அன்றாடம்
கொல்லத் துடித்தான்…..! திருவிவிலிய கதைகள்.
மாசில்லாத மழலை உள்ள வீடு மகிழ்வு நிறைந்த சொர்க்கம் போன்றது. ஒரு இல்லத்திற்கு அர்த்தமுள்ள நிறைவு… குழந்தை. “குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்பார்கள். காரணம் குழந்தை ஒரு வரம். அந்தக் குழந்தையாக தெய்வமே புவியில் தோன்றும்போது…..ஆகா.. அப்படித்தாங்க இந்த உலகத்தில அன்பின் அடையாளமாக இயேசு பாலன் பிறந்தார். இது நம்ப எல்லாருக்குமே தெரிந்த விடயம். அந்தக் குழந்தையைக் காண வெவ்வேறு திசையிலிருந்த முன்று ஞானிகள் வந்தார்கள். குழந்தை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க இயற்கை அவர்களுக்கு வால் நட்சத்திர […]
சங்கமம் 2017
தை மாதத்தின் பிறப்பை , அறுவடை திருநாளாக , உழவர் உழைப்பின் சிறப்பாக, பொங்கல் திருநாளாக தமிழினம் கொண்டாடி வருகிறது. தமிழ் மொழியை முன்னிறுத்தியே பணிகள் செய்யும் மினசோட்டா தமிழ் சங்கமும் இவ்வாண்டு பொங்கல் தினத்தை சனவரி 15 ஆம் தேதி அன்று “தமிழர் மரபு தினமாக” பெரும் விமரிசையாக கொண்டாடியது. தமிழ் பாரம்பரிய உணவான கருப்பட்டி பொங்கல், சாம்பார், உருளை வறுவல், பலகறிக் கூட்டு, தயிர், வடை என வீட்டு உணவு போலவே சுவையுடன் மதிய […]
முட்டை மீன் பொரியல்
பொதுவாக, மீனைக் குழம்பு வைத்தோ, பொறித்தோ சாப்பிடுவார்கள். மற்ற வகைச் சமையல்களில் பயன்படுத்துவது குறைவு தான். ஆனால், மீன் பல வகைச் சுவையை அளிக்கக் கூடியது. இதுவரை மீன் பொரியல் செய்திராதவர்கள், இதைச் செய்து பாருங்கள். மீன் சுவை ரசிகர்களுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும். சாதம் – மீன் குழம்புக்குக் கூட்டாகவும் சாப்பிடலாம், சப்பாத்தி உள்ளே வைத்து ரோல் (Roll) செய்தும் சாப்பிடலாம். அப்படியே சாப்பிட்டால், இன்னமும் ஆரோக்கியம். தேவையான பொருட்கள் முள் அதிகம் இல்லாத உங்களுக்குப் பிடித்த […]
திருமலை திருக்கோணேச்சரம்
தக்கிண பூமி எனப்படுவது நவீன அரசியல் எல்லைகள் தாண்டிய தமிழர் பூமியைக் குறிப்பிடும் . இதில் தற்போதைய தென்னிந்தியப் பிரதேசமும் குறிப்பாகத் தமிழ்நாடும், இலங்கை தீவும் சேர்த்து கடல் மேற்காணப்படும் நிலப் பரப்பைக் குறிக்கும். தமிழர்கள் வழிபாட்டில் சிவன் வழிபாடு தொன்மை வாய்ந்தது. பண்டய ஈசன் வழிபாட்டுத் தலங்கள் தக்கண ஈச்சரங்கள் என்று அழைக்கப்பட்டன. இவற்றில் ஒன்று தான் திருக்கோணேச்சரமாகும். இலங்கையின் வடகிழக்குக் கரையில் பாறைமுனையில் வங்காள விரிகுடாவைப் பார்த்துக் கொண்டிருக்கும் இடம் திருகோணமலை ஆகும். இவ்விடம் […]
டிம் ஹார்ட்டன்ஸ் மினசோட்டாவில்
ஓ கனடா டிம் ஹார்ட்டன்ஸ் மினசோட்டாவுக்கும் வந்தாச்சா? கனடாவிற்கும், மினசோட்டாவிற்கும் இடையே பயணிக்கும் தமிழ் நெஞ்சங்களே, உங்கள் காஃபி சுவைக்கும் நாக்கிற்கு இன்னும் ஒரு அனுகூலம். கனடாவில் பல தமிழர் சுவைத்து மகிழும் காஃபி டபிள் டபிள், மற்றும் டிம் பிட்ஸை (Tim – bits) இனி விமானம் பிடித்துப் போய் வாங்கத் தேவையில்லை. சுடச் சுட மினசோட்டா மாநிலத்திலேயே பெற்றுக் கொள்ளலாம், நவெம்பர் மாதம் நன்றி நவிலல் நாட்களுடன் நாக்குக்கு நல்சுவை தரும் பிரபல கனடா […]
