admin
admin's Latest Posts
நல் நுண்ணுயிர்களும் (Pro-Biotics) நாணயமான தமிழ் உணவுகளும்
பாக்டீரியா (Bacteria) எனப்படும் நுண்ணுயிரி என்ற சொல்லைக் கேட்டவுடனே சாதாரணமாக நமது மனதில் தோன்றுவது என்ன? அது ஒரு கிருமி, எனவே தொற்றாமல் உடன் விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதே. இதை வழிவகுத்தது சென்ற நூற்றாண்டுச் சுகாதாரக் கல்வி. சராசரி மக்களின் கண்ணோட்டத்தை அவதானித்தால் இது இலகுவில் தெளிவாகும். தமிழர் தாயகங்களில் வெளிவரும் விளம்பரத் தகவல்களை எடுத்துப் பார்த்தாலும் பொதுவாக இம்மனோநிலையே தொடர்ந்தும் பேணப்படுகிறது எனலாம். இன்றும் கிருமிகளை அழிக்க டெட்டால், ஃபினைல், லைசால் போன்ற விளம்பரங்கள் […]
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி முத்தும் பவளமும் பூண்டோடி ஆடி முடிந்த பின்பு செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம் பிணங்கள் கத்தும் கணக்கென்ன காண் கயிலா புரிக் காளத்தியே!!! பொட்டிலடித்தாற் போன்றதொரு தத்துவ விளக்கம் நான்கு வரிகளிலே. செத்துக் கிடக்கும் இன்றைய பிணத்தருகே, நாளை சாகப் போகும் இன்னொரு பிணம் அழுகிறதாம். மனித வாழ்வு நிலையற்றது என்ற தத்துவத்தை இதைவிட அழகாகவும், எளிதாகவும், சுவையுடனும் கூறிய ஒப்புயர்வற்ற தமிழ்க் கவி, சித்தர் பட்டிணத்துப் […]
எசப்பாட்டு – உயிர்
அன்னையின் தயவாலே அகிலத்தில் வந்துதித்து
முன்வினைப் பயனாலே முழுதான வாழ்வுபெற்று
தன்வினைச் செயலாலே தரைமீது இன்னலுற்று
நல்வினை எதுவென்றே நயமாக உணரமுனைந்து
உமா மகேஸ்வரி
சங்கமம் 2014 தெருக்கூத்து நிகழ்சியின் அணிகலன்கள் வடிவமைப்பாளரும் ஒப்பனையாளருமான திருமதி உமாமகேஸ்வரி அவர்களை மின் அஞ்சல் மூலமாக ஒரு பேட்டி கண்டோம்.அவர் வடிவமைத்திருந்த அணிகலன்கள் மற்றும் ஒபனைகள், நிகழ்சியை கண்டுகளித்த அனைவரது பாராட்டையும் பெற்றது. 1. உங்களைப் பற்றியும் உங்கள் ஊர், குடும்பம் மற்றும் வளர்ந்த சூழல் பற்றி எங்கள் பனிப்பூக்கள் வாசகர்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்? என் பெயர் உமாமகேஸ்வரி . எனது ஊர் மதுரை. எனக்கு மூன்று அண்ணன்மார்கள் உள்ளனர். எங்களுக்கு ஒரு மகன் (13 வயது) […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 12
அத்தியாயம் 11 செல்ல இங்கே சொடுக்கவும் “லாந்து” என்ற வார்த்தையின் பொருள் உலவுதல். ஒரு செயல் நடந்த இடத்தை அந்த செயலோடு தொடர்பு படுத்திச் சொல்வது நம் தமிழ் மரபு. உதாரணமாக போர் நடந்த இடங்களைப் போரூர் என்றும், மன்னர்கள் அல்லது பெரும் வீரர்கள் போர்களில் வீரமரணம் அடைந்த ஊர்களின் பெயரில் “பட்டு”(பட்டுப் போகுதல்) என்ற சொல் இணைந்திருப்பதையும் காணலாம். தாய்லாந்து மக்கள் சுதந்திரமாய் உலவிய இடம் தான் தாய்லாந்து எனப் பெயர் பெற்றிருக்க வேண்டும். […]
யாழ் தமிழ் – சென்னைத் தமிழ் (பாகம் – 2)
ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் பேசப்படும் மொழி தமிழாக இருப்பினும் இரண்டுக்கும் இடையில் பெரியளவிலான உச்சரிப்பு வேறுபாட்டினை அவதானிக்கலாம். ஈழத்திலும் பிரதேசத்துக்குப் பிரதேசம் இந்த மாறுதல் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் உண்டு. ஆனால் ஈழத் தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் இடையில் பல சொற்கள் வேறுபட்டு வழங்கக் காணலாம். எனக்கு நன்கு பரிச்சயமான யாழ்ப்பாணத் தமிழுக்கும், சென்னையில் வசித்த காலத்தில் பேசிய சென்னைத் தமிழுக்கும் இடையிலான சில சொல் வேறுபாடுகளைப் புரிதல் விரும்பி இங்கு பதிவிலிடுகிறேன். ”மொழி என்பது ஒன்றை […]
மினசோட்டாவில் ஆன்மீகம்
வரலாறு தெரிந்தவரை மனிதன் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவனாகவே இருந்திருக்கிறான். உலக நாடுகளில் மக்கள் பல்வேறு கடவுளரை வழிப்பட்டுத் தங்களது ஆன்மீக உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். அடிப்படையாக நமக்கு மேலே ஒருவன் நம்மைக் காப்பாற்றுகிறான் எனும் நம்பிக்கை பெரும்பாலான மக்களிடையே உண்டு. வானத்தில் பறந்து வாடிகன் (Vatican) போனாலும் , கால் வலிக்க நடந்து கைலாயம் சென்றாலும் இறைவனை வணங்கும்பொழுது இருகண்கள் மூடி பார்வை உள்நோக்கி இருகரம் கூப்பி வழிபடுவதில் உள்ள ஒற்றுமை விந்தை தான். மனிதனுக்கு வலி பிறக்கையில் […]
முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 2
பன்னிரெண்டு கோபக்கார மனிதர்கள்(12 Angry Men) இந்த இதழில் பன்னிரெண்டு கோபக்கார மனிதர்கள் (12 angry men) என்ற நாடக வகையைச் சேர்ந்த ஆங்கிலத் திரைப்படத்தைப் பற்றி பார்ப்போம். இந்த திரைப்படம் யுனைட்டட் ஆர்ட்டிஸ்ட்ஸ் என்ற நிறுவனத்தினரால் ஏப்ரல் 04 1957ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதை தயாரித்தவர்கள ஹென்றி ஃபொண்டா மற்றும் ரெஜினால்ட் ரோஸ். போன அத்தியாயத்தில் நாம நிலாவிற்கு சென்று வந்த கதையைப் பார்த்தோம். இந்த படம் ஒரே அறைக்குள் நடக்கின்ற கதை. இயக்குநர் பாசு […]







