வார வெளியீடு
மருந்தாக்க நிறுவனங்களின் விளம்பர ஆதிக்கம்
ஐக்கிய அமெரிக்காவில், சராசரியாக ஒரு மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் ஒருவர், குறைந்தபட்சம் ஒன்பது மருந்துகள் தொடர்பான விளம்பரங்களைக் காண நேர்கிறது. இவை பொதுவாக கடைகளில் கிடைக்கும் (Over the counter – OTC) மருந்துகளுக்கானவை அல்ல. இவை நோயாளிகளைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும், மருந்துச் சீட்டு மூலமாக மட்டுமே பெறக்கூடிய மருந்துகளுக்கான விளம்பரங்கள். மருத்துவச் சோதனைகள், உபாதைகள், அவற்றின் மூல காரணங்கள் குறித்த போதுமான கல்வியும், அனுபவமும் இல்லாத சாமான்ய நுகர்வோருக்கு, நேரடியாக இவ்விளம்பரங்களைக் […]
IAMன் GOLF 2022
மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள IAM (Indian Association of Minnesota) என்ற தொண்டு நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் கால்ஃப் (GOLF) விளையாட்டுப் போட்டியைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டும் அதேபோல், அக்டோபர் ஒன்றாம் தேதி ஹேமல் (Hamel) நகரில் உள்ள ‘பேக்கர் நேஷனல் கால்ஃப் கோர்ஸ்’ இல் (Baker National Golf Course) போட்டி நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கென இரு பிரிவுகளில் இந்த விளையாட்டு இடம்பெற்றது. பலர் இந்தப் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினர். […]
IAMன் வன்முறை இல்லாத வாரம் 2022
வட அமெரிக்காவில் உள்ள மின்சோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள IAM (Indian Association of Minnesota) என்ற தொண்டு நிறுவனம் மற்றும் உள்ளூரில் உள்ள அமைந்துள்ள மற்ற தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து அக்டோபர் இரண்டாம் தேதியை அகிம்சை வாரத்தின் கடைசி நாளாகக் கொண்டாடியது. இந்த விழா மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள செயின்ட் பால் நகரில் அமைந்துள்ள மினசோட்டா வரலாற்று மையத்தில் (Minnesota History Center) நடைபெற்றது. அக்டோபர் இரண்டாம் தேதி என்றால் நினைவுக்கு வருவது மகாத்மா காந்தி அவர்களது […]
அமெரிக்க கொலு 2022
இந்தியாவில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தள்ளி இருந்தாலும், நமது கலாச்சாரம் நம்முடன் இன்றும் நெருக்கமாகத் தான் இருக்கிறது. கொரோனா என்ற காலகட்டத்தைத் தாண்டி இப்பொழுது வழக்கமான வாழ்க்கைக்கு வந்து கொண்டிருக்கையில், நவராத்திரி கொலு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கொலு வைக்கும் வழக்கம் உள்ள குடும்பத்தினர், அந்த வழக்கத்தைக் கைவிடாமல் மினசோட்டாவிலும் மற்ற வட அமெரிக்க மாநிலங்களிலும் உள்ள குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடினர். தங்கள் வீட்டு கொலு பொம்மைகளின் […]
கங்கா
“ஸாரிம்மா தீபிகா” என்றேன் உண்மையான மன வருத்தத்துடன். “இன்னும் ரெண்டே நாளில் அவளுக்கு பரிட்சை. கோபிச்சுண்டு அவள் “மூடை” அவுட்டாகிக்கியாச்சு. ஸாரி என்ன வேண்டிக்கிடக்கு? ஸாரியாம் ஸாரி…” என்று மனைவி உஷா படபடவென்று வெடித்தாள். பிறகு சுமுகமான சூழல் வரவேண்டுமே என்று எண்ணினாளோ என்னவோ, “எனக்கு வேணுமானால் வீட்டில் கட்டிக்க ரெண்டு ஸாரி வாங்கிக் கொடுங்கள்! ஸல்வார் நிறைய இருக்கு” என்றாள். என் தவற்றை உணர்ந்தேன். மேலும் ஏதாவது பதிலுக்குப் பேசினால் அது வீண் விவாதத்தில்தான் முடியும் […]
புலால் வேற்றுமை தேசியம்
தற்காலிக இறைச்சி வியாபாரத் தடைகள் இந்திய முஸ்லிம்களுக்கு அடையாள நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இது 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் குருகிராமில் (Gurugram) அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் மூடப்பட்ட இறைச்சிக் கடைகள் விவகாரம் புலால் வேற்றுமை மனப்போக்கை எவ்வாறு இந்தியப் பொதுமக்கள் எதிர்கொள்வது என்ற நீண்ட கால கேள்வியை எழுப்புகிறது. இது போன்று சமீப காலங்களில் வலதுசாரி இந்துத் தீவிர குழுக்களால் திணிக்கப்பட்ட தொடர்ச்சியான தற்காலிக இறைச்சி வியாபாரத் தடைகள் பல்வேறு இடங்களிலும் பரவி வருகின்றன என்பது அவதானிக்கக் […]
#பாய்காட்
அண்மைக்காலங்களில், இந்திய வட்டாரச் சமூக வலைத்தளங்களில் பரவலாகக் காணப்படும் சொல் ‘புறக்கணிப்பு’. இந்த புறக்கணிப்பு அழைப்புகள் அரசியல் கொள்கை, கட்சி, தலைவர் அல்லது வன்முறை இயக்கங்கள் குறித்தவை அல்ல; சமூகத்தைப் பாதிக்கும் வியாபாரப் பொருட்கள், போதை வஸ்துகள் சம்பந்தப்பட்டவை அல்ல; சுற்றுச் சூழலைப் பாதிக்கும் மாசுப் பரவல், பசுங்குடில் வாயுக்கள் பற்றியவை அல்ல; திரைப்படங்கள் குறித்தவை – அதிலும் புராணத்தை இழிவுப்படுத்தி, வரலாற்றைத் திரித்து சமூகத்தில் கிளர்ச்சியைத் தூண்டும் திரைப்படங்கள் குறித்து அல்ல; இந்தியத் திரைப்படங்களின் வழக்கமான […]
இலகுவான ஆப்பிள் பை (Apple Pie)
இந்த எளிதான ஆப்பிள் பை விஸ்கொன்சின் மாநில பல்கலைக்கழக தோழியின் தாய் அளித்த சமையற்குறிப்பு. ஆப்பிள் அறுவடை ஆரம்பிக்கும் செப்டெம்பர் மாதத்தில், இந்த இலகு முறை ஆப்பிள் பையை செய்ய விரும்புவதுண்டு. நான் பெரும்பாலும் நறுமணத்திற்கு ஜாதிக்காய் (nutmeg) சிறிதளவு சேர்க்கிறேன்; நீங்கள் விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம். தேவையானவை 9 அங்குல இரட்டை மேலோடு ஆப்பிள் பைக்கு, 1 தொகுப்பு (14.1 அவுன்ஸ்) பேஸ்ட்ரி தேவை. உள்ளூர் மளிகைக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். […]