மினசோட்டா மலையாளி அமைப்பு கிறிஸ்துமஸ் விழா 2016
மினசோட்டா மலையாளி அமைப்பு (Minnesota Malayalee Association) சார்பில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா ஹாப்கின்ஸ் சமுதாயக் கூடத்தில் (Hopkins Community Center) நடைபெற்றது. இந்த விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். சிறப்பு அம்சமாக மதிய உணவு விருந்தைச் சொல்லலாம். தன்னார்வலர்கள் சேர்ந்து அங்குள்ள சமையல் கூடத்தில் சமைத்து அனைவருக்கும் விருந்து அளித்தனர். மதிய உணவுக்குப் பிறகு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மொத்தம் இருபத்து மூன்று கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இவற்றில் […]
மில் சிட்டி நூதனசாலை Mill City Museum
மினசோட்டா மாநிலத்திற்கு வருகை தரும் விருந்தினர் எவரேனும், எவ்வாறு டிவின் சிட்டீஸ் பொருளாதார ரீதியில் இந்நாட்டில் பிரபல்யம் அடைந்தது என்று வினவினால், தயக்கமின்றி மில் சிட்டி தொழிற்சாலையை நோக்கி நம் கையை நீட்டலாம். மினசோட்டாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, அப்படி ஒரு மறுக்கவியலாத காரணியாக, இந்த மில் சிட்டி மாவு மில் ஒரு காலத்தில் இருந்தது. மினசோட்டாவில் ஓடும் மிஸ்ஸிசிப்பி ஆற்றின் இடையே, மினியாபொலிஸ் டவுண்டவுன் அருகே செயின்ட் அந்தோணி நீர் வீழ்ச்சி இருக்கிறது. அந்நாட்களில் ஓடும் நீரின் […]
2016 – டாப் டென் பாடல்கள்
பாடல்கள் பல தரப்புச் சமூகங்களிடம் எப்படி ஒருமித்த ரசனையை ஏற்படுத்துகிறதோ, அதுபோல் அவை ஒவ்வொருவருக்குமான தனி ரகசிய மொழியும் அழகும் கொண்டிருப்பவை. ஒருவர் கேட்டு ரசித்திராத ஒரு பாடல், இன்னொருவருக்கு மிகவும் நெருக்கமான உணர்வைக் கொடுக்கும். இங்கு உள்ளவை, எனது தனிப்பட்ட அனுபவத்தைக் கொண்டு, ரசனையின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட பத்துப் பாடல்கள். பிடித்த பாடல், நல்ல பாடல் என்றால் எழுதிக்கொண்டே போகலாம். அதனால், ஒரு சில விதிமுறைகளைக் கடைப்பிடித்திருக்கிறேன். எண்ணிக்கை, பத்து மட்டுமே. ஒரு படத்திற்கு ஒரு […]
காலிஃப்ளவர் பனீர் கட்லெட்
டிசம்பர் – ஜனவரி மாதக் குளிருக்கு , சாயங்கால வேளையில் மசாலா டீயும், வடையும் கிடைத்தால், குளிர்காலத்தை இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடித்தாலும் சம்மதிப்பார்கள் தமிழர்கள். அப்படி ஒரு வெற்றிக்கூட்டணி இது. ஆனால், வடையில் கார்ப் (Carb), ட்ரான்ஸ் ஃபேட் (Transfat) போன்ற கெட்ட சங்கதிகள் உள்ளன. நீண்ட கால உட்கொள்ளலில், உடல் நலத்திற்குச் கேடு ஏற்படுத்தக்கூடியது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துச் சமைக்கப்படும் ஒரு சிற்றுண்டி, இந்த கட்லட். எந்த மாவும் […]






