அன்றாடம்
சங்கமம் 2019

தைப்பொங்கலையொட்டி ஆண்டுதோறும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் கொண்டாட்ட நிகழ்வான சங்கமம், இந்தாண்டு செயிண்ட் பால் ஹார்டிங் பள்ளியில் பிப்ரவரி 9ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மினசோட்டாவைச் சேர்ந்த பல்வேறு குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவர்களுடன் இந்த நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாகத் தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையத்தின் சார்பில் கண்கவர் கிராமிய இசை மற்றும் நடனக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை பதினொரு மணியளவில் நிகழ்ச்சிக்காக மக்கள் குழுமத் தொடங்கினர். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (பிப்ரவரி 2019)

2019 வருடம் தொடங்கி வெளியாகிய படங்களில் நல்ல சதவிகிதத்தில் ஹிட் பாடல்கள் இதுவரை வரத் தொடங்கியுள்ளது. படங்களின் வரத்தில் ஒரு முறைமையைக் காண முடிகிறது. பெரிய படங்கள் என்றால் ஒன்றோ, இரண்டோ மட்டும் வெளியாகிறது. அதற்காக ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் மத்திம, சிறு படங்கள் அடுத்தச் சில வாரங்களில் கூட்டங் கூட்டமாக வெளியாகின்றன. படத்தின் அறிமுகத்திற்காக மட்டும் பாடல் வெளியீட்டு விழாக்கள் நடைபெறுகின்றன. அதற்குச் செலவு செய்யத் தயாராக இல்லாத நிறுவனங்கள் யூ-ட்யூப் வழியே, ட்வீட்டர் வழியே பிரபலங்கள் […]
இந்தியன் அசோஷியேஷன் ஆஃப் மினசோட்டா விழா

இந்தியன் அசோஷியேஷன் ஆஃப் மினசோட்டா (IAM) அமைப்பு அவர்களுடைய புதிய நிர்வாக அலுவலகத்தை எடைனா நகரத்தில் உள்ள பிரான்ஸ் தெருவில் உள்ள கட்டடத்தில் கடந்த வெள்ளியன்று திறத்தனர். இந்த அலுவலகத்தை எடைனா சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிர்வாகத்தினர் (Edina Chamber of Commerce) , சிகாகோவிலிருக்கும இந்திய தூதரக அதிகாரி, நீடா பூஷன் (Consulate General of Chicago), Dr.தாஷ் (USA Laboratories) மற்றும் இந்திய அசோஷியேஷன் ஆஃப் மினசோட்டா நிர்வாகத்தினர் சேர்ந்து திறத்து வைத்தனர். இந்த […]
திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள்

மனிதர்கள் முதன் முதலில் புரிந்து கொள்ளத் தொடங்கிய முதல் மொழி காதல்தான் எனலாம். காதல் என்ற சொல்லுக்கு அன்பு, இச்சை, வேட்கை, பக்தி, நேசம் எனப் பேரகராதிக் குறிப்புகள் பல பொருள் தந்தாலும், அதில் ஆட்படும் ஒவ்வொருவருக்கும் புதுவிதமான உணர்வு தரும் அபாரச் சக்தி காதல். ‘யாயும் ஞாயும் யாரா கியரோ’ எனும் குறுந்தொகைப் பாடல் தொடங்கி தலைவன் தலைவியின் அகவாழ்வு – காதல் – குறித்து எழுதப்பட்ட பாடல்கள் பல கோடி. எழுத்திலக்கியங்கள் குறைந்து, திரைப்படங்கள் […]
பேட்ட

எண்பது, தொண்ணூறுகளில் ரஜினி படங்களுக்கு அச்சிறுவனை அழைத்துச் செல்வார் அந்த ரஜினி ரசிகர். அப்படி ஒரு படம் பார்க்கச் சென்றிருந்த சமயம், தியேட்டருக்குள் ஓடும் போது, அச்சிறுவன் கீழே விழுகிறான். “அடி பட்டதா” எனத் தந்தை கேட்க, இல்லையென்கிறான். “அப்ப, எந்திரி… ஓடலாம். படம் போட்டுட்டான்” என்று அழைத்துக் கொண்டு ஓடுகிறார் அந்தத் தந்தை. இது போன்ற அனுபவத்தை அன்றைய சிறுவர்கள் பலர் அடைந்திருப்பார்கள். அச்சிறுவர்கள் ரஜினி ரசிகர்களாக வளர்ந்து, இன்றும் ரஜினி ரசிகர்களாக இருக்கலாம். முதல் […]
ஆண்டாள் கல்யாணம்

