admin
admin's Latest Posts
இதுவும் ஒரு அஸ்வமேதம்
சுப்பு ஐயர் செத்துப்போனது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். நல்ல மனுஷன். ஒரு ஈ, எறும்புக்குக் கூடக் கெடுதல் நினைக்காதவர். காசு பணத்தால் அவரால் உதவ முடியாது. ஆனால் ஆரோக்கியம் இடம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உடலால் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் முதலில் நிற்பார். வசதி இல்லாமலோ அல்லது அனாதையாக யாராவது செத்துப் போனால் முதல் தகவல் சுப்பு ஐயருக்குத்தான் போகும். சடங்குகள், சவசம்ஸ்காரம் ஆகியவைகளை முன்னிருந்து நடத்துவார். ஊர்க்குக் கோடியில் ஒரு சாவடி இருக்கும். வழிப்போக்கர்கள், ஏழைகள், பிச்சைக் காரர்கள் […]
செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம்
நம் ஊரில் ரோஸ் நிற உடையணிந்து எவரேனும் சென்றால், ‘இப்படியா கண்ணைப் பறிக்கிற மாதிரி உடையணிவாய்’ என்று கிண்டலடிப்போம். ஆனால் ஊரில் முக்கால்வாசி மனிதர்கள் ‘பச்சை கலரு ஜிங்குச்சான்னு’ உடை மட்டுமல்லாது தொப்பி, கண்ணாடி, கழுத்து மாலை, செருப்பு என அனைத்தும் பச்சை நிறத்தில் அணிந்து வந்தால்? அமெரிக்கா வந்த புதிதில் இதைப் பார்த்துவிட்டு, எனக்கு ஒரு நாற்பத்தியிரண்டு நாள் முன்னர் அமெரிக்கா வந்த நண்பன் கதிரிடம் கேட்க ‘செயிண்ட் பாட்ரிக்ஸ் அப்படின்ற வெள்ளைக்கார தொர நடத்தற […]
எழுதுங்கள் வெல்லுங்கள் – கவிதைப் போட்டி முடிவுகள்
பல மாதங்களாக எங்களுக்கு வரும் பின்னூட்டங்களை ஆழ்ந்து படிக்கையில் ஒவ்வொரு வாசகருக்குள்ளும் புதுமையான கவித்திறன் ஒளிந்திருப்பதை உணர முடிந்தது. இவர்களின் திறமையை வெளிக்கொணரும் முயற்சியாக கவிதைப் போட்டி ஒன்றை நடத்த எண்ணினோம். இவர்களின் கற்பனைத் திறனுக்கு ஒரு தலைப்பைக் கொடுத்து எண்ணங்களைச் சிறைப்படுத்தாமல், அதே சமயம் அனைவரையும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வையோ, விஷயத்தையோ கருவாகக் கொண்டு எழுத வைத்து கவிதைகளைப் பெற எத்தனித்தோம். அதன்படி உருவானது தான் ‘எழுதுங்கள் வெல்லுங்கள்’ எனும் – படத்துக்குக் கவிதை எழுதும் […]
ஒடுங்கிப் போன நெஞ்சம்
வீதியின் ஓரத்தில் ….!
ஒதுங்கிப் போன சொந்தங்கள்;….!
உதறிப் போன பந்தங்கள் ….!
மூட்டை தூக்க முடியவில்லை
முடக்கி போட்டது முதுமை….!
பனிப்பூக்களின் ஓராண்டு நிறைவு
ஃபிப்ரவரி 21 – உலகம் முழுவதும் தங்களது தாய் மொழியினைக் கொண்டாடும் தினமாக யூனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட தினம். எங்கள் பனிப்பூக்கள் குழுவினருக்கு அதை விட மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்த பொன்னாள். ஆம். இந்த ஃபிப்ரவரி 21ம் நாள் எங்களது சஞ்சிகை தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது. சென்ற ஆண்டு இதே நாளில் முதல் இதழை வெளியிட்ட போது இருந்த படபடப்பும், பெருமிதமும் இன்னமும் அடங்கியபாடில்லை. அதற்குள் ஓராண்டு ஓடி விட்டது. ஒவ்வொரு இதழையும் வெளியிட நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும் […]
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 3
பகுதி 2 முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் ஒருவன் இன்னொருவனைக் கத்தியால் குத்துவதைப் பார்க்கின்றனர். பேருந்திலிருந்து இறங்கி ஓடிச் செல்வதற்குள் குத்தியவன் ஓடிவிட, கணேஷும் சிதம்பரமும் மட்டும் காயமடைந்தவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். காயமடைந்தவனுக்கு டாக்டர் தேசிகன், அவர் மகள் டாக்டர் புஷ்பா மற்றும் நர்ஸ் ரோஸி சிகிச்சை கொடுத்துக் கொண்டிருகிறார்கள். காயமடைந்தவன் […]
நீர்க்கசிவுப் பாதிப்பு செலவை நிவர்த்தி செய்தல்
(Household Water Damage Prevention) ஆயிரம் ஆயிரமான நீர்ச்சுனைகளும் ஆறுகளும் காணப்பெறும் அழகிய மினசோட்டா மாநிலத்தில் வெப்பதட்ப காலவித்தியாசங்களும் வித்தியாசமாகவே காணப் பெறுகின்றன. இதன் காரணமாக இவ்விடம் மக்களும் வதிவிட கட்டிடப் பொருட்கள் நம்மில் பலர் பிறந்த பூமியில் கிடைக்கும் விதத்திலிருந்து வித்தியாசமாகக் காணப்படுகிறது. மினசோட்டா மாநிலத்தில் வதிவிடம் வாடகைக்குப் பெறினும், வீட்டு உரிமையாளராக இருப்பினும் நீர்க்கசிவு, நீர்த்தேக்கத்தால் ஆகும் மிகுந்த செலவான பாதிப்புக்களை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்று அறிந்திருப்பதும் சிக்கனம் தரும் சிந்தனையே. பிரதானமாக […]
பாகற்காய்க் கறி
கசப்பான பாகற்காய், நீரிழிவு நோயையும் தவிர்க்கும் அற்புதமான காய். பாகற்காய் தமிழகம் மற்றும் இலங்கையில் 10-12 அங்குல நீளமான வகைகளாகக் காணப்படுகிறது. தவிர மலைப்பிரதேச லாவோஸ், தாய்லாந்து நாடுகளில் சிறிய வகைகளும், சீன நாட்டில் இளம் பச்சை வகைகளாகவும் பல்வேறு வகைகளில் பயிராகிறது. மினசோட்டா மாகாணாத்தில் இந்த வகைப் பாகற்காய்கள் அத்தனையும் கிழக்காசிய சமூகச் சந்தைகளில் கிடைக்கின்றன. பாகற்காயின் கசப்பை நீக்க மக்கள் பல்வேறு வகைகளில் பக்குவப்படுத்திச் சுவையாகச் சமைப்பர். சிலர் கடல் உப்புச் சேர்த்துச் சூரிய […]







