admin
admin's Latest Posts
இருபத்தி நான்கு மணி நேரம்– பகுதி 4
பகுதி 3 முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணா மூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. ஒரு மர்ம நபர் மருத்துவமனையில் போலிஸ் […]
அந்நியன்
க்ளோவர் ஃபீல்ட் நிலையத்திலிருந்து பேருந்து மெதுவாகக் கிளம்பி நகர்ந்தது. இந்துவின் கண்கள் பிரேம் எங்காவது தென்படுகிறானா என்று தேடி அலைந்தது. யாரோ ஓடி வருவதைப் பின் கண்ணாடி வழியாக பார்த்து விட்டு ஓட்டுனர் வண்டியை நிறுத்தியபோது,. அவனாக இருக்குமோ என்ற ஆதங்கத்தில் அவசரமாகத் திரும்பிப் பார்த்தாள். வேறு யாரோ ஒரு பெண் அவசரமாக ஓடி வந்து “தேங்க்ஸ் ..ஜோ …” என்று சொல்லியவாறு ஏறிக் கொள்ள பேருந்து நகர்ந்து, பிரதான சாலையில் திரும்பி வேகமெடுத்தது. காலை ஏழரை […]
கண்ணதாசனின் கவிதைகள் – பகுதி 5
தென்றலான காதல் சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூறுகளில் சில. பழங்கால இலக்கியங்களில் இந்த தலைப்புகளில் பல பாடல்களைக் காண முடியும். காலப்போக்கில், விஞ்ஞான வளர்ச்சியால், பிரிவு, ஏக்கம், தூது என்ற கூறுகள் தொலைந்து போக, இயந்திர கதியாகிப் போன உலகில் பயம், நாணம், வெட்கம், துயர் என்பவையும் அமுங்கிப் போய்விட்டன. […]
கணவரை இழந்த பெண்ணே
வெள்ளைப் புடவையில் வீட்டுக்குள்
வதங்கிக் கிடக்கிறாயே!
வண்ணப் புடைவையில் வானத்தில் நீ
வட்டமிட வேண்டாமா?
அந்நியமாய் வந்தவன்
ஐயோ எனப் போய்விட்டான்
தீங்கற்ற வீட்டு விலங்கு
நான் முதலில் மூச்சு விட ஆரம்பித்த போது
என் தந்தையிடம் கூறினீர்கள்…
“சேமிக்கப் பழகிக்கொள்” என்று,
எனது ஐந்து வயதில் கூறினீர்கள்…
“எழுதப் படிக்கப் பழகிக்கொள்” என்று,
எனது பத்து வயதில் கூறினீர்கள்…
உழைப்பு
ஏர்பூட்டிச் சோறிட்டு உழைப்பின் பெருமையை
உலகிற்கு உணர்த்தினான் மனிதன் அன்று…
நீரூற்றக் கூட நேரமின்றி இயந்திரத்தின்
உதவியை நாடுகிறான் மனிதன் இன்று…
விமானப் பயணம்
விமான நிலையத்தில், கடைசிக் கதவு வரை சென்று, கண்ணாடி வழியாகப் பயணம் செல்லவிருக்கும் நண்பர்கள் விமானத்தின் உள்ளே ஏறி அமர்ந்து விட்டனரா எனப் பார்த்து, வழியனுப்பிய நாட்கள் நினைவிருக்கிறதா? வயதான பெற்றோர்கள் பயணம் செய்கிறார்கள் என்றால், விமானத்தின் உள்வரை சென்று அமர்த்திய அனுபவம் கூட ஒரு சில முறை ஏற்பட்டதுண்டு. ஏதோ இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளல்ல இவையெல்லாம், சரியாக ஒரு பதிமூன்று வருடங்களுக்கு முன்னர்வரை நிலைமை இப்படித்தான் இருந்தது. இப்பொழுது விமான நிலைய […]
விதி
விவரம்பல அறிந்தவரும் விழுந்திடும் காரணம்
விதியென்ற ஒன்றின் விந்தையான செயலாம்
விபரீதம் பலபுரியும் விதியதன் செய்கை
விளங்கியது இல்லையென விரக்தியில் சொல்வர்
விலகித் தெளிந்து விளக்கம் உணர்ந்த
விடிவெள்ளி தர்மனும் விரும்பிச் சூதாடினனாம்!
வயற்காற்று (பாகம் – 01)
“திக்கற்றோருக்குத் தெய்வமே துணை… “ “முருகா எங்களின்ரை கஷ்ரமெல்லாம் சூரியனைக் கண்ட பனியாய் விலகிப் போக வேணுமப்பா கடவுளே உன்னை விட்டால்எங்களுக்கு ஆரப்பா துணை” செண்பகம் கண்கள் குளமாகிக் கலங்கி அழுது கொண்டிருந்தாள். செண்பகத்தின் கண்கள் சிவக்காத நாட்களே இல்லை. உண்மையில் வெண்பகப் பறவை போல காலம் முழுவதுமே கண்கள் சிவப்பாக இருந்து விடுவாளோ என்ற பயம் அவளுக்குள். தன்னுடைய குடும்பக் குறைகளை அவள் வேறு யாரிடம் தான் சொல்வாள். அல்லது யார்தான் இத்தனை பொறுமையுடன் அதனைக் […]
யாழ் தமிழ் – சென்னைத் தமிழ் (பாகம் – 1)
ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் பேசப்படும் மொழி தமிழாக இருப்பினும் இரண்டுக்கும் இடையில் பெரியளவிலான உச்சரிப்பு வேறுபாட்டினை அவதானிக்கலாம். ஈழத்திலும் பிரதேசத்துக்குப் பிரதேசம் இந்த மாறுதல் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் உண்டு. ஆனால் ஈழத் தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் இடையில் பல சொற்கள் வேறுபட்டு வழங்கக் காணலாம். எனக்கு நன்கு பரிச்சயமான யாழ்ப்பாணத் தமிழுக்கும், சென்னையில் வசித்த காலத்தில் பேசிய சென்னைத் தமிழுக்கும் இடையிலான சில சொல் வேறுபாடுகளைப் புரிதல் விரும்பி இங்கு பதிவிலிடுகிறேன். ”மொழி என்பது ஒன்றை […]







