admin
admin's Latest Posts
பெயல் நீர் சாரல் – நூல் நயம்
ஒரு நல்ல கவிதைக்கு உடல், உயிர், உள்ளம், உயிர்த்துடிப்பு எல்லாமே இருக்கிறது. உள்ளடக்கத்துக்கு தகுந்த வடிவமும் (form) வடிவத்துக்கு தகுந்த உள்ளடக்கமும் (content) பொருத்தமுற அமைந்து விட்டால் அது சிறந்த கவிதையாக அமைந்துவிடும். இந்த வகையில் 42 தனிக் கவிதைகளைக் கொண்டு தொகுத்த கவிஞர் சங்கர் தங்கவேலு அவர்களின் “பெயல் நீர் சாரல்” கற்பனை பொங்கிப் பிரவாகித்து முட்டி மோதும் அருவியாக விழுகிறது. எனக்கு தமிழ்க்கவி பிரமிள் அவர்களை மிகவும் பிடிக்கும். `காவியம்’ என்ற தலைப்பில் பிரமிள் […]
அமெரிக்கன் கனவும் தற்போதய நனவும்
நீங்கள் இன்று பணக்காரப் பெற்றார்களுக்கு அமெரிக்காவில் பிறந்து இருந்தீர்களே ஆயின் உங்கள் வாழ்வு மீதி மக்களிலும் திடகாத்திரமானது. அதாவது உங்கள் வாழ்வில் முன்னேற அதிக சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் சாதகமாக உண்டு என்கிறது அண்மையில் வெளியான “The global social mobility report 2020” புதிய அறிக்கை. வளர்முக நாடுகளில் இருந்து அமெரிக்கா வந்து குடியேறிய தமிழருக்கு இதில் என்ன புதிய செய்தி இருக்க முடியும் என்று சிந்தித்துக் கொள்ளலாம். ஆயினும் இது அமெரிக்க ஐதீகத்திற்குச் சவலான ஆதாரங்களுடனான […]
அட்லாண்டாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் நாள்
அட்லாண்டா உலகத் தமிழ்க் கவிஞர்கள் பேரமைப்பு சார்பில், திருவள்ளுவர் தினமான தை இரண்டாம் நாள், உலகத் தமிழ்க் கவிஞர்கள் நாளாகச் சிறப்புடனும் எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டது. சனவரி 19, 2020, ஞாயிறன்று அட்லாண்டாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் பேரமைப்பின் தொடக்க நிகழ்வும் உலகத்தமிழ்க் கவிஞர்கள் நாளும் ஒருசேர நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ராஜி ராமச்சந்திரனின் வரவேற்புரைக்குப் பிறகு உறுப்பினர் பிரதீபா பிரேம் வரவேற்புக் கவிதை வாசிக்க, நிகழ்வு களைகட்டியது. மூத்த தமிழ் அறிஞரும், கவிஞருமான ந. குமரேசன் தமது சிறப்புரையில் […]
சங்கமம் 2020
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் பொங்கல் கொண்டாட்ட விழாவான சங்கமம், இந்தாண்டு ஜனவரி மாதத்தின் 18ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மினசோட்டாவில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள் இந்த விழாவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சனிக்கிழமை காலை 11:30 ஆரம்பித்த இவ்விழா, இரவு ஒன்பது மணி வரை ஆடல், பாடல், இசை, நாடகம் எனத் தொடர் நிகழ்ச்சிகளால் நிரம்பி வழிந்தது. மதிய சிறப்புப் பொங்கல் உணவு மற்றும் உபசரிப்புடன் விழா தொடங்கியது. விழாவிற்கு வந்திருந்த […]
குமார்ஸ் தென்னிந்திய உணவகம்
வட அமெரிக்காவில் பல இந்திய உணவகங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டு உணவுகளுக்கெனப் பிரத்யேக உணவகமாக, முதலில் டெக்ஸாஸில் தொடங்கப்பட்டு, இன்று அமெரிக்காவில் பல நகரங்களில் கிளை பரப்பி வருகிறது, குமார்’ஸ் தென்னிந்திய கிராமத்து சமையல் முறை உணவகம் (Kumar’s South Indian Village Cuisine). மினியாபொலிஸ் ஆப்பிள் வேலி பகுதியில் சமீபத்தில் உதயமாகியிருக்கும் குமார்’ஸ் உணவகத்தின் உரிமையாளர் திரு. ராமையும், குமார்’ஸ் உணவகத்தின் முதல் கிளையை டெக்ஸாஸில் தொடங்கி, பிறகு பல இடங்களிலும் அமைக்க உதவி வரும் திரு. […]
புத்தகத் திறனாய்வு – மாயப்பெருநிலம்
சென்பாலனின் முன்னைய இரு நாவல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதைக்களம்; ஈழப் போராட்டத்தின் இறுதிக் காலங்களில் தமிழகத்திற்குக் கடத்தப்படும் 40 கிலோ தங்கம் அங்கு விற்கப்பட்டு அந்தப் பணம் அன்று வெளிநாட்டிலிருந்த இயக்கப் பொறுப்பாளருக்கு மாற்றப்படுகிறது. அவர் அந்தப் பணத்தினை “பிட் கொயினாக” மாற்றி இரகசிய கணக்கில் வைத்திருக்கிறார். அவற்றின் மதிப்பு 21000 கோடி ரூபாக்கள் அந்த இரகசிய கணக்கினைத் திறப்பதற்கான குறிச்சொல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தான் தெரியும்; அவர்களில் ஒருவர் பேராசிரியர் ஜெயச்சந்திரன். அவரை நம்ப வைத்து […]
புத்தகத் திறனாய்வு – பெர்முடா
பெர்முடா முக்கோணத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். பக்கத்தில போனவன் எவனுமே தப்பிக்க முடியாது, உள்ள இழுத்திடும்; காரணமே புரியாமல் காணாமல் போனவர்கள் அதிகம் பேர். அப்படிப்பட்ட ஒரு கதைக்களம் தான் இது. “பெர்முடா” – இதுதான் கதைத் தலைப்பு. களம் என்று பார்த்தால் பொருந்தாக் காமம்; மூன்று ஜோடிகளின் பொருந்தாக் காமம் இதுதான் கதையின் கரு. சில புத்தகங்களைப் படிக்கும் போது, ஏன்தான் இதைப் படித்தோம் என்று தோன்றும். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போதும் அப்படித் தான் தோன்றியது. […]
இதுவா வாழ்க்கை?
தொலைக்காட்சிப் பெட்டிநம்மின் வீட்டிற் குள்ளே தொகைகொடுக்க வந்தபின்னே புத்த கங்கள் விலைகொடுத்து வாங்குவதை நிறுத்தி விட்டோம் வீற்றிருந்து படிப்பதையும் விட்டு விட்டோம் ! அலைபேசி நம்கைக்கு வந்த பின்போ அழகான கையெழுத்தில் நலங்கள் கேட்டுக் கலையாக எழுதிவந்த கடித மெல்லாம் காணாமல் போனதுவே கையை விட்டே ! பொன்னாக மேசையின்மேல் கணினி வந்தே பொலிவாக […]







