Top Add
Top Ad

கவிதை

முடிவில்லாப் பயணம்!!

முடிவில்லாப் பயணம்!!

மூடுபனிக் காலத்துப் பனிச் சாரலில் முழுமதி  இரவின் ஒளி ஊடுருவலில் முகவரி அறியாக் காதலைத் தேடி முடிவில்லாது பயணிக்கிறேன்…!   கானல் நீரோ …? காட்சிப் பிழையோ …? காதல் நெஞ்சில்  கவிப் பாடிட கடைவிழி யசைவில் விழுந்த நானோ கட்டுண்டு கிடக்கிறேன் அவளாளே …!   மகரந்தம் வீசும் மானசீகக் காதலில் மங்கை மனதினில் புயல் மையம் கொண்டிட மணாளனின் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்திட மண்டியிட்டு தொழுகின்றேன்  மனதாலே ..!   இன்னிசை மழையில் நனைந்து […]

தொடர்ந்து படிக்க »

எனைப் பெத்தவளே …!!

எனைப் பெத்தவளே …!!

இருட்டு அறையின் இதயத் துடிப்பில் இன்பமாய் உறங்கினேன் இனி வேண்டினாலும்  கிடைக்குமோ ..!   கண்ணிமைக்கும் நொடியிலும் கண்ணிமைக்காது காத்தவள் காத்துக்கறுப்பு அடிச்சுடும்னு கண்ணுக்குள்ளே  குலசாமியா காத்தவளே ..!   அமுதளித்த அன்னபூரணியான அன்னையின் மடியில் அந்திப்பொழுதில் தலைசாய்க்கையில் அகிலமெல்லாம் நிறைஞ்சவளே ..!   உறவுகளின் பாலமானவளும் உன்னதத்தின் மகத்துவத்தை உள்ளத்தில் திரைகடலோவியமாய் உயிர்களின் உயிராய்க் காத்தவளே ..!   எனைப் பெத்தவளே ..!! நீ ஆண்டு நூறு வாழவேணும் …!! எனைப் பெத்த மகராசி ..!! […]

தொடர்ந்து படிக்க »

காதல்

காதல்

அந்தி சாயும் வேளையிது மல்லியின் வாசம் வருடுகிறது தென்றல் என்னை இழுக்கிறது காதலன்  வரவிற்காக  ஏங்குகிறது …!   சோலைக்குயில் கூவும் நேரமிது உறைபனியின் நடுக்கம் குறைகிறது பால்நிலவு அவளால் எரிகிறது கண்ணாளனை நோக்கியே காலம் கனிகிறது..!   காதலில்  இன்பம் பொங்குகிறது மோகத்தின் வேதனை பொங்குகிறது இதழில் கவியெழுதத் துடிக்கிறது காதலனின் நெஞ்சில்  சாய்ந்திடத் துடிக்கிறது …!   மோகத்தின் உச்சத்தில் உறைகிறது மனம் இன்பத்தின் லயத்தில் லயிக்கிறது இரவின் நீலத்தை வேண்டுகிறது காதலனின் வரவை […]

தொடர்ந்து படிக்க »

வித்தகன் பாலகுமாரன்!

வித்தகன் பாலகுமாரன்!

என்னெழுத்தின் வித்தவன் எழுதுவதில் வித்தகன் எத்துறையிலும் வித்துவான் எத்தலைப்பையும் விளக்குவான்! மாதவப் பெரியோரையும் மாதவிடாய்த் துயர்களையும் மானுடனின் வாழ்க்கையையும் மாண்புடனே படைத்திட்டவன்!! இறையருளை ஏத்தியவன் இரைந்துநீதி பேசியவன் இகவாழ்வு நீத்துச்சென்று இறையடியில் அமைதிகாண்க!! -மதுசூதனன் (Picture Courtesy: http://www.writerbalakumaran.com) 0

தொடர்ந்து படிக்க »

ஒரு நாள் போதுமா?

ஒரு நாள் போதுமா?

சேருங்காலச் சுகத்தில் உதித்த உயிரை ஒருமுழக் கொடி பிணைத்த உடம்பை பிரித்தெறிந்த நொடியில் அணைந்து போகாது வரிந்தெடுத்து நெஞ்சோடு அணைத்த வித்தகமே! அன்று தொடங்கி அந்தம் வரையில் என்றும் சேய்நலம் கருதும் தாய்மையே நின்றன் திருப்புகழை நினைந்து உருகிட இன்றொரு நாள் மட்டும் போதுமா? உந்தியெழும் சூரியன், அந்திசாயும் சந்திரன் சிந்திச்சிதறும் கார்காலம், நிந்தைதரு வேனிலென விந்தைமிகு இயற்கையது பிறழ்ந்து தவழ்ந்தாலும் சிந்தைமாறா சிரத்தையோடு மக்களை நேசிப்பாயே! துறவுபூண்ட ஞானிகளும் மறக்கவியலா உறவு வரவுஅளக்கும் வணிகரும் கணிக்கவியலா […]

