Tag: Haloween
காத்து இருப்பு
	
								அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸுக்குள் நுழையும்போதே மணி ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது. காரின் ஹெட்லைட் வெளிச்சம் பாய்ந்த இடத்தைத் தவிர அந்த வளாகமே கும்மிருட்டாகயிருந்தது. காலியாக இருந்த பார்க்கிங் இடைவெளியில் கார் நின்று, இஞ்சின் அணைந்ததும், அந்தப் பகுதி முழுதும் இருட்டை அப்பிக்கொண்டது. வண்டியிலிருந்து இறங்கிய மாயா கைபேசியின் ஃப்ளாஷ்லைட்டை ஆன் செய்துவிட்டு, பின் கதவைத் திறந்து தனது லாப்டாப் பையை எடுத்துக் கொண்டு, அபார்ட்மெண்டின் பிரதான வாயிலை நோக்கி நடந்தாள். தூரத்தில் வானளாவ உயர்ந்திருந்த அதிநவீன வர்த்தக கட்டடங்களின் விளக்குகள் […]
வென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 2
	
								பகுதி 1 அந்த கரிய நிற மெஷின் கன்னைப் பார்த்தவுடன் சர்வ நாடியும் ஒடுங்கியது கணேஷிற்கு. உடனடியாகத் திரும்பி, அந்த ஜெர்மன் டிரைவரைப் பார்க்க, அவருக்கும் குண்டலினி தொடங்கி துரியம் வரை குளிர் ஜுரம் பற்றிக் கொள்ள, இதுவரை வெறுத்த இந்த ப்ரௌன் ஸ்கின் இண்டியனை ஒரு ஆதரவுடன் பார்த்தார். “டிரைவ்…. டிரைவ்….. கோ … கோ.. கோ… டோண்ட் ஸ்டாப்….” என்று சைகையுடன் ஆங்கிலத்தில் இன்ஸ்ட்ரக்ஷனஸ் கொடுத்துக் கொண்டிருக்க, அவரும் திடீரென் வின்ஸ்டன் சர்ச்சிலாக மாறி, […]
ஹாலோவீன் கார்த்திகை கவர்ச்சி விளக்குகள்
	
								ஊருசனம் ஓய்ந்திருக்கு; ஊதல் காற்றும் அடிச்சிருக்கு. வெட்ப தட்ப மாற்றம் வழமை போல் வருகிறது வட அமெரிக்காவிற்கு. பகலவனாகிய சூரியன் பருவகாலம் தொட்டுப் பதுங்குகையிலும் பாங்காக வருகிறாள் இயற்கையன்னை. இலையுதிர்காலத்தை , அவள் தன் இயல் வண்ணத் தூரிகைகளுடன் வரைகிறாள். பனிப்பூக்கள் எழுத்தாளர் சரவணக்குமரன் அவரது வர்ணஜாலக் கட்டுரையில் வர்ணித்தது போல் மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, செவ்வூதா நிறங்கள் வட அமெரிக்கக் காடுகள், மேடுகள், ஏரிக்கரைகள், ஆற்றோரங்கள் என அனைத்தையும் எழிலோடு மின்ன வைக்கின்றன. இயற்கையன்னை […]






	