இலக்கியம்
வென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 3
பகுதி 2 அத்துவானக் காட்டுக்கு மத்தியில், அழகாக அமைக்கப்பட்டிருந்த இரயில் நிலையம். சுற்றி கண்ணுக்கெட்டும் தொலைவு வரையில் கும்மிருட்டு. அந்த இரயில் நிலையத்திலும், அதன் உள்ளிருந்த ஒரு ரெஸ்ட்டாரண்டிலும் ஒளி மயமான விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அவைதவிர எந்தவித வெளிச்சமும் எங்கும் காணப்படவில்லை. ஆனால் இரவு நேரமதிகமாகிவிட்டதால், அந்த ரெஸ்டாரண்ட் மூடப்பட்டு, ஓரிரு விளக்குகள் மட்டுமே எரிந்து கொண்டிருந்தன. இரயில் நின்று, கதவு திறந்தவுடன் கணேஷ் மெல்லமாகத் தலையை எட்டிப் பார்த்தான்; மனது முழுதும் யாரேனும் மனிதர்கள் […]
ரிச் ஃபீல்ட் நகர பூர்வீக மக்கள் தினம்
மினசோட்டா மாநிலத்தினதும், பல்வேறு அமெரிக்க நகரங்களின் பூர்வீக வாசிகள் தினப் பிரகடனங்களையும் ஒட்டி, ரிச் ஃபீல்ட் நகரமும் ஆக்டோபர் இரண்டாம் திங்களை, பூர்வீக மக்கள் தினமாக அறிவித்துள்ளத்து. ரிச் ஃபீல்ட் நகரமானது மினியாப்பொலிஸ் பெருநகரின் தென்புற எல்லையில் உள்ளது. அந்த அறிவிப்பானது ஆக்டோபர் 8, 2019 அதிகாரப்பூர்வ நகர சபைக்கூட்டத்தின் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரகடனத்தின் படி கொலம்பஸ் டே எனப்படும் தினம் அகற்றுப்பட்டு ஆக்டோபர் இரண்டாம் திங்கள் பூர்விக மக்கள் தினமாக கௌரவிக்கப்பட்டுக் கொண்டாடப்படும். இத்தினத்தில் […]
வென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 2
பகுதி 1 அந்த கரிய நிற மெஷின் கன்னைப் பார்த்தவுடன் சர்வ நாடியும் ஒடுங்கியது கணேஷிற்கு. உடனடியாகத் திரும்பி, அந்த ஜெர்மன் டிரைவரைப் பார்க்க, அவருக்கும் குண்டலினி தொடங்கி துரியம் வரை குளிர் ஜுரம் பற்றிக் கொள்ள, இதுவரை வெறுத்த இந்த ப்ரௌன் ஸ்கின் இண்டியனை ஒரு ஆதரவுடன் பார்த்தார். “டிரைவ்…. டிரைவ்….. கோ … கோ.. கோ… டோண்ட் ஸ்டாப்….” என்று சைகையுடன் ஆங்கிலத்தில் இன்ஸ்ட்ரக்ஷனஸ் கொடுத்துக் கொண்டிருக்க, அவரும் திடீரென் வின்ஸ்டன் சர்ச்சிலாக மாறி, […]
உத்திரகோசமங்கை – உலகின் முதல் சிவாலயம்
“இந்தக் கோவிலுக்குத் திட்டமிட்டெல்லாம் வர முடியாது. தற்செயலா வந்தா தான் உண்டு” என்று அந்தக் கோவிலின் அர்ச்சகர் சொன்னது போல் தான் எங்களது அந்தப் பயணமும் அமைந்திருந்தது. கோவில் -இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் திருக்கோவில். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நீண்டு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் இராமநாதபுரம் பக்கம் உள்ளே பத்து கிலோமீட்டர் இறங்கிச் சென்றால், உயர்ந்த கோபுரங்கள் கொண்ட இந்தக் கோவிலைக் காணலாம். சிறிய ஊர் தான். அதற்குப் பெரிய கம்பீரத்தைக் […]
இம்பீச்மெண்ட்
இரண்டு வாரங்களாக, அமெரிக்கத் தொலைகாட்சிகளிலும், ஊடகங்களிலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படும் சொல் ‘இம்பீச்மெண்ட்’. அமெரிக்க அதிபர் டானல்ட் ட்ரம்ப் ‘இம்பீச்’ செய்யப்படுவாரா என்ற கேள்வி அனைத்துலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றால் அது மிகையில்லை. தன்னை இம்பீச் செய்தால் உலகப் பொருளாதாரம் வீழும்; உலக அரசியல் ஸ்தம்பிக்கும் என அவரே எச்சரித்துள்ளது எந்தளவு நிதர்சனம்? அப்படி என்ன செய்துவிட்டார் ட்ரம்ப்? கட்டுரைக்குள் செல்லும் முன்னர் “இம்பீச்மென்ட்” என்ற பதத்துக்குப் பொருளறிந்து கொள்வது அவசியம். அகராதிப்படி “இம்பீச்மென்ட்” […]
ஹாங்காங்கில் என்ன நடக்கிறது?
அண்மைக் காலங்களில், தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று, உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்து வருகிறது ஹாங்காங். சீனாவுக்கு கிழக்காக கவ்லூன் மற்றும் பல புதுப் பிரதேசங்களையும், லண்டாவ், ஹாங்காங் உட்பட பல தீவுகளையும் உள்ளடக்கிய பகுதி ஹாங்காங். இன்றைய தேதியில் சீனக் குடியரசின் ஒரு பகுதியாக இருந்தாலும், ‘ஒரு தேசம் இரண்டு முறைமைகள்’ (One country ; two systems) என்று சற்று வித்தியாசமான உடன்பாட்டைக் கொண்டது ஹாங்காங் மீதான சீன ஆளுமை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் […]
வென்ச்சரஸ் வெகேஷன்
”ஏன்னா… அந்த ரிஸார்ட் பத்தி எல்லாம் படிச்சுப் பாத்தேளா?… இன்னும் ஒரு வாரங்கூட இல்லன்னா ட்ரிப்புக்கு.. தெரியாத நாடு, புரியாத பாஷை… ஏதோ பாத்து புக் பண்ணிட்டேன்.. கொஞ்சம் எல்லாத்தயும் படிச்சு ப்ரிப்பேர் பண்ணி வைங்கோ… ப்ளீஸ்…” சமையலறையில் பால் கேனைக் கையிலெடுத்து, காஃபி போடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டே இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள் லக்ஷ்மி. “சரிடி… பாத்துடலாண்டி.. இன்னும் ஒரு வாரம் இருக்கே..” ஹாலில் உட்கார்ந்து கொண்டு, இன்னும் இரண்டு மணி நேரத்தில் தொடங்க இருக்கும் அமெரிக்கன் […]
முட்டை சாப்பிடுவது சைவமா, அசைவமா?
தற்பொழுது பெரும்பாலானோர் நகரங்களில் வாழ்ந்து, பேரங்காடிகளிலும், மளிகைக்கடையிலும் முட்டை, பால், பழம் வாங்குவதால் சமயங்களில் உணவு எங்கிருந்து வருகிறது, எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது பற்றி அதிகம் கவனிப்பதில்லை. இக்காலங்களில், உயிர்க் கருவற்ற, ஆடை வைத்தாலும் குஞ்சு பொரிக்காத முட்டைகள்தான் பெரும்பாலும் கடைகளில் கிடைக்கின்றன. இவை கருவற்றவை என்றாலும், உயிரியல் இரசாயனப்படி நிச்சயம் விலங்கு இனத்தையே சாரும். அடிப்படையில், முட்டையிடும். கோழிகள் விலங்கு இனத்தைச் சார்ந்தவை எனவே முட்டை விலங்கைச் சார்ந்தது என்று ஊகித்துக் கொள்ளலாம். ஆயினும் கடையில் […]
கூகிளை நம்பினோர்
“மடேர் ” என்று தோசைக்கல்லால் கோபமாக அம்மு ரமேஷ் தலையில் அடித்தாள். ரமேஷ் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் பேசுவதில் ஒரு கணம் கவனம் செலுத்தினாள். மறு கணம் அம்மு மீண்டும் “மடேர் ” என்று தோசைக் கல்லால் தலையில் தட்டினாள் . அவள் மனதிற்குள் நடக்கும் அந்த ரணகளத்தைத் தெரியாமல் ரமேஷ், அவன் பாட்டிற்கு பேசியபடி இருந்தான். வெளியில் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் சிரித்தபடி அவன் சொல்வதைக் கேட்டு தலையை ஆட்டியபடி, சமையல் அறையைச் […]
உங்கள் மனதை படைப்பாற்றல் சிந்தனைக்கு (Creative Thinking) தயாராக்குவது எப்படி?
ஒரு மனிதனின் படைப்பாற்றலை, சிந்திக்கும் திறனை அளவிட பெருநிறுவனங்கள் கருத்துதிர்ப்பு (Brainstorming) முறையை பயன்படுத்துகின்றன. பெரும்பாலும் தமது பணியாளர்களைத் தேர்வு செய்ய இம்முறையைக் கடைபிடிக்கிறார்கள் இவர்கள். இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை ஒரு அறையில், மேஜையைச் சுற்றி அமரச் செய்து உரையாடச் செய்வர். தங்களது நிறுவனக் குறிக்கோள், கூட்டு முயற்சியின் (Teamwork) முக்கியத்துவம் போன்ற செய்திகள் தாங்கிய சுவரொட்டிகள் அறைகளில் தென்படக்கூடும். எந்தத் தலைப்பில் பேசுவது என்ற தயக்கம் குழுவினிரைடையே நீண்ட நேரம் தென்பட்டால் அந்தக் குழுவில் தங்கள் […]






