அன்றாடம்
கைப்பந்து விளையாட்டுப் போட்டி 2017
மினசோட்டா மலையாளி அசோஸியேஷன் சார்பில் மார்ச் மாதம் 25ஆம் நாள், கைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு அணிகள் பங்கேற்றன. இந்த போட்டி திரு. சீதா காந்த டேஷ், திரு. ப்ருஸ் கோரி மற்றும் மலையாளி அசோஸியேஷன் நிர்வாக உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பனிப்பூக்கள் சார்பாக வாழ்த்துகள். அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக. ராஜேஷ்
பட்டர் பீன்ஸ் மசாலா
இந்தியா போன்ற நாடுகளில், வெளிநாட்டில் இருந்து வந்த காய்கறிகள், இங்கிலிஷ் காய்கறி என்ற பெயரில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும். முன்பு, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகள் கூட அப்படிப்பட்ட அந்தஸ்த்தில் தான் இருந்தன. அவ்வப்போது, ஏதேனும் ஒரு காய்கறி இப்படி அறிமுகமாகிக்கொண்டே இருக்கும். மஷ்ரூம், அமெரிக்க இனிப்புச் சோளம், சிறு சோளம் இவற்றை இவ்வகையில் சொல்லலாம். தற்சமயம், அவகடோ, ப்ரோக்கலி போன்றவை இந்த லிஸ்ட்டில் சேர்ந்துள்ளன. இப்படி வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில், வெளியூர்களில் இருந்து வரும் […]
கவண்
ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய எவரும், அவர் பாணியில் படமெடுக்கவில்லை. பாலாஜி சக்திவேல் மட்டும் ஒரு படம் எடுத்தார். ஆனால், அவருடன் ஒரேயொரு படத்தில் பணியாற்றிய கே.வி.ஆனந்த் எடுக்கும் படங்களில் எல்லாம் ஷங்கர் படத்தின் தாக்கம் இருக்கும். அயன், கோ என்று ஹிட்டடித்தவர், சமீபக் காலமாக எங்கேயோ சொதப்பி விடுகிறார். இப்ப,கவண் எப்படி வந்திருக்கிறது என்று பார்க்கலாம். தற்கால ஊடக அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான போராட்டங்கள் கலந்த கதைக்களம். அதனால் நடப்பு நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்திக் கொள்ள […]
காளான் குழம்பு
காளான் சைவமா அல்லது அசைவமா என்று ஒரு குழப்பம் பெரும்பாலோர்க்கு உண்டு. அது என்னவாக இருந்தாலும், சாப்பிட்டவர்கள் அதன் சுவையில் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டார்கள். நம் உடலுக்கு தேவையான இரும்பு, விட்டமின் பி & டி, செலினியம் போன்றவற்றை அளிப்பதால், நம் தினசரி உணவில் காளானைச் சேர்க்க, எந்த தயக்கமும் கொள்ள தேவையில்லை. காளான் வைத்து பெரும்பாலும் மஷ்ரூம் மசாலா, மஞ்சுரியன், பிரியாணி போன்றவற்றைச் செய்வார்கள். நம்மூர் குழம்பு வகையிலும், காளான் அருமையான சுவையை அளிக்கும். […]
யாழ்ப்பாண இறால் வடை
தேவையானவை: 20-25 கோது உடைத்த இறால்கள் 1/2 lbs சிறிய வெங்காயம் – சிறிதாக நறுக்கவும் 6 உலர்த்திய செத்தல் மிளகாய் ( dried red chily) 2 பச்சை மிளகாய் அரிந்து எடுத்துக் கொள்ளவும் 2 நகம் உள்ளிப் பூண்டு ½ அங்குலம் இஞ்சி 1 lb இறாத்தல் மைசூர் பருப்பு ½ தேக்கரண்டி மிளகு – தட்டி எடுத்துக் கொள்ளவும் சமையல் எண்ணெய் தேவையான உப்பு செய்முறை: சுவையான இறால் வடைக்கு நாம் பாவிக்கும் […]
காற்றில் உலாவும் கீதங்கள் – டாப் சாங்ஸ் (ஃபிப்ரவரி 2017)
இந்த ஆண்டு 2017இல் இதுவரை வெளியாகிய பாடல்களில், நம் மனம் கவர்ந்த பாடல்களில் சில உங்கள் பார்வைக்கு: பைரவா – வர்லாம் வர்லாம் வா சந்தோஷ் நாராயணனுக்கு அமைந்த முதல் கமர்ஷியல் மசாலாப் படம். விஜய் காம்பினேஷன் வேறு. பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி இல்லையென்றாலும், முதலுக்கு மோசமில்லை ரகம். இண்ட்ரோ சாங் ஸ்பெஷலிஸ்ட் ஆகிவிட்டார் அருண்ராஜா காமராஜ். வெறியூட்டும் குரலில் தெறி, கபாலி படங்களைத் தொடர்ந்து இதிலும் முதல் பாட்டு இவருக்குத் தான். மில் சைரன், பைக் ரேஸிங் […]
சிங்கம் 3
ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் போல நம்மூருக்கு அமைந்து விட்டது, சிங்கம் சீரிஸ் படங்கள். தொடர்ந்து ஹரி – சூர்யா கூட்டணியில் சிங்கம் 3ஆம் பாகமும் பரபரவென அமைந்து மசாலாப் பட ரசிகர்களிடையே வெற்றி பெற்று விட்டது எனலாம். கூடவே, கண் வலி மற்றும் காது வலி அபாயத்தையும் கொண்டுள்ளது என்பதைப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. சிங்கம் 3ம் ஹரியின் வழக்கமான ரோலர் கோஸ்டர் படமே. முதல் பாகத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்று, பின்பு ஆந்திரா நெல்லூரில் […]
பைரவா
விஜய்யிடம் இருக்கும் ஒரு பாராட்டுக்குரிய விஷயம், ஜெயிக்கும் கதை என்று தான் நம்புவதை, எக்ஸ்ப்பிரியன்ஸ், சென்டிமெண்ட்ஸ் போன்ற காரணங்களுக்காக விட்டுக் கொடுக்க மாட்டார். இந்த விஷயத்தில் எத்தனை முறை பல்ப் வாங்கினாலும் இதை விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார். தொடர்ந்து செய்து வரணும். இந்த நல்ல பழக்கத்தைத் தான், இப்படத்தில் தன்னிடம் இருக்கும் கெட்ட பழக்கமாக பஞ்ச் வசனத்தில் சொல்லி வருகிறார். படத்தின் இயக்குனரான பரதனுக்கு என்ன வாக்குக் கொடுத்தாரோ தெரியவில்லை. விஜய் காப்பாற்றி விட்டார். பரதன் […]






