\n"; } ?>
Top Ad
banner ad

வார வெளியீடு

பிரபஞ்சன்

பிரபஞ்சன்

ஏறத்தாழ 57 வருடங்களாக தன் எழுத்தின் வழியே தமிழ் வாசகர்களின் மனதில் தனித்தன்மையான இடம் பிடித்திருக்கும் பிரபஞ்சன் கடந்த டிசம்பர் 21ஆம் நாள் காலமானார். “மனிதன் சக மனிதன்பால் அன்பு செலுத்த வேண்டும். அதற்கு அவன் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி எனில் அவன் தன்னைத் தானே புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கலையும், இலக்கியமும் ஒருவன் தன்னைத் தானே அறிந்து கொள்வதற்கு ஒரு நல்ல சிநேகிதனாய் அமையும்” என்று சொல்லி வந்தவர் பிரபஞ்சன். சொன்னதோடு […]

Continue Reading »

2018 டாப் 10 பாடல்கள்

2018 டாப் 10 பாடல்கள்

2018ஐ பொறுத்தவரை பெரிய ‘மியூசிக்கல் ஹிட்’ என்று சொல்லும் வகை படங்கள் நிறைய வெளிவரவில்லை. இவ்வருடமும் இளம் இசையமைப்பாளர்களின் ஆதிக்கம் தொடர்ந்தவண்ணமுள்ளது. வழக்கம் போல், இளையராஜா என்ன படங்களில் இசையமைத்தார் என்று தெரியாத வகையிலான படங்களுக்கு இசையமைத்தார். ஆனால், செய்திகளில் ராயல்டி தொடர்பாக அதிகம் அடிபட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லிக்கொள்ளும்படி செக்கச் சிவந்த வானம், சர்கார், 2.0 என பெரிய இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து தனது இருப்பைக் காட்டினார். கடந்த வருடங்களுக்கு ஒப்பிட்டால், இந்த வருடம் யுவன் ஷங்கர் […]

Continue Reading »

துணுக்குத் தொகுப்பு -ஆண்டு முறைமைகள்

துணுக்குத் தொகுப்பு -ஆண்டு முறைமைகள்

இன்னும் சில நாட்களில், பார்க்குமிடமெல்லாம் ‘ஹாப்பி நியு இயர்’ கோஷம் ஒலிக்கப்போகிறது. உலக நகரங்களில் ‘கவுண்ட் டவுன்’ கோலாகலமாக கொண்டாடப்படும்.  முடியப் போகும் 2018 ஆம் ஆண்டைப் பற்றிய ஒரு விசேஷம் தெரியுமா? இந்த ஆண்டு திங்கட்கிழமையன்று தொடங்கி (ஜனவரி 1) திங்களன்றே முடிகிறது. (டிசம்பர் 31). பதினோரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த விசித்திரத்தை 2029 இல் மீண்டும் காணலாம். மேலும், ஞாயிறு, திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் தொடங்கும் போது ஆண்டுகளில் அதிர்ஷ்டமில்லா தினமாக கருதப்படும் […]

Continue Reading »

வெண்ணெய் இனிப்பு (Butter Cookie)

வெண்ணெய் இனிப்பு (Butter Cookie)

நத்தார் பண்டிகை காலமென்றால் ஸ்கந்திநேவிய மக்களுக்கு அகலடுப்புகளில் பற்பல இனிப்புப் பண்டங்கள் ஆக்கும் காலம் எனலாம். கீழே இலகுவான வெண்ணெய் இனிப்புத் தயாரிப்பு முறை தரப்பட்டுள்ளது. தேவையானவை 2 கோப்பை மிருதுவான வெண்ணெய் 1 கோப்பை மண்ணிறச் சீனி (brown sugar) 4 கோப்பை கோதுமை மா (All purpose flour) தேவையானால் உணவு நிறங்கள், நறுமண வனிலா, பாதாம் பருப்பு தைலம், இனிப்புத் தூவல்கள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். செய்முறை முதலில்  அனலடுப்பை (conventional oven) […]

Continue Reading »

