\n"; } ?>
Top Ad
banner ad

கட்டுரை

அமெரிக்காவும் அதன் அகால ஆசையும்

அமெரிக்காவும் அதன் அகால ஆசையும்

தமிழில் அகால மரணம் என்பது இயற்கையான இறப்பு இல்லை என்று பொருள்படும். தமிழ் மக்களில் ஈழத்து மக்களும், மலேசிய மக்களும் துப்பாக்கியின் பரிவிளைவுகளை அவர்கள் வாழ்நாட்களில் பார்த்தவர்கள், பார்த்துக்கொண்டு இருப்பவர்கூட. இன்று வட அமெரிக்க மண்ணில் வாழும் தமிழரும் அவ்வப்போது காணும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி விட்டனர் எனலாம். கடந்தவாரம் கூடி கொலராடோ மாநிலத்தில் 10 வருடங்களிற்கு முன்னர் நடைபெற்ற அகோரக் கொலம்பைன் பள்ளிக்கூடச் சூட்டுச் சம்பவம் நடந்த இடத்திற்கு ஏழே ஏழு மயில்களிற்கப்பால் மீண்டும் இரண்டு மாணவர்கள் […]

Continue Reading »

அமெரிக்கக் குடியுரிமை பிறப்புரிமையா?

அமெரிக்கக் குடியுரிமை பிறப்புரிமையா?

மண்ணின் மைந்தர் அடிப்படையில்  குடியுரிமை சரிதானா என்ற விவாதம் இன்றும் தொடர்கிறது. பிற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வட அமெரிக்காவில் புகலிடம் கொண்டவர்களால் இந்தக் கருத்து பல திருத்தங்களுடன், புதிய கோணங்களில்  விவாதிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடியுரிமைக் கணக்கெடுப்புப்படி, இந்த நாட்டில் வாழும் 40 மில்லியன் மக்கள், அதாவது மொத்த சனத்தொகையில் 13 சதவீதம் மக்கள் வெளிநாட்டில் பிறந்தவர்கள். அதே சமயம்  குடியுரிமைச் சட்டங்கள் கடுமையாகக் கடைபிடிக்கப்படும் அமெரிக்க நாட்டில், சுமார் 20 மில்லியன் மக்கள் […]

Continue Reading »

பெப்பா பிக் பார்க்கலாமா?

பெப்பா பிக் பார்க்கலாமா?

இந்தத் தலைமுறை சிறு குழந்தைகளின் ஆதர்சமாக இருக்கும் கார்ட்டூன் கேரக்டர், பெப்பா பிக் (Peppa pig). இங்கிலாந்து தொலைக் காட்சியில் அறிமுகமான இந்தச் செல்லப் பன்றிக் குட்டி, இன்று உலகமெங்கும் ஒளி பரப்பப்பட்டு, சிறு குழந்தைகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்தப் பெப்பா பிக் படம் போட்ட ஆடைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் பெருமளவு விற்பனை ஆகி வருகின்றன. பெப்பா பிக் தீம் பார்க்குகள் இங்கிலாத்திலும், சீனாவிலும் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்பவர்களின் பட்டியலில் […]

Continue Reading »

தேர்தல் 2019

தேர்தல் 2019

சுதந்திரமடைந்து எழுபத்தியிரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில்,  இந்தியா 17ஆவது மக்களவைக்கான தேர்தலை எதிர்கொண்டு, நடத்தி வருகிறது. ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி  மே 19 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களில் இத்தேர்தல் நடைபெறும். இருபத்தியொன்பது மாநிலங்கள், ஏழு ஒன்றியப் பகுதிகளிலிருந்து, பதினெட்டு வயதை அடைந்து விட்ட ஏறத்தாழ 90 கோடி மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.  இதில் சற்றேறக்குறைய 1.50 கோடி பேர் முதன்முறையாக வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ள இள வயதினர். தகுந்த […]

Continue Reading »

பாரீஸ் நாட்ரடாம் புராதன தேவாலயம் (Paris Notre Dame Cathedral)

பாரீஸ் நாட்ரடாம் புராதன தேவாலயம் (Paris Notre Dame Cathedral)

ஏப்ரல் 15ம், திகதி 2019, ஃபிரஞ்சு மக்கள் சரித்திர அத்தியாயத்தில் இருண்ட பக்கம். கலாச்சார துக்க தினத்தில் ஒன்று  என்று கூறலாம். ஐரோப்பிய கலாச்சாரத்தின் எழில் சின்னங்களில் ஒன்றான நாட்ரடாம்  புராதன தேவாலயம் அதன் சீரமைப்பு வேலைகளின் போது தீக்கிரையானது. ஃபிரஞ்சு மக்கள் சனநாயகத்தை வெகுவாகக் கடைப்பிடிக்கும் மக்கள். சகல சிந்தனைகளையும், கலைஞர்களையும், புத்தி ஜீவிகளையும் வரவேற்கும் அதே சமயம் ஃபிரஞ்சு மக்கள் ஆன்மீக சிந்தனை கத்தோலிக்கமாகவும் ஆயிரம் ஆண்டுகளிற்கும் மேலாகவும் உள்ளதை நாம் அவதானிக்கலாம். நாட்ரடாம் […]

