இலக்கியம்
தேசியக் குடியுரிமைச் சட்டத்திருத்தங்கள் 2019
சமீபத்தில் இந்தியக் குடியுரிமைச் சட்டங்களில் கொண்டுவரப்பட்ட மாற்றம் இந்திய தேசம் முழுதும் ஒரு பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது. பல மாநிலங்களில், குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களில், இந்தச் சட்ட மாற்றம் பெரும் போராட்டங்களை உருவாக்கி, உயிர் மற்றும் பொருட் சேதங்களை ஏற்படுத்திவிட்டன. சில மாநிலங்களில் மக்களின் அடிப்படைத் தேவை, இணைய, தொலைபேசிக் குறுஞ்செய்திச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத் திருத்தத்துக்கான முதன்மை நோக்கம் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற ஆஃப்கானிஸ்தான் (1926 இல் பிரிந்தது), பாகிஸ்தான் (1947 இல் […]
தன்னகங்காரம் Narcissism
தமிழர் பண்டைய இதிகாசங்களிலிருந்து இன்று வரை முருகன் கோவில் வழிபாடுகளில் தன்னகங்காரம் (தன் அகங்காரம்) அழித்தல் என்பது முக்கியமானதொன்றாகும். ஆயினும் நடைமுறையில் நமது சமூகம், இதர அமெரிக்க, உலக சமூகங்கள் போன்று சுய நலத்தன்மை, தற்பெருமை போன்ற மாசுக்களால் மனநிலை மாறி நிற்பதைக் கடந்த முப்பது ஆண்டுகளில் அவதானிக்க முடிகிறது. இன்றைய பல நவீன அன்றாட விடயங்களிற்கு விடையாக அமைவது எமது சான்றோர் எமக்குத் தெளிவாக வகுத்து தந்த கலாச்சாரம் எனலாம். குறிப்பாக முருகன் […]
காதல் தோல்வி
காலையில் எழுந்ததும்.. கன்னியின் நினைவு.. காலம்பல கடந்தும் கருமையின் அதிர்வு கால்கள் அனிச்சையாய்க் கழிவறை அடைந்ததும் காத்து வைத்திருந்த, கசங்கிய புகைப்படம் ரகசியமாய் எடுத்து ஒருமுறை ரசித்ததும் ரதியவளின் சிரிப்பு கசங்கலின் மத்தியில் ரணங்களைக் குணமாக்கும் வெண்ணிறப் பற்கள் ரகமான வரிசையில் ரசனையுடன் நடமாடியது! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் ஒருத்திக்காகவே உயிர் வாழ்ந்த உண்மை ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு உணர்வும் ஒருத்தியோடு இணைந்து உயர்ந்த பெருமை! மிதிவண்டி ஏறி மின்னலெனப் பறப்பவன் […]
சிங்கப்பூர் வாடிக்கையாளர் அமேசானை ஆதரிக்கவில்லை
மேல் நாடுகளில் வாழும் எம்மில் பலர் மின்னக பெரும் வர்த்தகம் என்றால் அமேசான் (Amazon), இ-பே (e-Bay) என்று சிந்திக்கும் போது, ஆசியா எவ்வளவு மாறியுள்ளது என்பதை அறியாதுள்ளோம். மேற்கில் பெரும் வெற்றி பெறும் அமேசான், கிழக்காசியாவில் சீன மின் வர்த்தகத் தாபனங்களை விட பின்தங்கியுள்ளது. அமேசான் சென்ற ஆக்டோபர் 2019 கோலாகலமாக தனது வர்த்தகத்தை சிங்கப்பூரில் ஆரம்பித்தது. ஆயினும் அந்நாட்டின் வழமையான மின் வர்த்தக நுகர்வோர் அமேசானை வரவேற்கவில்லை. ஏறத்தாழ சென்ற இரண்டு வருடங்களாக ஆசியாவிலும் […]
பனிப்பூக்கள் Bouquet – தேங்க்ஸ் கிவிங்
