வார வெளியீடு
அமெரிக்காவில் 140 மில்லியன் மக்கள் ஏழ்மை பிடியில்
என்ன இவ்வளவு பெரியதா, அது எப்படி? அமெரிக்க நாட்டின் மொத்த சனத்தொகையே 328.24 மில்லியன் தானே, அமெரிக்கா செல்வந்த நாடாச்சே, அதில் எப்படி சுமார் பாதி மக்கள் ஏழைகள் என்று நீங்கள் வினவலாம். இந்நாட்டில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் தமது கல்வி, வேலைத்துறை காரணமாக. அமெரிக்க வறுமைக்கோட்டிற்கு மிகவும் அப்பால், நல்ல வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளனர். ஆயினும் அடுத்த தலைமுறையில், எமது பிள்ளைகளின் வாழ்க்கை அடுத்த 20-30-50 வருடங்களில் எவ்வாறு அமையும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவுள்ளது. […]
உள்ளூர் வாராந்த மஞ்சரியான ‘சிட்டி பேஜஸ்’ நிரந்தர மூடுதல்
மினசோட்டா மாநிலத்தில் மாற்று ஊடகப் (Alternate media) பத்திரிகையாக Citi pages கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதன் தற்போதைய உரிமையாளரான, மினியாபொலிஸ் நகர ‘ஸ்டார் ட்ரிப்யூன்’ ( Star Tribune Media Co), . கடந்த புதன் கிழமை, அக்டோபர் 28, 2020 யன்று, இந்தப் பத்திரிகையின் சகல் தொழிற்பாடுகளும் நிரந்திரமாக மூடப்படுவதாக திடீரென அறிவித்தது. சிட்டி பேஜஸின் கடைசி வெளியீடு அக்டோபர் 2020 கடைசி வாரமே. இந்தப் பத்திரிகை வழக்கமான செய்தித்தாள்களுக்கு மாறாக […]
அமெரிக்கத் தபால் சேவையின் அண்மைக்கால குறைபாடுகள்
அன்றாட தகவல் பரிமாற்றங்கள், வர்த்தகப் பற்றுச் சீட்டுகள், மருந்துகள், வயோதிகர் இளைப்பாறு காசோலைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களைச் சாதாரண மக்களுக்கு எதிர்பார்த்த நாட்களில் தரும் தாபனம் அமெரிக்கத் தபால் சேவை. தனி நிறுவனமாக இயங்கினாலும் இது ஒரு மக்கள் நலனிற்கான அரச சேவை. ஆயினும் அமெரிக்கத் தபால் சேவை நலன் கண்காணிப்புக் குழுமியம் (USPS Office of Inspector General), புதிய தபால் சேவை தலைமை அதிகாரி திரு. லூவிஸ் டிஜோய் அவர்களின் நியமனத்துக்குப் பின்னர் அமெரிக்கத் […]
2020 அதிபர் தேர்தல் முடிவுகள்
அதிபர் தேர்தலுக்கு ஒரே நாள் மட்டுமேயுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் சர்ச்சைக்குள்ளாகும் நிலை ஊகிக்கப்படுகிறது. பொதுவாக அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் தேர்தல் நாளன்றே, நள்ளிரவுக்குள் தெரிந்துவிடும். விதிவிலக்காக, 2000ஆம்ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகள் பல வழக்குகள், வாக்கு மறு எண்ணிக்கை என்று இழுபறியானது. அதற்குமுக்கிய காரணம் அப்போதைய வேட்பாளர்களான ஜார்ஜ் புஷ் மற்றும் அல் கோர் இருவருக்குமிடையே நிலவிய மிகக்குறுகலான வாக்கு வித்தியாசங்கள். வாக்கு எண்ணிக்கைப்படி அல் கோர் வெற்றி பெற்றிருந்தாலும், பிரதிநிதிகளின் வாக்குஇழுபறியை உண்டாக்கியது. […]
அயலகம் ஆராதித்த தமிழ்க்கவிஞர்
ஈரோடு தமிழன்பன் வாசகர் வட்டம், அமெரிக்கா, அமெரிக்கத் தமிழ் வானொலி, ஒருதுளிக்கவிதை, புதுச்சேரி, உலகப் பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா மற்றும் வல்லினச் சிறகுகள் இணைந்து, மகாகவி ஈரோடு தமிழன்பன் 87ஆம் பிறந்த நாள் விழா இணையவழியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பல அறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, எப்பொழுதும் மகாகவிக்காகத் தங்களுடைய பங்களிப்பைத் […]
கூகுளுக்கு எதிரான நம்பிக்கையின்மை சட்டத்தாக்குதல்
அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் கடந்த அக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை கூகுள் தாபனமானது பாரிய பல நம்பிக்கையற்ற குயுக்திகளை உபயோகித்து மின்வலய தேடுதல்,விளம்பரம் போன்றவற்றில் மற்றைய போட்டி வர்த்தகங்களை மடக்கி கட்டுப்படுத்தி அதே சமயம் நுகர்வோருக்கும் பாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டி, இது தொடர்பான சட்ட நடவடிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அமெரிக்காவின் உதவி அட்டர்னி ஜெனரல் திரு. ஜெஃப் ரோசன் கூறுகையில், கூகிள் ஈ-காமர்ஸின் மிகப்பெரிய நுகர்வோர் தேடல் அடிப்படையிலான விளம்பரம் மற்றும் ஈ-காமர்ஸின் நுழைவாயிலாக மாறி வருகிறது. இந்தக் […]
ஆங்கிள் மினசோட்டா மக்கள் நாட்டிலிருந்து துண்டிப்பு
மினசோட்டா மாநிலத்தின் வடக்கு உச்சியில் ‘நார்த்வெஸ்ட் ஆங்கி’ (Northwest Angle) எனப்படும் சிற்றூர் உள்ளது. அமெரிக்காவின் எல்லைக்குட்பட்டதாக இருந்தாலும் கனேடிய எல்லைக்குள் புகுந்து மட்டுமே இந்த அமெரிக்கப் பிரதேசத்திற்குள் போக முடியும். ஆங்கிள் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த ஊரில் 120 பேர் வசிக்கின்றனர். இது அமெரிக்காவின் மிகத் தொலைவான பகுதிகளில் ஒன்றாகும். கொரொனா தொற்று நோயின் பரவல் காரணமாக கனேடிய, அமெரிக்க எல்லைகள் பூட்டப்பட்டு இந்த ஊர் தற்போது தனித்து விடப்பட்டு, சுயமாக இயங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. […]
பொம்மைத் தொலைக்காட்சி
நவராத்திரிப் பண்டிகை வந்துவிட்டால் எங்கள் ஊர் மினியாபொலிஸ் மாநகரம் வண்ணம் பூசினாற்போல இருக்கும். இது தமிழ்ப் பெண்டிர் கொண்டாடும் பண்டிகை என்பதால், தமிழ்ப் பெண்கள் கலர் கலராகத் தமிழ் பாரம்பரியப் புடவை அணிந்து உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டிற்குச் சென்று அவர்கள் வைத்திருக்கும் கொலுவைப் பார்த்துவிட்டு, அங்கு ஓரிரு தேவி பாடல்களைப் பாடிக் கொண்டாடுவார்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் அவர்கள் இதற்காக செய்த சுண்டல் போன்ற தின்பண்டங்களும் வழங்கப்படும். அந்த நேரங்களில்,இவர்களின் கணவன்மார்கள் படும்பாட்டைச் சொல்ல வேண்டுமென்றால், இந்த […]






