admin
admin's Latest Posts
மின்னேசோட்டா பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம்
மின்னேசோட்டா தமிழ்ச்சங்கப் பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம் அட்வான்செட் (Advanced) எனப்படும் கல்விக்கான மிக உயரிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் மினசோட்டா தமிழ்ப்பள்ளிக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முழு பரிந்துரையை அண்மையில் வழங்கியிருக்கிறது. அட்வான்செட் (www.advanc-ed.org) எனும் இந்நிறுவனம் கல்வி நிலையங்களின் ஆற்றலைப் பல பரிமாணங்களில் ஆய்வு செய்து தரச் சான்றிதழ் வழங்கும் உலகளாவிய நிறுவனம் ஆகும். இதுவரையில் இந்நிறுவனம் உலகம் முழுதும், ஏறக்குறைய 20 மில்லியன் மாணாக்கர் பயிலும், 32,000 கல்வி நிலையங்களுக்கு அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-9
தகுதிக்கேற்ற தொழிலின்மை தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் நிற-இன ரீதியிலான வேறுபாடுகள் அதிகளவில் உணரப்பட்டன. தாயகத்தில் ஓரளவு படித்த பலரும் புலம்பெயர்ந்து சென்று தமது அந்தஸ்து, தகுதியை விடுத்து அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் காரணமாக எந்த வேலையினையும் செய்யத் துணிந்தார்கள். புதிய இடம், அந்நிய மொழியறிவு இன்மை போன்றனவும் புகலிடத் தமிழர்களை மிகவும் பாதித்தது. “தகுதி வேலை ஊதியம் சமன்பாடு குழம்பிய நிலையில் இன்னுமொரு முதலாளித்துவத் தெருவில் நான் ஒரு பிராங்கெனினும் என் […]
இயக்குனர் சிகரத்தின் இறுதிப் பயணம்
தமிழ்த் திரையுலகின் இயக்குனர் சிகரம் திரு. கே. பாலச்சந்தர் கடந்த செவ்வாய், டிசம்பர் 23ம் தேதி காலமானார். கைலாசம் பாலச்சந்தர் 1930 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஒன்பதாம் தேதி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்தில் பிறந்தவர். அறிவியலில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்று ஏ.ஜி.ஸ் (அக்கவுண்டன்ட் ஜெனரல்) அலுவலகத்தில் எழுத்தராக பணி புரிந்து வந்தார். இங்கு அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து நாடகங்கள் எழுதி, நடித்து அரங்கேற்றி வந்திருக்கிறார். ‘எதிர் நீச்சல்’, ‘நாணல்’, ‘மேஜர் சந்திரகாந்த்’ போன்ற […]
சிவாஜி என்றொரு சிம்மம்
கம்பீரத் தோற்றம், கண்ணியத் தோரணை, கர்வம் கொண்ட கூரிய பார்வை இவற்றின் அடையாளம் ‘சிவாஜி கணேசன்’ என்ற ஏழு எழுத்துக்கள். வி.சி. கணேசன் என்ற துடிப்பான இளைஞன் தனது நடிப்பாற்றலின் திறனால், உலகமெங்கும் வியாபித்திருக்கும் தமிழரின் மனங்களில், செதுக்கிய எழுத்துக்கள். தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் கிராமத்தைச் சேர்ந்த சின்னையா மன்றாயர், ராஜாமணி ஆகியோருக்கு பிறந்தவர் கணேசமூர்த்தி. வேட்டைத்திடல் சின்னையா கணேசமூர்த்தி என்பதே பின்னர் வி.சி. கணேசன் என்றானது. ராஜாமணி அம்மையார் விழுப்புரத்திலிருந்த தனது தந்தை வீட்டில் […]