தேங்க்ஸ் கிவிங் தினத்தை முன்னிட்டுக் கடைகளில் விற்பனை எப்படிக் கொட்டப் போகிறதோ தெரியாது. வரும் வாரம் சாலைகளில் பனி கொட்டப் போவது நிச்சயம் என்கிறார்கள். அதனால் தேங்க்ஸ் கிவிங் நிமித்தம் ஏற்படும் பயணங்களைக் கவனமாக முடிவு செய்யவும் என்று மினசோட்டா போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதனால், எச்சரிக்கையுடன் பயணிக்கவும். டீல் பிடிக்கிறேன் என்று வேகமாகச் சென்று சில்லறையைச் சிதற விட்டுவிடாதீர்கள்!! — ஒவ்வொரு ஆண்டும் தேங்க்ஸ் கிவிங் விற்பனையில் இணையம் மூலம் நடக்கும் பரிவர்த்தனை கூடிக்கொண்டே செல்கிறது. […]
அங்கோர் வாட் – நூல் விமர்சனம்
ஒரு பயண நூலைப் படித்தால், பயணம் சென்ற அனுபவம் கிடைக்க வேண்டும். அது போன்ற பயணம் செல்ல நம்மைத் தூண்ட வேண்டும். புத்தகத்தில் பார்த்த இடத்தை, நேரில் பார்த்தாற்போன்ற ஒரு திருப்தி கிடைக்க வேண்டும். இது அனைத்தும் திரு. பொன் மகாலிங்கம் எழுதிய ‘அங்கோர் வாட்’ புத்தகம் படித்த போது கிடைத்தது. முதலில் நூலாசிரியரைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். திரு. பொன் மகாலிங்கம் அவர்கள் சிங்கப்பூரில் ஊடகத்துறையில் பணிபுரிகிறார். பயணங்களில், சிற்பக்கலையில் பெரிதும் ஆர்வமுடையவர் என்பது அவரது […]
பச்சையட்டைப் போட்டி
தற்காலிக அடிப்படையில் பணி நிமித்தம் நுழைவுச்சான்று (H1 VISA) பெற்ற ஆசியர்களுக்கு அமெரிக்கக் குடிவரவுச் சட்டம் ஏற்கனவே மிகத் தலையிடித் தரும் விடயம். 2019 ஆம் கொணரப்பட்ட நிரந்தர வதிவிட உரிமைத் திருத்தங்கள், அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியைக் கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட விண்ணப்ப பரிசீலனை தாமதங்கள் பலரை, குறிப்பாக அரை மில்லியன் இந்தியர்களையும், பல நூறாயிரம் சீனர்களையும் பாதித்துள்ளன. நிரந்தர வதிவிட விண்ணப்ப பின்தங்கல்களை நிவர்த்தி செய்ய பல்வேறு அமெரிக்கத் தொழில்நுட்ப […]
மினசோட்டாவினுள் கம்போடியா
உலகின் மிகப் பெரிய இந்து கோவில் கம்போடியாவில் இருக்கிறது என்பார்கள். வைணவக் கோவிலாகக் கட்டப்பட்ட அந்தக் கோவில், பிறகு பௌத்தக் கோவிலாக மாற்றப்பட்டது. சரி, இப்ப அமெரிக்காவிற்கு வரலாம். கம்போடியர்களின் மிகப் பெரிய பௌத்தக் கோவில் வட அமெரிக்காவில் எங்கிருக்கிறது தெரியுமா? மினசோட்டாவில் தான். செயிண்ட் பாலில் (St. Paul) இருந்து தெற்கே 30 மைல்கள் தொலைவில் ஹாம்டன் (Hampton) என்ற பகுதியில் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. எழுபதுகளின் இறுதியில் கம்போடியாவில் […]
இருளில் இரகசிய ஏழில் ஆந்தைகள்
வட அமெரிக்காவில் இலையுதிர்காலம் படிப்படியாகப் பனிகாலத்தை நோக்கி நகர்கிறது. இதன் போது சூழலில் பல உயிரினங்களும் அம்பலமாகின்றன. இவற்றில் ஒரு வகைதான் ஆந்தைகள். வடஅமெரிக்காவில் குறிப்பாக மினசோட்டா, ஒன்ராரியோ நிலங்களில் எமக்கருகில் ஏறத்தாழ பத்து வகை ஆந்தைகள் வசித்து வருகின்றன. ஆந்தைகளை சிலர் மதித்துப் போற்றினாலும், விவரம் புரியாமல் அருவருப்புடன் பார்ப்பவர்களே அதிகம். அடர்ந்த வட அமெரிக்க ஊசிமரக் காட்டுப் பகுதிகளாக இருக்கட்டும், இல்லை நகர்ப்புறச் சந்து பொந்துகளாக இருக்கட்டும் தமது அயலிற்கேறப்ப அமைந்து வாழும் தன்மையுள்ள […]