ஏதோ ஒரு காரணத்தினால் பரம்பொருளை பிரிந்த ஜீவாத்மா, லோக வியாபாரம் என்னும் சுழற்சியில் பிறப்பு, இறப்பு என்னும் மாய வலைக்குள் சிக்கி உழல்கிறது. “அந் நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்” என்ற வாக்கிற்கிணங்க ஜீவாத்மா மீண்டும் மீண்டும் சுழன்றபடியே இருக்கிறது.அந்த சுழற்சியிலிருந்து விடுபட்டு, பரம்பொருளை அடைவதற்கு ஒரு மார்க்கமே பக்தி மார்க்கம். “பவ்யதே இதி பக்தி: ” என பக்தி தோன்றுவதற்கு முதலில் மனதில் பவ்யம் மிக அவசியம். பக்தி மார்க்கத்தில் இறைவனை உணர்ந்து […]
திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

கிராமியச் சூழலை, மண்மணம் மாறாது வெளிக் கொணர்பவை நாட்டுப் புறப்பாடல்கள். மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளை, ஆசாபாசங்களை எளிமையான சொற்களால் விளக்கிடும் பாடல் வரிகள் இவை. எழுத்திலக்கியப் பாடல்களைப் போன்று யாப்பிலக்கணக் கட்டுப்பாடுகள் இல்லையென்றாலும் பெரும்பாலான நாட்டுப்புற வகைப் பாடல்கள் எதுகை, மோனை, இயைபு கொண்டிருப்பது ஆச்சரியமான விஷயம். தெம்மாங்கு நாட்டுப்புறப் பாடல் வகைகளுள் ஒன்றாகும். தென்னகத்தின் பாங்கு , தென் + பாங்கு, தெம்மாங்கு ஆகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இப்பாடல்கள் வேலைப் பளு தெரியாமலிருக்க வயல்களிலும், […]
2018 டாப் 10 பாடல்கள்

2018ஐ பொறுத்தவரை பெரிய ‘மியூசிக்கல் ஹிட்’ என்று சொல்லும் வகை படங்கள் நிறைய வெளிவரவில்லை. இவ்வருடமும் இளம் இசையமைப்பாளர்களின் ஆதிக்கம் தொடர்ந்தவண்ணமுள்ளது. வழக்கம் போல், இளையராஜா என்ன படங்களில் இசையமைத்தார் என்று தெரியாத வகையிலான படங்களுக்கு இசையமைத்தார். ஆனால், செய்திகளில் ராயல்டி தொடர்பாக அதிகம் அடிபட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லிக்கொள்ளும்படி செக்கச் சிவந்த வானம், சர்கார், 2.0 என பெரிய இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து தனது இருப்பைக் காட்டினார். கடந்த வருடங்களுக்கு ஒப்பிட்டால், இந்த வருடம் யுவன் ஷங்கர் […]
திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

வாழ்க்கை விடையில்லாத வினாக்கள் பல நிரம்பியது. உலகில் மிகச் சிலரே, மனதில் தோன்றும் வினாக்களுக்கு விடை தேட முனைவதில்லை. அவர்கள் மிக உன்னதமான மன நிலையிலிருப்போர் எனலாம். மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர்கள் இவர்கள். ஆனால் நம்மில் பலர் அவற்றிற்கு விடை காண முயல்கிறோம். அந்தத் தேடலின் முடிவில் கிடைப்பதைச் சரியான பதிலென்று மகிழ்வோர் சிலர். சில சமயங்களில் தேடலின் முடிவுகள் புதிய, மேலும் சிக்கலான கேள்விகளை உண்டாக்கிவிடும். முன்னால் தொங்கும் கேரட்டைத் துரத்தியோடும் கழுதையைப் போல விடை […]