தொடர்ந்து படிக்க »

விடியும் நல்ல நாளை

விடியும் நல்ல நாளை

விளம்பி  வருடம் வரும் நேரம் விளிம்பில் வெதும்பி நிற்கிறது தமிழகம்! விரும்பியோ விரும்பாமலோ தமிழ் எனது விலாசம் விருந்தினரை வந்தாரை வாழவைப்பது எம் கலாச்சாரம்!   விளம்பரத்திற்காக இந்தியனை வேற்றுமைபடுத்தி வீண் கலகம் செய்து  விஷத்தை கக்கும் விஷமிகளின் வஞ்சனை வலையில் வீழ்ந்து விந்தைகாரர்களின்  வசீகரத்தில் கட்டுண்டுக் கெட்டது!   வினோதமாய் அன்னியமானது என் தமிழகம் இன்று! வீறுகொண்ட தன்னலமற்ற தலைவனைத் தேடுகிறது விவேகமான விவேகானந்தரின் இளைஞனுக்கு ஏங்குகிறது! வித்திட்டவரல்லவா நாம்? நாகரீகத்துக்கு வித்திட்டவரல்லவா நாம்   […]

தொடர்ந்து படிக்க »

முதுமைக் காதல்

முதுமைக் காதல்

மெருகூட்டும் உன் கன்னங்கள் மருவற்ற முகத்திற்கு அழகு சேர்க்க!!   மொழிபேசும் உன் இதழை மெய்மறந்து நான் பார்த்திருக்க வளையோசை கேட்டுக்கொண்டே மடிமீது தலை சாய்க்க!!   அசைந்தாடும் கூந்தல்; அதில் அலைபாயும் காற்று இசையாவும் உந்தன் கால்கொலுசில் விளையாடும் அழகே!!   கதைபேசும் கவிதையே கைகோர்க்கும் தாரகையே விலைபேசும் உன் கண்ணோடு உரையாடல் நான் தொடங்க!   வார்த்தைகள் தடுமாறி குறிலும் நெடிலுமாய் முடிவுற்று போயின! எதைச் சொல்லி மறைப்பேன் – நான் உன் சிரிப்பொலியில் […]

தொடர்ந்து படிக்க »

புன்னகை

புன்னகை

வரிகள்  இல்லாத பொது மொழி வார்த்தைகள் சேராத வாய்மொழி உதடுகளின் விரிப்பில் மனதை மயக்கிய மாய மருந்து…   சில காலடித் தூர நடை ஒரு சிறு சுவர் தாண்டல் உதிர்த்த சிறு புன்னகை பகை மறந்த கை குலுக்கல்   ஒற்றை மரம் நடுதல் சுயம் இழக்காத உறவாடல் அத்தனையும் சேர்ந்து அறுத்ததெறிந்தது ஆறாப் பகையை     தியா –     +6

தொடர்ந்து படிக்க »

கவித்துளிகள் சில…

கவித்துளிகள் சில…

  அம்மாவின் ஓயாத இருமல் கண்ணீராய் வெளிவரும் ஆண்டுகள் கடந்த தாய்ப்பால்   ***** கோடை வெயில் நிழலை அழித்தது திடீர் மழை ***** தப்பித்த சிறு பூச்சி பேருருவாய் மேல் விழுந்தது மின்விளக்கின் மேல் தஞ்சம் ***** தென்றலின் இனிமைப் பேச்சு விழுந்து சிரிக்கும் சருகுகள் அச்சத்தோடு மனிதன் ***** அகன்ற கருப்புத்தாள் கண்மூடி எழுதுகிறேன் இரவுக் கவிதை   சா. கா. பாரதி ராஜா         0

தொடர்ந்து படிக்க »

அம்மா

அம்மா

தன்னகத்தே இன்னும் ஓருயிராய் தவப்புதல் கொண்டு பெண்ணகத்தே உண்டான பெருமிதம் கொண்டு கண்ணகத்தே காக்கின்ற இமைபோல என்னை உன்னகத்தே காத்தருளினாய்! கால்பதிவுகள் முதலில் உன் கருவறையில் தொடங்கி உன்னை உதைக்கும் போதிலும் கண்ணே! மணியே என்றென்னை தடவிக் கொடுத்து கதைகள் பேசி மொழி பயிற்றுவித்து விதையிட்ட நற்செயல் யாவும் உன் கருவறையிலேயே தொடங்கிவிட்டாய்! வலிமை சேர்த்து வலியைத் தாங்கி என் இதயத்தைத் தனியாய் இயங்க வைத்தாய்! நடைபயிலும் போதெல்லாம் நான் பிடிக்கும் உன் விரல்கள் பசியாறும் வேளையெனில் […]

தொடர்ந்து படிக்க »

banner ad
Bottom Sml Ad