2018-ஆம் நிகழ்வுகள்

2018-ஆம் நிகழ்வுகள்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக் குறைவால் நவம்பர் 30ஆம் தேதி, ஹூஸ்டனில் காலமானார். ஜூன் 12, 1924 ஆம் ஆண்டு பிறந்த புஷ், 1967 முதல் பல அரசுப் பதவிகளை வகித்து வந்தவர். 1981 முதல் 1989 ஆம் ஆண்டு வரை ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்தபோது, துணை அதிபராக செயல்பட்டார். பின்னர் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்று அமெரிக்காவின் 41ஆவது அதிபராக 1989 முதல் 1993 வரை பதவி […]

Continue Reading »

திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

வாழ்க்கை  விடையில்லாத வினாக்கள் பல நிரம்பியது. உலகில் மிகச் சிலரே, மனதில் தோன்றும் வினாக்களுக்கு விடை தேட முனைவதில்லை. அவர்கள் மிக உன்னதமான மன நிலையிலிருப்போர் எனலாம். மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர்கள் இவர்கள். ஆனால் நம்மில் பலர் அவற்றிற்கு விடை காண முயல்கிறோம். அந்தத் தேடலின் முடிவில் கிடைப்பதைச் சரியான பதிலென்று மகிழ்வோர் சிலர். சில சமயங்களில்  தேடலின் முடிவுகள் புதிய, மேலும் சிக்கலான கேள்விகளை உண்டாக்கிவிடும். முன்னால் தொங்கும் கேரட்டைத் துரத்தியோடும் கழுதையைப் போல விடை […]

Continue Reading »

நிறம் தீட்டுக

நிறம் தீட்டுக

Continue Reading »

சாஹித்ய அகாடெமி விருது பெறும் ‘சஞ்சாரம்’

சாஹித்ய அகாடெமி விருது பெறும் ‘சஞ்சாரம்’

‘சாஹித்ய’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு இலக்கியம் என்பது பொருள். இந்திய மொழி இலக்கியங்களை மேம்படுத்தும் நோக்கில் 1952 இல் உருவான  சாஹித்ய அகாடெமி எனும் தன்னாட்சி அமைப்பு பிற மொழி இலக்கியங்களை இந்திய மொழிகளில் மாற்றம் செய்வது, எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி அவர்களது படைப்புகளை ஆவணப்படுத்துவது, இலக்கிய கூட்டங்கள் நடத்துவது என பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. அது மட்டுமின்றி, எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் பலவித விருதுகளை அளித்து வருகிறது. இந்திய அரசு அங்கீகரித்துள்ள 24 […]

Continue Reading »

கிறிஸ்துமஸ் பெருவிழா

கிறிஸ்துமஸ் பெருவிழா

எங்கும் சில்லென்ற குளிர், பனி படர்ந்த புல்வெளி. நீண்ட விடுமுறைக்காகவும், அன்பைப் பகிர்ந்துகொள்ளும் சாண்டா  கிளாஸின் பரிசுக்காக ஆவலோடு காத்திருக்கும் குழந்தைகள்…!!! இவ்வாறு உலக மக்கள் அனைவரும் மகிழ்வோடு எதிர்பார்த்திருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். டிசம்பர் 25 ம் தேதி,  இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஆண்டு விழா ஆகும்,  இயேசு கிறிஸ்து மனிதகுலத்தை, பாவ நிலையிலிருந்து மீட்க மனித உருவத்தில் உலகத்திற்கு வந்தார். இவ்வுலகத்தில் ஒரு மனிதன் தனது வாழ்வை தொடங்கும் முதல் நாள்தான் அவர்களுடைய பிறந்த […]

Continue Reading »

வாழ்வில் குறிக்கோள் அமைப்பது எப்படி?

வாழ்வில் குறிக்கோள் அமைப்பது எப்படி?

வாழ்வில் குறித்த கருமத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய பக்குவமான  சிந்தனை அவசியம். இதில் முதல் கட்டம் நாம் தகுந்த குறிக்கோள்களைப் பகுத்து, ஆய்ந்து எடுத்துக் கொள்கிறோமா என்று அறிந்து கொள்வது தான். அதாவது நாம் ஒரு கருமத்தைத் தெரிவு செய்யும் போது, இந்த விடயம் எமக்கு எவ்வளவு முக்கியம் என்று உணர்வது  முக்கியம். வெளியில் நாம் எவ்வாறு நடந்து கொள்ளினும், எமது மனதில் ஆழமான முக்கிய மதிப்பீடுகள் எமது அன்றாட வாழ்வில் எம்மை ஆட்கொள்கின்றன. இதை உணர்ந்து […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad