல் நாள் –  பிரதிக்ஷனா  5 கி.மீ, ஓட்டம்  2018

மினசோட்டா மாநிலத்தின் மேபிள் குரோவ் நகரத்தில் உள்ள இந்து கோவில் சார்பில், நன்றி நவிலல் நாளான   நவம்பர் 22ம் தேதியன்று, 7வது ஆண்டாக, பிரதிக்ஷனா ஐந்து கிலோமீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வைக் கோயில் நிர்வாகத்தினர், தன்னார்வலர்கள் பலர் துணையுடன் சேர்ந்து நடத்தினர். சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் 50 பேர் இந்தப் பந்தயத்தில்  பங்கேற்றனர். முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்குப் பரிசும், பங்கேற்றவர்கள் அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டன அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில […]

Continue Reading »

2.0

2.0

நடப்பதைக் காணும் போது ரஜினியின் மவுசு குறைந்து விட்டது போல் தான் தெரிகிறது. சூப்பர் ஹிட் படமான எந்திரனின் ‍தொடர்ச்சி, பெரும் பொருட்செலவு, VFX என பரபரப்பைக் கிளப்ப ஏகப்பட்ட சங்கதிகள் 2.0 க்கு இருந்தாலும், படத்தின் ரிலீஸ் அந்தளவுக்கு எதிர்பார்ப்பைக் கிளப்பவில்லை. அதாவது ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், அக்ஷய் குமார் என இத்தனை பெரும் தலைகள் இருக்கும் போது, அதற்கேற்ற பெரிய ஓப்பனிங் இல்லை. படம் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொண்டு படம் பார்க்கலாம் என்பது […]

Continue Reading »

சர்க்கார்

சர்க்கார்

உண்மையில் ஜெயிக்க இதுதான் சக்சஸ் பார்முலா என்று ஒன்று இல்லாவிட்டாலும், அப்படி ஒன்று இருப்பதாக எண்ணிக் கொண்டு தமிழ்த் திரையுலகினர் ஒரு வரைமுறையில் படம் எடுப்பார்கள். அஞ்சு பாட்டு, நாலு ஃபைட்டு, இரண்டு செண்டிமெண்ட் சீன், நடுநடுவே காமெடி என்று போகும் அவர்களது ஃபார்முலா. தற்போது அதில் சேர்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தும் வசனங்கள் மற்றும் காட்சிகள். ஒரு பிரிவினரைக் காயப்படுத்துவது, ஒரு கட்சியினைத் தாக்குவது, கதைத் திருட்டு வழக்கு என்ற சர்ச்சைகளும் தற்போது படத்தின் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. […]

Continue Reading »

பெஸ்ட் தேங்க்ஸ்கிவிங்க் எவர்

பெஸ்ட் தேங்க்ஸ்கிவிங்க் எவர்

  ”ஹே… விஷ்… டு யூ ரிமெம்பர் தட் ஐ நீட் டு லீவ் எர்ளி இன் த மார்னிங்…..” கேட்டுக் கொண்டே பெட் ரூமிலிருந்து லிவிங்க் ரூமுக்குள் நுழைந்தாள் டெப்ரா…. லிவிங்க் ரூம் சோஃபாவில் அமர்ந்து மும்முரமாக கால்ஃப் சேனல் பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா, “யெஸ் டார்லிங்க், ஐ டு ரெமெம்பர்…. ஐம் கோயிங்க் டு மிஸ் யூ….” என்று சொல்லிக் கொண்டே எழுந்து கட்டியணைத்து, கிடைத்த சந்தர்ப்பமாக நினைத்து இதழோடு இதழ் பதித்தான்  ……. […]

Continue Reading »

அமெரிக்க இடைத்தேர்தல் 2018 – முடிவுகள்

அமெரிக்க இடைத்தேர்தல் 2018 – முடிவுகள்

மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புடன் நடைபெற்ற இடைத்தேர்தலின் பெரும்பான்மையான முடிவுகள், தேர்தல் நடந்த இரவே வெளிவந்தன. கட்சிக்குள் சில மாறுபட்ட கருத்துகள் இருந்த போதிலும் பிரதிநிதிகளவை (House of Representatives) மற்றும் அதிகாரச் சபை (Senate) என்ற இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றிருந்த குடியரசுக் கட்சி அதை நிலைநிறுத்திக் கொள்ள மிகக் கடுமையாக முனைந்தது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மாற்றம் கொண்டுவர வேண்டுமெனில் இந்த இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டுமென்ற கட்டாயத்தில் ஜனநாயகக் கட்சி போட்டியிட்டது. அதிகார அவைத் தேர்தல் முடிவுகள் (Senate results) செப்டம்பர் மாதக் […]

