admin
admin's Latest Posts
மாஸ்டர்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகத் திட்டமிட்டப்பட்டு, பிறகு கொரோனா லாக்டவுனில் திரையரங்குகள் மூடப்பட, மாஸ்டர் படத்தின் ரிலீஸும் தடைப்பட்டு நின்றது. அதன் பிறகு, திரையரங்குகள் எப்போது திறக்கப்படுமோ, படம் எப்போது வெளியாகுமோ என்பது தான் கடந்த ஆண்டுக் கொரோனா தடுப்பூசியை விட விஜய் ரசிகர்களது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. நடுவில் ஒரு பக்கம் ஓ.டி.டி பேச்சுவார்த்தைகள் நடக்க, இப்படத்தை வீட்டிலிருந்தே பார்க்க வேண்டி வருமோ, வழக்கமான திரையரங்கு கொண்டாட்டத்தை அனுபவிக்க முடியாதோ என்ற வருத்தம் ரசிகர்களைத் […]
பெருந்தொற்றுக்கால இந்தியப் பயணம்
2020 எல்லோருக்குமே மறக்க முடியாத வருடமாகி போனது. அதில் நானும் விதிவிலக்கு இல்லை. 2020 டிசம்பர் மத்தியில் எனது தந்தை இறந்த செய்தி ஒரு இரவில் என்னை வந்தடைய, பயணம் என்பது கேள்விக்குரியதாக இருக்கும் அந்த நேரத்தில், பயணத்தைச் சாத்தியத்திற்குரியதாக்குவதற்கான கேள்விகளை எழுப்பினேன். கோவிட் காரணமாகப் பயணங்களைத் திட்டமிடுவது முற்றிலும் வேறாக மாறியிருந்தது. எந்தெந்த விமானச் சேவைகள் பயன்பாட்டில் உள்ளன, எவ்வித கோவிட் பரிசோதனை எடுக்க வேண்டும், இந்தியாவில் அமெரிக்கத் தூதரகங்கள் மூடிக்கிடப்பதால், இந்தியா சென்று திரும்பும் […]
அமெரிக்காவின் புதிய தலைமை
பல மாதங்களுக்குப் பிறகு, பல வழக்குகள், கலவரங்களுக்குப் பிறகு 2020 அதிபர் தேர்தல் முடிவுக்கு வந்தது. ஐக்கிய அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும், 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிக வாக்கு எண்ணிக்கை (81,283,485) பெற்றவர் ஜோ பைடன்; அதிபர் பதவியேற்கும் மிக அதிக வயதுடைய நபர் ஜோ பைடன் – பதவியேற்ற தினத்தன்று அவரின் வயது 78 […]
இதயத்தில் முள் தோட்டம் – பாகம் 2
கவிதா இறந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகி விட்டது. தமிழக அரசியல் பிரச்சனைகள், ஸ்டெர்லைட் வகை போராட்டங்கள் என்று அவர்களுக்கு வேறு தீனி கிடைத்து விட்டதால், பத்திரிகை மற்றும் ஊடகங்களும் அவளை மறந்துவிட்டது என்றே சொல்லலாம். மக்களும் பிக் பாஸ் மற்றும் அன்றாட பிரச்சினைகளில் பிஸியாக இருப்பதால் கவிதாவைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் ராஜீவுக்கு வாரத்தில் ஒரு முறையாவது சண்முகத்திடமிருந்து ஃபோன் கால் வருகிறது. அவர் அவளை மறந்ததாகத் தெரியவில்லை. திருவான்மியூரில் உள்ள போர்ஷே குடியிருப்பில் […]
மாறா – திரைப்பார்வை
மார்ட்டின் பிரகத் இயக்கிய மலையாளப் படமான ‘சார்லி ‘ யின் ரீமேக் தான் “மாறா’. ஒரு கதைசொல்லியாய், தன்னைத் திறந்து கொள்ளுகிற ஓவியம் , காட்சிக்குக்காட்சி புதுமைகொள்கிறது. பார்வதி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரதா ஸ்ரீநாத் மறுசீரமைப்புப் பணிக்காக ஒரு ஊருக்குச் செல்லும்போது , சிறு வயதில் அவளைப் பாதித்த ஒரு கதை, உருவம் பெற்று ஓவியமாய் அவள் முன் நிற்கிறது. அந்த ஓவியத்தை நெருங்கும் போது அது பல ஓவியமாய் விரித்துக்கொண்டு பல கதைகளைக் காட்சிப்படுத்துகிறது. […]
காவல்துறை உங்கள் நண்பன் – திரைப்பார்வை
நடுத்தர வர்க்கத்தின் ஒட்டு மொத்தச் சாயலும் படத்தின் கதாநாயகனான சுரேஷ் ரவியின் முகத்தில் திரையில் மிகைப்பு இல்லாமல் வலம் வருகிறது. ஒவ்வொருவருக்குள்ளும் மின்னலெனப் பளிச்சிடும் அச்சம் அவ்வப்போது நம் வாழ்ந்துவிடும் வாழ்க்கைக்கான தேடலின் குறுக்கே வந்து மறைவது தெரிந்து போகிறது. இருவர் கொண்ட அழகான குடும்பம், ரவீனா ரவி உதிர்க்கும் காதலில் மேலும் அழகுடன் காட்டப்பட்டுள்ளது. எப்போதும் போல காதலை ஏற்றுக்கொள்ளாத ஒரு சமூகம் . காதலியின் தோள்களில் துயில் கொள்வதற்காகவே களைப்பின் சுமையை இரவில் களைந்துவிட்டு […]
பீஃப் வெலிங்டன் அகலடுப்புச் சமையல்
குளிர்காலத்தில் அகலடுப்பு (Oven) மூலம் பார்க்கப் பொலிவாகவும், சற்று ஏளிதாகவும் செய்யக்கூடியது உரொட்டி தயாரிப்பது போன்ற, வெலிங்டன் வகை வாட்டி வேகவைக்கும் சமையல். பிரித்தானியர் பீஃப் எனும் மாட்டு இறைச்சியைப் பாவிப்பதை விரும்பினும், இதனைக் கோழி, ஏன் உருளைக்கிழங்கு மசாலாவுடனும் இலகுவாகத் தயாரிக்க முடியும். உரொட்டியில் மூடப்பட்ட மாமிசம் (filet de bœuf en croûte – fillet of beef in pastry) என்ற பிரெஞ்சு சமையலை பிரித்தானியர் பின்பற்றி சமைக்க, காலப்போக்கில் அது பீஃப் […]
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா – கொண்டாட்டமா? குழப்பமா?
ஜனவரி 20ஆம் நாள், ஜோ பைடன் என அழைக்கப்படும் ஜோசப் ராபினெட் பைடன் அவர்கள், ஐக்கிய அமெரிக்காவின்46ஆவது அதிபராகப் பதவியேற்கவுள்ளார். கூடவே கமலா ஹாரிஸ் எனப்படும் கமலா தேவி ஹாரிஸ் அவர்கள், ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகப் பொறுப்பேற்றுக் கொள்வார். அமெரிக்க அரசியல் பாரம்பரியப்படி நடைபெறும் இந்த பதவியேற்கும் நிகழ்ச்சி புதிய அதிபரின் செயல்பாடுகளின் தொடக்கமாக அமையும். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக,அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் வெள்ளை மாளிகைக்குச் சென்று தற்போதைய அதிபரைச் சந்தித்து, இருவருமாக அமெரிக்காவின் […]
‘அந்த’ வைரஸ்
காரில் ஏறி உட்கார்ந்ததும் எதோ ‘காக்பிட்டுக்குள்’ நுழைந்த மாதிரி இருந்தது ரகுவுக்கு. ஏழெட்டு மாதங்களாகிவிட்டது சொந்தக் காரில் உட்கார்ந்து. லிவிங் ரூம் விட்டால், ஆஃபிஸ் ரூம்; அரை மணிக்கொருமுறை பாத்ரூம்; அசந்த வேளையில் பெட்ரூம் என்று மாறிப் போயிருந்தது வாழ்க்கை. சில சமயங்களில்,’ஊபர் ஈட்ஸ்’ காரன் கொண்டு வந்து வைத்துவிட்டுச் செல்லும் உணவையும், சுலோவின் அமேசான் ஷாப்பிங் பெட்டிகளையும் அள்ளிக் கொண்டு வர ஒரு நாப்பது நாப்பத்தியைந்து நொடிகள் வாசல் ‘போர்ச்’க்குப் போவதுண்டு. அந்த நாப்பது நாப்பத்தியைந்து […]







