வார வெளியீடு
ஹோலி திருவிழா 2024
வட அமெரிக்க மாநிலமான மினசோட்டா, ‘மேப்பில் குரோவ்’ நகரில் அமைந்துள்ள இந்து கோவில் சார்பாக மார்ச் பதினாறாம் நாள் ‘ஹோலி’ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை அந்நகராட்சித் தலைவர் (Mayor) முந்நிலையில், கோவில் நிர்வாகத்தினர், அர்ச்சகர்கள், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் சேர்ந்து மந்திரங்கள் பாடி, குத்துவிளக்கேற்றி, சிறப்பாகத் தொடங்கி வைத்தனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பௌர்ணமி தினத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்தக் காலத்தை வரவேற்கும் விதமாகவும், மக்களிடம் மகிழ்ச்சியையும், சகோதரத்துவத்தையும் […]
வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள்
“வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள்” பற்றிய வாசிப்பனுபவம் பற்றி உங்களுடன் சற்றுப் பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகிறேன். தலைப்பு கொஞ்சம் வில்லங்கமாகவும் விகாரமாகவும் தெரியலாம். கவிஞர் வேணு தயாநிதி அவர்கள் எழுதிய ஒரு கவிதை புத்தகத்தின் தலைப்பே இது. கவிஞர் வேணு தயாநிதி தற்போழுது மினசோட்டா மாநிலத்தில் வசித்து வருகின்றார். இவரின் இந்தக் கவிதை நூல் 2023 டிசம்பரில் ‘யாவரும் பதிப்பகம்’ மூலம் வெளியானது. தமிழ் நாட்டைச் சேர்ந்த கவிஞர் வேணு தயாநிதி அவர்கள் இப்போது அமெரிக்காவில் […]
சிவராத்திரி நடன விழா 2024
2024ம் ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு மினசோட்டா மாநிலம், ‘எடினா’ நகரத்தில் உள்ள வெங்கடேஸ்வர திருக்கோவிலில் (SV Temple, Edina, MN) பரதநாட்டிய திருவிழா கடந்த மார்ச் எட்டாம் தேதியன்று நடைபெற்றது. கோவில் நிர்வாகத்தால், இந்த விழா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் சிறுவர் முதல் பெரியோர் உட்பட பரதநாட்டியம் பயின்ற பலரும் பங்கேற்றனர். முறையாக நாட்டியம் பயின்ற மாணவ மாணவிகள் தனியாகவோ அல்லது குழுவாகவோ ஆடி, தங்கள் திறமையை வெளிப்படுத்தி, பார்வையாளர்களை மகிழ்வித்தனர். அன்றைய தினம் […]
அலெக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் 2024
‘அலெக்ஸ்’ என்று செல்லமாக அறியப்படும் மேடைச் சிரிப்புரையாளர் அலெக்ஸாண்டர் பாபு சென்ற மார்ச் 22ஆம் தேதி அன்று மினசோட்டா, ஹாப்கின்ஸ் (Hopkins)நகரில் உள்ள அரங்கத்தில் “அலெக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் – Alexperience” என்ற மேடை நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்தினார். “யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளில் ஆரம்பித்து, அதற்குண்டான உரையை வழங்கி, பல்வேறு தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடி, பலதரப்பட்ட விளக்கங்களையும் வழங்கி மக்களை மகிழ்வித்தார். இந்த நிகழ்விற்கு பல்வேறு […]
“உன் நிலம் நோக்கி நகரும் மேகம்” காதல் ரசம் சொட்டும் கவிதை நூல்.
2022 இல் YMCA மைதானத்தில் நடைபெற்ற 45வது சென்னை புத்தகக் கண்காட்சியில் கவிதாயினி சங்கரி சிவகணேசன் அவர்களின் “உன் நிலம் நோக்கி நகரும் மேகம்” எனும் கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. எழிலினி பதிப்பகம் மூலம் வெளியான இந்தப் புத்தகத்தை, கடந்த மாதம் அமேசான் கிண்டலில் (Amazon Kindle) வாங்கிப் படித்தேன் அத்தனையும் காதல் ரசம் கொட்டும் கவிதைகள். நான் தமிழ் படித்த கலாநிதி, பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் முன்னுரையுடன் தொடங்கும் இந்த நூலுக்கு, முனைவர் பேராசிரியர் […]
உணவூட்டிகள் (Feeders)
உங்கள் தேன்குருவி உணவூட்டிகளை வெளிக் கொண்டு வரச் சிறந்த நேரம் இலைதுளிர்க் காலமாகும். இலைதுளிர் காலத்தில் புலம் பெயரும்போது தேன்குருவிகளுக்குச் சிறிய ஆற்றல் ஊக்கத்தை அளிப்பது ஆர்வலராகிய எமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தென்கிழக்கில் தேன்குருவிகள்: வட அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் ஒரே ஒரு வகை தேன்குருவி உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். செம்மாணிக்க-தொண்டை தேன்குருவி – மற்றவை சில சமயங்களில் இலையுதிர் காலத்தில் இப்பகுதி வழியாக இடம் பெயர்கின்றன. ஃபிப்ரவரி மாதத்தின் கடைசிப் […]
திரைக் கவிஞர்கள் பார்வையில் அழகு
தமிழ்த் திரையிசையில் பிரதான இடம் பிடித்தவை காதல் பாடல்கள். நாயகன் – நாயகி இருவருக்குள்ளும் பிறந்த காதலை விளக்குவதற்குப் பெரிதும் துணை நின்றவை, இன்றும் நிற்பவை, பாடல்களே. ஒருவருக்கு ஒருவரைப் பிடிக்கப் பல காரணங்கள் உண்டென்றாலும் அந்தக் காரணங்களை எடுத்துச் சொல்வது, அதிலும் மெய்ப்பிக்கும் வகையில் சொல்வது மிகக் கடினமான விஷயம். ‘சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை’ என்று எந்தக் காரணமும் இல்லாமல் மற்றவர் மீது ஏற்பட்ட காதலை, ஈர்ப்பைச் சொன்னது கண்ணதாசனின் சிந்தனைக்கோர் சிகரம். […]
எண்பதிலும் ஆசை வரும்
என்னது எண்பதில் ஆசையா? அது என்ன ஆசை? இந்தியாவில் ஐம்பத்தெட்டு அல்லது அறுபது வயதில் வேலையிலிருந்து ஓய்வு பெற்று நிம்மதியான வாழ்க்கை வாழ்பவர்களைப் பார்த்து வளர்ந்த நமக்கு இந்தப் புதிய உலகம் வியப்பாக உள்ளது. நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்று புரிந்திருக்கும் என நம்புகிறேன். வாருங்கள், இந்த வியப்பைப் பார்க்க உலகைச் சுற்றி வருவோம். அமெரிக்கா அமெரிக்க அதிபர் பைடன் இந்த ஆண்டு எண்பத்தோரு வயதை எட்டுகிறார். அவருக்கு ஞாபக மறதி அதிகம் உள்ளது என […]






