பலதும் பத்தும்
அதிபராக ஜோ பைடனின் முதலாண்டு – ஒரு பார்வை

அதிபர் ஜோ பைடன், ஜனவரி 20ஆம் தேதியன்று தனது பதவிக் காலத்தின் முதலாண்டை நிறைவு செய்துள்ளார். எண்பது மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பெற்ற முதல் அதிபர் என்ற பெருமை அவருக்காகக் காத்திருந்தது. பாரம்பரிய பதவியேற்பு விழாவே நடைபெறுமா என்ற கலவர அச்சம் சூழ்ந்திருந்த நிலையில், திறந்த வெளியில் பதவியேற்றுக் கொண்டு, “இது தனிமனித வெற்றியல்ல; ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்டுள்ள உங்களின் வெற்றி” என அவர் ஆற்றிய உரை புதியதொரு நம்பிக்கையைத் தந்தது. ஒவ்வொரு தினமும் பத்து இலட்சம் (1 […]
புஷ்பா – தி ரைஸ்

சேல சேல சேல கட்டுனா… குறு குறு குறுன்னு பாப்பாங்க !!! குட்ட குட்ட கௌன போட்டா… குறுக்கா மறுக்கா பாப்பாங்க !!! சேல ப்ளௌஸோ, சின்ன கௌனோ… ட்ரெஸ்ல ஒண்ணும் இல்லங்க !!! ஆச வந்தா, சுத்திச் சுத்தி… அலையா அலையும் ஆம்பள புத்தி !!! ம்ம் சொல்றியா மாமா… ம்ஹூம் சொல்றியா மாமா … ம்ம் சொல்றியா மாமா… ம்ஹூம் சொல்றியா மாமா ?? – தமிழ் . […]
வரிகள் குறைக்கும் வழிகள்

அமெரிக்காவில் வருமான வரி வழக்கம் தொடங்கி நூற்றி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. முதன்முதலில் 1913 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அச்சமயம் அதிகபட்ச வரியாக 7% மட்டுமே இருந்தது. பின்னர், இரண்டாம் உலகப் போரின் சமயம், அதிகப்பட்ச வரி 94% வரை சென்றது. 1960களில் இருந்து 1980களில் 70% ஆகக் குறைந்த உச்சபட்ச வரி, அடுத்த சில ஆண்டுகளில் 50% என்ற நிலைக்கு வந்து, கடந்த முப்பது வருடங்களாக 30-40% என்ற எல்லைக்குள் ஏறி […]
பட்டம் பறக்கும் விழா

மினசோட்டா மாநிலத்தில் உள்ள ஹாரியட் ஏரி பூங்கா (Harriet Lake) சுமார் 470 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஏரியின் நடுவில் இந்தப் பட்டம் பறக்க விடும் திருவிழா கடந்த மாதம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருவிழாவில் மக்கள் பலவிதமான பட்டங்களைக் கொண்டு வந்து, அதை மேல் நோக்கிப் பறக்க விட்டனர். இப்பொழுது மினசோட்டாவில் குளிர்காலம் என்பதால் அனைத்து மக்களும் வெளியே செல்வதற்கு ஏதாவது பொழுதுபோக்கு வேண்டும் என்று இந்தத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். இந்தத் திருவிழாவில் […]
ரசனை வசப்படுமா?

முன்பு எப்போதேனும் படம் பார்ப்போம். நமது அபிமான நடிகர் நடித்த படம் என்றால், எப்படி இருந்தாலும் பார்த்து விடுவோம். இல்லையென்றால், படம் நன்றாக இருக்கிறதென்று யாராவது சொன்னால் பார்த்துவிடுவோம். இல்லை, பொழுது போக்க வேண்டும் என்றிருந்து, படம் நல்லாயில்லை என்று சொன்னாலும், திரையரங்கு சென்று படம் பார்ப்போர் உண்டு. இருக்கும் திரையரங்குகளில் நான்கு படங்கள் ஓடும். அதில் ஏதேனும் ஒன்றைப் பார்த்துவிட்டு திரும்புவோம். செலவையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். அதே போல், தொலைகாட்சியில் படம் பார்ப்பது என்றால், […]
சார்லட் நகரில் பெண்கள் நிகழ்த்திய தமிழ்ப் புத்தகக் கண்காட்சி

“என் புத்தகங்களில் இடம் பெற்றது போன்ற மாய மந்திரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நல்ல புத்தகங்களைப் படிக்கும் போது உங்களுக்குள் மாயங்கள் நிகழும் என்பதில் எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை” என்பார் ஜே.கே ரௌலிங் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர். அமெரிக்காவில், முற்றிலும் பெண்களே நடத்தும் ஒரு தொடர் புத்தகக் கண்காட்சியை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது உலகப் பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா மற்றும் வல்லினச் சிறகுகள் மின்னிதழ், அட்லாண்டா நிறுவனர் மதிப்பிற்குரிய முனைவர் தி. […]
175 தமிழ்ப் புத்தகங்கள் வெளியீட்டு விழா – அட்லாண்டாவில் இளம் எழுத்தாளர்கள் சாதனை!

வட அமெரிக்க வரலாற்றிலேயே, எழுத்தாளர் திரு. இராமகிருஷ்ணன் தம் வாழ்த்துரையில் கூறியது போல் தமிழ் கூறும் நல்லுலகின் வரலாற்றிலேயே, முதல் முறையாக அட்லாண்டாவைச் சேர்ந்த கம்மிங் தமிழ்ப் பள்ளியும், Tamilezhudhapadi.org உம் இணைந்து, செப்டம்பர் 12. 2021 அன்று 175 இளம் எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம். இந்தப் பயணம், “நான் ஏன் தமிழ் படிக்க வேண்டும்” என்று கேட்ட அமெரிக்காவில் வாழும் ஒரு தமிழ்க் குழந்தையிடமிருந்து தொடங்கியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? தமிழை நோக்கி அவர்களை […]
பண்ணையில் ஒருநாள்

”மாடு கண்ணு மேய்க்க, மேயிறதப் பாக்க மந்தைவெளி இங்கு இல்லையே” என ‘சொர்க்கமே என்றாலும்’ பாடலைப் பாடியபடி அங்கலாய்த்துக்கொள்பவர்கள் சொல்லும் ஒரு விஷயம் – நம்மூரைப் போல ஆடு, மாடு போன்றவற்றை இங்கே அமெரிக்காவில் காண முடிகிறதா, தடவிக்கொடுக்க முடிகிறதா என்று தான். ஏன் முடியாது என்று சொல்லத்தான் இந்தப் பதிவு. அமெரிக்காவிலும் நகர்புறங்களைத் தாண்டு வெளியே சென்றோமானால், பெரும்பாலும் விவசாய நிலங்களைத் தான் காண முடியும். ஆடு, மாடு, குதிரை மேய்வதைப் பார்க்க முடியும். […]
அருவியில் கண்ணாமூச்சி

ஆசியோலா என்ற சிற்றூரின் வெளிப்புறத்தில் ரயில் பயணத்தை முடித்துவிட்டு, ஊருக்குள் நுழைந்தால், ஒரு அமெரிக்கப் பூர்வக்குடி வீரனின் சிலையைக் காண முடியும். கம்பீரமாக நிற்கும் அந்த வீரனின் பக்கத்தில் கேஸ்கட் அருவி (Cascade falls) என்றொரு பலகையும் அதன் பக்கத்தில் கீழ் நோக்கி செல்லும் படிக்கட்டுகளுக்கான வழியும் இருக்கும். கீழே இறங்குவதற்கு முன்பு, அந்த வீரனைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஆசியோலா என்றழைக்கப்பட்ட அந்த வீரனின் இயற்பெயர் பில்லி பாவல் (Billy Powell). 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து […]