admin
admin's Latest Posts
பனிகாலப் பரவசம் 2020
January/தை மாதம் எது எங்கு எப்போது நிகழ்வு பனிச்சறுக்கப் பார்ட்டி Lutsen, Minnesota Jan 10 – 11 மினசோட்டா வடக்கிழக்குப் பகுதியில் Lutsen மலைச்சாரல்கள் கோலாகலமாக பனிச்சறுக்குதல் கொண்டாட்டங்களை வருடாந்தம் கொண்டாடும். இவ்விடம் பனிக்குடிசைகள் Charlet அனுபவமும் போகுபவர்க்குக் கிடைக்கும் I.C.E Fest Little Falls, Minnesota Jan 11-12 இது மூன்றாவது வருட பனிக் கொண்டாட்டம். உறைந்த ஏரியின் மேல் பெரும் Carousel (merry-go-round சுழற்றி) மற்றும் பனிச் சைக்கிள், பனிச்சப்பாத்து […]
ஓய்வுக்காலத்திற்கு ரெடியா? 401(K) ஒரு பார்வை
அமெரிக்காவுக்குப் புதிதாக வேலைக்கு வந்தவர் என்றால், இந்த 401(K) என்கிற பதத்தைக் கேள்விப்பட்டு, அது என்ன, ஏது என்று ஒரு குழப்பம் ஏற்பட்டு, குழப்பத்தைத் தவிர்க்க அதைப் பற்றிக் கொள்ளாமலே சிலர் விட்டிருப்பர். அறிந்துக்கொள்ள ஆர்வம் கொண்டோருக்கும், அது குறித்து முழுமையாக அறிந்துக்கொள்ள முடியாமல் போயிருக்கலாம். 401(K) குறித்த தகவல்களைத் தமிழில் அளிக்கலாம் என்பதே இக்கட்டுரையின் நோக்கம். வேலை பார்ப்பவரோ, தொழில் புரிபவரோ, ஒரு வயது வரை மட்டுமே உழைப்பதற்கு உடலில் பலமோ, மனதில் திடமோ இருக்கும். […]
நீர்த் திவலைகள் – சிறுகதைத் தொகுப்பு
தமிழ் இலக்கியங்களில், சிறுகதைகளுக்குச் சிறப்பான, பிரத்யேகமான இடமுண்டு. கவிதை நடையிலிருந்து வேறுபட்டு உரை வடிவில், புனைவுகள் சுருக்கமாக இருப்பதால், வாசகர்களால் சிறுகதைகள் பெரியளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சிறுகதைத் தொகுப்புக்கள் அதிகமாக உருவாக்கப்படாத காலத்தில், வார இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளை வாசிப்பதற்காகக் காத்திருந்த பெண்கள், இளைஞர் கூட்டங்கள் ஏராளம். தொழில்நுட்பக் கலாச்சார மாற்றங்களினால் புத்தக வாசிப்பு ஓரளவு குறைந்திருப்பதாகத் தோன்றினாலும், அண்மைக்காலப் புத்தகக் கண்காட்சி விற்பனைப் புள்ளி விவரங்கள், சிறுகதைத் தொகுப்புகளுக்கான வரவேற்பு அதிகரிப்பதாகச் சொல்வது மகிழ்ச்சி தருகிறது. சிறுகதை […]
வட்டிக்காரி
வட்டிக்கு பணம் கொடுக்கும் மாரியம்மாளிடம் குப்பக்கா சொன்ன செய்தி அவள் வயிற்றில் அக்னி ஜூவாலையை உருவாக்கியது. கோடி வீட்டு சுப்பத்தாள் நன்றாகத்தானே இருந்தாள். நேற்று மாலை மூன்று மணிக்கு வந்து அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு பணம் பத்தாயிரம் வாங்கி சென்றாளே ! குப்பக்கா கதவை திறந்த உடன் இந்த செய்தியை சொல்லுகிறாளே, உண்மையாய் இருக்குமா? அப்படி பொசுக்கென்று போகிற உடம்பா அது ? ஆள் நல்ல திட்காத்திரமாகத்தானே இருந்தாள். பணம் வேறு பத்தாயிரம் வாங்கிட்டு […]
மினசோட்டாவின் தமிழ் மொழி மற்றும் மரபு மாத பிரகடனம்
அமெரிக்காவின் மினசோட்டா மாகாண ஆளுனர் திரு. டிம் வால்ஸ் (Tim Walz) அவர்கள் இந்தாண்டு 2020 ஜனவரி மாதத்தை மினசோட்டாவில் “தமிழ் மொழி மற்றும் மரபு” மாதமாகப் பிரகடனம் செய்திருக்கிறார். இதற்கான பிரகடனத்தில் டிசம்பர் 31 ஆம் தேதியன்று கையெழுத்திட்டு, மினசோட்டா மாகாண முத்திரை பதித்த ஆவணத்தை மினசோட்டா தமிழ் சங்கத்திடம் பகிர்ந்திருக்கிறார். இது போன்ற பிரகடனங்கள் முக்கிய நிகழ்வை ஒட்டி, அதன் முக்கியத்துவத்தை மாநில மக்கள் அறிந்துக்கொள்ளும்பொருட்டு அரசால் வெளியிடப்படுகிறது. இந்தப் பிரகடனத்தில் தமிழ் […]
இம்பீச்மென்ட் – இன்றைய நிலை
2019 ஆகஸ்ட் 12ஆம் நாள், அமெரிக்க அதிபரான டானல்ட் ட்ரம்ப், தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, சில தனிப்பட்ட காரணங்களுக்காக உக்ரைன் நாட்டுக்கு வழங்கப்படவிருந்த ராணுவ உதவியை நிறுத்தினார் என்று புகார் எழுப்பினார் அடையாளம் காட்டிக்கொள்ளாத நபர் ஒருவர். விசில் ப்ளோயர் (whistle blower) எனும் இடித்துரைப்பாளரான இவர் திருவாளர் ட்ரம்ப் அப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த உக்ரைன் அதிபர் வோளோடிமரிடம், அந்நாட்டுக்கு அளிக்க அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் தந்திருந்த $250 மில்லியன் ராணுவ உதவிக்கு மாறாக, அவரிடமிருந்து […]
மால் ஆஃப் அமெரிக்காவில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
ப்ளூமிங்டனில் மால் ஆஃப் அமெரிக்காவில், டிசம்பர் 31 ஆம் தேதியன்று இரவு, புத்தாண்டுக் கொண்டாட்டமாக, மூன்லைட் சர்க்கஸ் (Moonlight Circus) என்ற நிகழ்ச்சியும், ஃபேமிலி கவுண்ட் டவுன் டான்ஸ் பார்ட்டி (Family Countdown Dance Party) என்ற நிகழ்ச்சியும் மாலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு வரை நடைபெற்றது. செலியஸ் ஏரியல் ஆர்ட்ஸ் ஸ்டுடியோ (Xelias Aerial Arts Studio) என்ற குழு இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தினார்கள். வந்திருந்த பலரும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு, மகிழ்வுடன் […]
பனிப்பூக்கள் Bouquet – 2020 கணிப்புகள்
2020 இல் இந்தியா வல்லரசு என்னும் குறிக்கோளுடன் உழைக்க வேண்டும் என்றும் அதற்கான திட்டங்களையும் பல ஆண்டுகளுக்கு முன்பு 1998 இல் அப்துல் கலாம் அவர்கள் வகுத்துக் கொடுத்தார். இன்னும் சில தினங்களில் 2020 ஆம் ஆண்டுத் துவங்குகிறது. அடுத்தாண்டு இந்தியா வல்லரசு ஆகிவிடுமா என்று கேட்டோமானால், வல்லரசு என்பதற்கான அர்த்தத்தை முதலில் புரிந்துக்கொண்டு அதற்கான பதிலைக் கூற வேண்டியிருக்கும். வல்லரசு என்பது வல்லமை கொண்ட அரசு என்று எடுத்துக்கொண்டோமானால், ஒருவிதத்தில் இந்திய அரசு ஏற்கனவே வல்லரசு […]







