வார வெளியீடு
ஆங்கிள் மினசோட்டா மக்கள் நாட்டிலிருந்து துண்டிப்பு
மினசோட்டா மாநிலத்தின் வடக்கு உச்சியில் ‘நார்த்வெஸ்ட் ஆங்கி’ (Northwest Angle) எனப்படும் சிற்றூர் உள்ளது. அமெரிக்காவின் எல்லைக்குட்பட்டதாக இருந்தாலும் கனேடிய எல்லைக்குள் புகுந்து மட்டுமே இந்த அமெரிக்கப் பிரதேசத்திற்குள் போக முடியும். ஆங்கிள் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த ஊரில் 120 பேர் வசிக்கின்றனர். இது அமெரிக்காவின் மிகத் தொலைவான பகுதிகளில் ஒன்றாகும். கொரொனா தொற்று நோயின் பரவல் காரணமாக கனேடிய, அமெரிக்க எல்லைகள் பூட்டப்பட்டு இந்த ஊர் தற்போது தனித்து விடப்பட்டு, சுயமாக இயங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. […]
பொம்மைத் தொலைக்காட்சி
நவராத்திரிப் பண்டிகை வந்துவிட்டால் எங்கள் ஊர் மினியாபொலிஸ் மாநகரம் வண்ணம் பூசினாற்போல இருக்கும். இது தமிழ்ப் பெண்டிர் கொண்டாடும் பண்டிகை என்பதால், தமிழ்ப் பெண்கள் கலர் கலராகத் தமிழ் பாரம்பரியப் புடவை அணிந்து உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டிற்குச் சென்று அவர்கள் வைத்திருக்கும் கொலுவைப் பார்த்துவிட்டு, அங்கு ஓரிரு தேவி பாடல்களைப் பாடிக் கொண்டாடுவார்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் அவர்கள் இதற்காக செய்த சுண்டல் போன்ற தின்பண்டங்களும் வழங்கப்படும். அந்த நேரங்களில்,இவர்களின் கணவன்மார்கள் படும்பாட்டைச் சொல்ல வேண்டுமென்றால், இந்த […]
கேத்தியோ ஸ்டேட் பார்க் (Kathio State Park)
மினசோட்டாவில் பத்தாயிரம் ஏரிகள் இருப்பது தெரியும். ஆனால், அதில் ஒரு ஏரி ஆயிரம் ஏரிகளுக்குச் சமமாக இருப்பது தெரியுமா? மில் லாக்ஸ் (Mille Lacs) ஏரிதான் அது. ஆயிரம் ஏரிகள் என்பதைத் தான் மில் லாக்ஸ் என்கிறார்கள். ஒரு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, மினியாபொலிஸ் – செயிண்ட் பால் நகர்பகுதியில் இருந்து சுமார் 100மைல் தொலைவில் உள்ளது. மினசோட்டாவில் நிலப்பரப்பிற்குள் அமைந்திருக்கும் ஏரிகளில் இரண்டாவது பெரிய ஏரியாகும் இது. கரையில் […]
ஒத்தையடி பாதையிலே : ஃப்ராண்டனக் ஸ்டேட் பார்க்
மினசோட்டாவில் ஏராளமான ஏரிகள் இருப்பது போல் ‘ஸ்டேட் பார்க்’ எனப்படும் மாநிலப் பூங்காக்கள் பல இங்கு உள்ளன. இவை மாநில அரசால் பராமரிக்கப்படும் இயற்கை வளம் ததும்பும் இடங்களாகும். ஒரு இடத்தின் இயற்கை அழகை, வரலாற்றுத்தன்மையைப் பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் இவ்விடங்கள் மாநில அரசால் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன. மினசோட்டாவில் இவ்வகைப் பூங்காக்கள் மொத்தமாக 66 இருக்கின்றன. நாம் இப்போது காணப்போகும் இந்த ஃப்ராண்டனக் பூங்கா (Frontenac State Park) 1957ஆம் ஆண்டு முதல் மினசோட்டா அரசால் […]
மேப்பிள் மரத்தை அடையாளம் காண்பது எப்படி?
வட அமெரிக்கா முழுதும் குளிர் பிரதேசங்களில் வளரும் மரங்களிலொன்று மேப்பிள் மரம். குறிப்பாக மினசோட்டாவில் பல வகையான மேப்பிள் மரங்கள் இருப்பினும் இளவேனில் காலத்தில் இனிய பாகு தரும் சர்க்கரை மேப்பிள் (Sugar Maple) எமக்குப் பிடித்த மரம். இதன் கிளைகள் பொதுவாக இளம் மண்ணிறத்தில் தொடங்கி, வளர்ந்த பின்னர் கடும் மண்ணிறமாக மாறும். மேப்பிள் மர இலைகள், தனித்துவமான 5 சற்றுக் கூரான பிரிவுறும் சோணைகளைக் விசிறி போல் கொண்டவை. இது கனேடிய நாட்டின் தேசிய […]
நேர்ஸ்ராண்ட பெருமரக்காடு
எமது மாநிலத்தில் வாழும் அனைவரும் அனுபவித்து மகிழக்கூடிய பெரும் விடயம் இந்நிலத்தின் எழில்மிகு இயற்கை வளமே. பன்னிரண்டு மாதங்களும், பருவகாலங்கள் நான்கு பவனி வந்து இவ்வியற்கை எழிலுக்கு வர்ணம் பூசி மெருகூட்டுகின்றன. இதில் இலையுதிர் காலம் நம்மில் பலர் பார்த்து பழகிப் போன பச்சை பசேல் ஒவியம் போல் அல்லாமல் கோலாகலமாக, பல வண்ணக் கோலமாக நிறம் மாறுகிறது மினசோட்டா மாநிலம். இதில் இன்று நாம் பார்க்கப் போவது ஒரு பண்டைய காட்டு நிலம். நேர்ஸ்ராண்ட பெருங்காட்டு […]
ஓக் மரத்தை அடையாளம் காண்பது எப்படி?
வட அமெரிக்காவின், பெரிய மரங்களில் ஒன்று ஓக் மரம். இது வருடம் முழுதும் தனியாக அடையாளம் காணக்கூடியது. ஓக் மரம், கிளைகள் பருத்தும், பரந்தும் வளரும் தன்மை மிக்கது. அதாவது தக்க காலநிலை சூழலில் ஓங்கி உயரமாகவும், அதே சமயம் உச்சியில் பல பருத்த கிளைகளையும் கொண்டு காணப்படும். இதன் கிளைகள் பொதுவாக நேரே வளராமல் பல அரும்புகளையும் உருவாக்கியவாறுள்ளது. இரண்டு கிளைகள் ஒரு போதும் பக்கத்துப் பக்கம் இரணை அரும்புகளிலிருந்து வளராது. மேலும் ஓக் மரப்பட்டை […]