Continue Reading »

திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

ஐந்தாறு தசாப்தங்கள் கடந்துவிட்ட பின்பும், அபரிமிதமாகத் தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கும் இன்றைய நவீன யுகத்திலும் நம் மனதை விட்டு அகலாத, ஏதோவொரு வகையில் நம்மில் பிரமிப்பை ஏற்படுத்தி நிற்கும் திரைப்படப் பாடல்கள் சிலவற்றை இக்கட்டுரையில் பார்த்து வருகிறோம். அதிலும் குறிப்பாக வரிகளில் வினாக்களை தொடுத்து, நேர்மறையாகவோ மறைமுகமாகவோ விடையளிக்கும் பாடல்களைக் கடந்த பகுதிகளில் கண்டோம். எடுக்க எடுக்க குறையாத அமுதசுரபி போல பொக்கிஷங்களைத் தந்துவிட்டு சென்ற படைப்பாளிகளின் மேலும் சில படைப்புகளைத் தொடர்ந்து பார்ப்போம். திரைத்துறைக்குள் நுழைந்த […]

Continue Reading »

ஸ்னோ அள்ளிப் போட வா!!

ஸ்னோ அள்ளிப் போட வா!!

மினசோட்டாவில் தனி வீட்டில் வசிப்பவர்களுக்கு, குளிர்காலத்தில் பனி அள்ளிப் போடும் பணியானது, சாப்பிடுவது, தூங்குவது போன்றவற்றிற்குப் பிறகான முக்கிய அன்றாடப் பணியாகும். அபார்ட்மெண்ட்டில் வசிப்பவர்களுக்கும், டவுண்ஹோம் என்றழைக்கப்படும் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் வரிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் இந்த அரும்பணி ஆற்ற வேண்டிய அவசியமில்லை; நிர்வாகம் நிர்வகித்துக்கொள்ளும். தனி வீட்டு மஹாராஜாக்களுக்கு மட்டுமே இந்த மண்ணள்ளி, மன்னிக்கவும், பனியள்ளிப் போடும் பணி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கட்டாயம் என்றில்லை. காசு கொடுத்தால், மலையையே குடைந்து அள்ளிச் சென்று விடுவதற்குக் காண்ட்ராக்ட் இருக்கும் போது, […]

Continue Reading »

துணுக்குத் தொகுப்பு

துணுக்குத் தொகுப்பு

ஜப்பான் உலகின் பல நாடுகள் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் வேளையில் புதிய தினத்தினை அறிவிக்கும் வகையில் புலர்ந்திடும் கதிரவனை முதலில் கண்டு எதிர்கொள்ளும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. அதன் காரணமாகவே மேற்கத்தியர்களால் இந்நாடு ‘உதய சூரியன் நாடு’ (Land of Rising Sun) என்று அழைக்கப்படுகிறது. மற்ற நாடுகளால் ஜப்பான் என்று அறியப்பட்டாலும், ஜப்பானியர்கள் தங்கள் நாட்டை ‘நிப்பான்’ அல்லது ‘நிஹோன்’   என்றே குறிப்பிடுகிறார்கள். சீனர்கள், சூரியன் (‘நிச்சி’ ) பிறக்குமிடம் (‘ஹோன்’ ) என்பதைக் குறிக்க ‘நிஹோன்’ […]

Continue Reading »

அழகிய ஐரோப்பா – 14

அழகிய ஐரோப்பா – 14

(அழகிய ஐரோப்பா – 13/போகும் வழியில்) வாவ்… டிஸ்னி! டிஸ்னி லேண்டின் நுழை வாசல் மிகவும் அழகிய தோற்றத்தில் எங்களை வரவேற்றது. நுழைவாசலைக் கண்டதுதான் தாமதம் கனவுலகை நிஜமாக கண் முன்னே கண்ட ஆவலில் என் பிள்ளைகள் வாவ்… டிஸ்னி என்று துள்ளிக் குதித்தனர். சந்தோஷம் மிகுந்து கண்களில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்துடன் என் முன்னே வந்து சிரித்தாள் என் மகள். அவளின் கனவுலகம் இன்று அவள் முன்னே பரந்து விரிந்து கிடக்கிறது. அழகிய தேவதைகள் போல் […]

Continue Reading »

வாட்ஸ்அப் தசாப்தம்

வாட்ஸ்அப் தசாப்தம்

வாட்ஸ்அப் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. யாஹு நிறுவனத்தில் இருந்து விலகிய ப்ரையனும், ஜேனும் 2019 ஜனவரியில் ஆப்பிள் ஆப்ஸ்டோரில் மெசெஜிங் செயலிக்கு இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப, வாட்ஸ்அப் கொண்டு வந்தனர். பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு ஃபிப்ரவரியில், சரியாகச் சொல்வதென்றால் 2009 பிப்ரவரி 24ஆம் தேதியன்று கலிஃபோர்னியாவில் வாட்ஸ்அப் நிறுவனம் அவர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் அவர்களது செயலி ரொம்பவே மக்கர் செய்தது. அடிக்கடி நின்று போகும். இருந்தாலும், இடைவிடாமல் முயன்று அதை […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad