அன்றாடம்
வருடாந்திர மாநில பொருட்காட்சி
மினசோட்டா மாநிலம் விவசாயத்தை மையமாகக் கொண்டு வளர்ந்த சமூகம். இவ்விடம் கோடைக் கால வருடாந்திர மாநிலப் பெருப் பொருட்காட்சி குழந்தைகளில் இருந்து கொடுக்குப் பல் இல்லாத கொள்ளுத்தாத்தா வரை யாவரும் விரும்பி்ப் போகும் ஒரு திருவிழா. வருடாந்திரப் பொருட்காட்சி 1265 Snelling Ave North நிரந்தரச் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.மினசோட்டா மாநிலச் சந்தை அமெரிக்காவில் நடத்தப்படும் கோடைகாலப் பெருஞ் சந்தைகளில் ஒன்று. இந்த மைதானம் 320 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. வழக்கம் போலப் பஞ்சு மிட்டாய், பல […]
சமையலறை சாமர்த்தியத் துணுக்குகள்
துர் நாற்றத்தைத் துரத்தியடிப்போம் மேல் நாடுகளில் வாழும் தமிழர் யாவரும் அறிந்த விடயம் சமையல் செய்து சாப்பிடுவதிலும், மற்றவர்களுக்குப் பகிர்வதிலும் நம்மில் பலர் மகிழ்ச்சியடைவர் என்பதே. ஆயினும் முந்தைய நாள் சமைத்தது முக்கால் மைல் வரை துர் நாற்றமாக மணப்பது பல்வித கலாச்சார அயலவர்களோடு அடுத்தடுத்து வாழும் போது தர்ம சங்கடமாகக் கூடிய ஒருவிடயமே. இந்த வாசனையைப் போக்குவதற்காக ஊதுபத்தி பாவிப்பதற்கு நம்மவர் பலர் முனைவர். ஊது பத்தியானது துர்நாற்றத்தை உடன் ஓரளவு குறைக்கலாம், எனினும் […]
உன்னி கிருஷ்ணன் – நேர்காணல்
தேனினும் இனிய பாவம். திரையிசைப் பாடல்களில் முழுவதுமாய் ஊறிப்போய் பாரம்பர்ய சங்கீதத்தின் முழு அம்சங்களும் அவ்வளாக விளங்கிடாத சாதாரண ரசிகரையும் கட்டிப்போடும் வசீகரக் குரல். திரைத்துறையில் நுழைந்தாலேயே பெருமளவு மதிப்புத் தராத சபாக்கள் அனைத்தும் வரிசையில் நின்று தேதி கேட்கும் அளவு திறமையும் புகழும் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு சில பாடகர்களில் ஒருவர திரு. உன்னி கிருஷ்ணன். சமீபத்தில் திரு. உன்னிகிருஷ்ணன் மெல்லிசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் முகமாக மினியாபோலீஸ் வந்திருந்தார். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன் […]
மினசோட்டாவில் இந்தியத் திருவிழா – 2014 (IndiaFest)
மினசோட்டா மாநில இந்தியக் குழுமியம் கோலாகலமாக 2014ஆம் ஆண்டுக்கானபண்டிகையைக் கொண்டாடினார்கள். இந்தக் கொண்டாட்டம் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி சனிக்கிழமை மதியம் 12 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மினசோட்டா மாநிலத் தலைமையக மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழா மினசோட்டா மாநில ஆளுனர் மதிப்புக்குரிய மார்க் டெய்ட்ன் (Mark Dayton) அவர்களின் அனுசரணையுடன், விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு ஏறத்தாழ 10,000 மக்கள் வருவர் என எதிர்பார்க்கப்பட்டது. வருகை தந்தவர்கட்கு நல்லெண்ணத்தைப் பகிரும் வகையில் […]
மினசோட்டா மாநில இலையுதிர்கால இன்ப விழாக்கள்
என்ன? எங்கே? எப்போது? Renaissance Festival மறுமலர்ச்சிப்பண்டிகைஉங்கள் கற்பனையை மாத்திரம் கொண்டு வாருங்கள் ஐரோப்பியப் போர்வீரர்,பழைய ராசா, ராணி வாழ்க்கையைப் பார்த்து மகிழ ! Shakopee சனி,ஞாயிறுAugust 16-Sept 28 Sponsel’s மினசோட்டா அறுவடைப் பண்டிகைபூசணிக்காய்,ஆப்பிள்,சோள வயல் புதிர், வைக்கோல் வண்டிச்சவாரி, குதிரை ஏற்றம், சிறுவர் விளையாடும் ஆட்டுக்குட்டி, பசு, கன்று மான்குட்டி,முயல் போன்றவையுள்ள விலங்குச்சாலை [தாவர போசனம் உண்டு – Vegetarian Food Available] Jordan திங்கள் -வெள்ளி10 மணி – 5 மணி சனி,ஞாயிறுகாலை […]
கத்தரிக்காய் பொரியல் கறி
கத்தரிக்காயைக் கழவி 2 அங்குலத்துண்டுகளாக நறுக்கி சுமார் 5 நிமிடங்கள் வரை தண்ணீரில் ஊறவிடவும். பின்னர் நீரில் இருந்து அகற்றி, லேசாகப் பிழிந்து, நீரை அகற்றி, மஞ்சள் மற்றும் உப்பும் சேர்த்துப் பிரட்டவும்
சுடான கொதி எண்ணெய்த் தாழியில் உடன் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து பக்கத்தில் வைத்துக்கொள்ளவும்
அறிந்ததும் அறியாததும் – கூகிள் காகிள்ஸ்
“என்ன மாப்ளே.. அடுத்த மாசம் இந்தியா வரப் போறியாமே ..கேள்விப்பட்டேன்” நான்காண்டுகளுக்கு பிறகு, தொலைபேசியில் கல்லூரி நண்பன் பாலா.. “ஆமாடா மாப்ளே… எப்ட்றா தெரிஞ்சிது?” “அதாண்டா ப்ரெண்ட்ஷிப்… நீ அமெரிக்கா போய்ட்டா மறந்திடுவோமா என்ன?” “ரொம்ப சந்தோஷமா இருக்குடா மாப்ளே .. நீங்கல்லாம் என்னிய மறக்காம இருக்கிறது..” “எதுக்கு மச்சி இதுக்கெல்லாம் ஃபீலாவுற .. எந்த ஃப்ளைட்லே வர்ற” “ஏர் இந்தியாவுல தான் வரேண்டா .. “நம்ப செட்டு பசங்க எப்படி இருக்காங்க .. லொட்டை பாஸ்கர் […]