பார்த்ததில் ரசித்தது
”சிவாஜிக்கும் எம்.ஜி.ஆருக்கும் சண்டை வச்சா, ஆரு செயிப்பாக?” – எனக்கும் என் நெருங்கிய நண்பன் வெங்கடேசனுக்கும் சிறு வயதில் அடிக்கடி வரும் தகராறு இதுவே. நாங்களிருவரும் அவ்வளவு ஒற்றுமையான நண்பர்கள், ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் இருவரும் கீரியும் பாம்பும் போலச் சண்டை போடுமளவுக்கு விரோதிகள். மிகத் தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகன் அவன். நான் சிவாஜி கணேசனென்றால் உயிர் கொடுக்கவும் தயார்.. ”எம்.ஜி.ஆர் மாதிரி கத்திச் சண்டை போடமுடியுமாடா சிவாஜியால?” பொதுவாக என் தீர்ப்பு அனைத்தையும் மறு […]
மிஸிஸிப்பி நதி
அமெரிக்க நாட்டின் மிகப்பெரிய ஆறு மிஸிஸிப்பி நதி ஆகும். அதை ஆங்கிலத்தில் உச்சரிப்பதே சிறுவருக்கு ஒரு தனி மகிழ்ச்சி. MiS-SiS-Sip-Pi என்று பிரித்துக் கூறும்பொழுது சற்று வேடிக்கையாக இருக்கிறதல்லவா?. இவ்விடம் நாம் மணிக்கூட்டில் வினாடிகளைச் சரியாக எண்ணவும், கண்ணாமூச்சி விளையாடவும் One-Mississippi Two-Mississippi என்று உரத்துக் கூறி விளையாடுவதும் உண்டு. மிஸிஸிப்பி ஆறு ஆனது மினசோட்டாவில் வாழும் சிறுவர்கள் அறிந்த, பார்த்திருக்கும் பெரும் ஆறு ஆகும். இது மினசோட்டா மாநில ஐதாஸ்கா (Itasca) ஏரியில் ஆரம்பித்துப் பெரும் […]
சி்ப்பிக்குள் முத்து எப்படி வந்தது?
முத்துமாலை, தொங்கட்டான், சிமிக்கி எனப் பளபளக்கும் நகைகளை அம்மாக்கள், அக்காக்கள், பாட்டிமார் எனப் பலரும் பல சுப நேரங்களில் அணிந்திருப்பதைப் பார்த்திருப்போம். இந்த முத்துக்கள் ஒரு சிறு குறுமணி மணல் ஆனது சிப்பிக்குள் போய் உருவானது என்றால் நம்புவீர்களா? சிப்பியானது ஒரு கடலின் அடிப்புறத்தில் வாழும் உயிரினம். சி்ப்பியானது உலகளாவிய கடலின் பல இடங்களிலும் காணப்படும். ஆயினும் முத்துத்தரும் பெரும் சிப்பியானது உலகில் சில வெப்பமான கடல் மணற்தரைகளில் மட்டுமே காணப்படும். மிருதுவான உள்ளுடலையும் பலமான வெளிச்சுவரையும் […]
முக்தி
கோவிந்த ராஜய்யரின் கவலையெல்லாம் ஒன்றே. சில நண்பர்களிடம் மட்டும் சொல்லி அங்கலாய்ப்பார். “பகவான் நல்ல வாழ்க்கையைக் கொடுத்துட்டான், ஒரு குறை இல்லாம குடும்ப ஷேமத்தைப் பாத்துண்டான்… இருந்தாலும் மனசைப் போட்டு வாட்டற ஒரே விஷயம் நேக்கு ஒரு புள்ளக் கொழந்த இல்லையேங்கறதுதான்.. நானும் லக்ஷ்மியும் என் பொண்ணு பிரபாவைப் புள்ள மாதிரிதான் வளத்தோம்.. ஆனாலும் கட்டையில போற காலத்துல அவளால எனக்குக் காரியம் செய்ய முடியாதே… புள்ள கையால காரியம் செஞ்சுக்காம பரலோகத்துல முக்தி கெடைக்கறது எப்டி?” […]