Continue Reading »

வன்முறை மறுப்பு நாள் – NON VIOLENCE DAY 2018

வன்முறை மறுப்பு நாள் – NON VIOLENCE DAY 2018

இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின்149 ஆவது பிறந்த நாள் “வன்முறை மறுப்பு நாள்” (NON-VIOLENCE DAY)  என்று கொண்டாடப்பட்டது. மினசோட்டா மாநிலத்தின் தலைநகரக் கட்டிட அரங்கில் இந்த நாளில் ஒரு பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவை இந்திய மினசோட்டா அசோசியேஷன் மற்றும்  மினசோட்டாவில் உள்ள மற்ற இந்திய அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தனர். ஸ்ரீவித்யா வைத்தியநாதன்  இந்திய மினசோட்டா அசோசியேஷன் சார்பில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். […]

Continue Reading »

நன்றி நவிலல் நாள் நற்கேள்விகள்

நன்றி நவிலல் நாள் நற்கேள்விகள்

  வட அமெரிக்காவில் பிரதானமாக நன்றி நவிலல் நாளில் உண்ணப் படுவது, பன்றி செம்மறி ஆடு வான் கோழி அரிசி உணவு  கீழே தரப்பட்டவையில் வழக்கமாக உட்கொள்ளப்படாதது பூசணி மாக்கோது (Pumpkin pie) மசித்த உருளைக்கிழங்கு – (mashed potato) கிரான்பெரி பழவினி ரசம் வற்றாளங்கிழங்கு – (Sweet potato) மேலே கூறப்பட்ட அனைத்தும்  நன்றி நவிலல் நாள் அன்று குடும்பத்தவரை விருநதோம்பும் வழக்கம் தொடங்கியது எப்போது? பதினெட்டாம் நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டு பதினேழாம் […]

Continue Reading »

பூரிக்க வைக்கும் மஞ்சள் பூசணியும் பச்சிலையும்

பூரிக்க வைக்கும் மஞ்சள் பூசணியும் பச்சிலையும்

வட அமெரிக்கக் குளிர் மாதங்களில், பனிக் காலத்தில் எம்மை உற்சாகப்படுத்த உணவு வகை உதவி தரும். பனிக் காலத்தில் எமது உடலின் நோய் தடுப்புத் தன்மையை உந்து செய்ய மஞ்சள் (turmeric) திரவியமும், சற்று இதமான இனிப்புத் தன்மையான மஞ்சள், செம்மஞ்சள் நிறப் பூசணியும். சிறு கருநீல கேல் (kale), கீரை போன்ற இலை தழையும் இனிமையாகும். குளிர் காலத்தின்  வெயில் இல்லாத் தன்மை நுண்கிருமிகள் ஆதிக்கம் அதிகரிக்க வாய்ப்புக்களை உருவாக்குகிறது. பூசணி பற்றிய சிறு வரலாறு […]

Continue Reading »

மாநாட்டுச் செய்தி அறிவிப்பு – சிகாகோ

மாநாட்டுச் செய்தி அறிவிப்பு – சிகாகோ

அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அதன் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு சூலை திங்கள் 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது சிகாகோ, இல்லினாய், செப்டெம்பர் 15, 2018. பெருமதிப்புக்குரிய தமிழ் அறிஞர் பெருமக்களே வணக்கம். 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ பெருநகரில், 2019-ஆம் ஆண்டு, சூலை திங்கள் 3 முதல் 7ஆம் நாள் வரை நடைபெற இருப்பதை உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும். […]

Continue Reading »

96 – திரைப்பட விமர்சனம்

96 – திரைப்பட விமர்சனம்

ஒரு மாமாங்கத்திற்கு ஒருமுறை மெச்சிக் கொள்ளும்படி ஒரு காதல் திரைப்படம் தமிழில் வெளியாகும். அப்படி ஒரு படம் இம்மாதம் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வந்துள்ள 96 தான் அப்படம். பிரிந்த காதலர்கள் சந்தித்தால் என்னவாகும் எனும்போது அதற்குப் பல பதில்கள் உருவாகலாம். அறிமுக இயக்குனர் பிரேம்குமார் பார்ப்போரை நெகிழச்செய்யும் வண்ணம் ஒரு பதிலை இப்படத்தில் கூறியிருக்கிறார். இயற்கை புகைப்படக் கலைஞராகவும், புகைப்படக் கலை ஆசிரியராகவும் இருக்கும் விஜய் சேதுபதி ஒரு சமயம் தனது […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad