கவிதை
குடும்பத்தலைவி

குடும்பம் என்பது மரமானால்- அதில் அடியும் வேரும் நீ தானே! பாசக் கிளைகள் விரிந்தோட-அதில் அன்பாய் இலைகள் நீ தானே! பிள்ளைகள் என்பது விழுதாகும்- அது பிரிந்து வேர் ஊன்ற பெரிதாகும்!! மழையோ, புயலோ வந்தாலும்- அது உந்தன் உறுதியில் கரைந்தோடும்! உன் உழைப்பில் பெரிதாகும்- மரம் உலகம் வியக்க செழித்தோங்கும்! குடும்பத் தலைவி பெண்ணே நீ உந்தன் – சிரிப்பில் பூ பூக்கும்!! உலகம் இயங்கும் உன்னாலே – வணங்கிப் போற்றுவோம் என் நாளும்!! இளங்கோ […]
விலங்கு

விலங்கிட்டு எனைப் பூட்ட விலங்கா நான்? விளங்காத இந்நினைப்பை விலக்கவும் இயலவில்லை! விலங்கிடப் பட்டேன் நான்! விலங்காக நடத்தப்பட்டேன்! விலகவும் இயலவில்லை விளக்கவும் எவருமில்லை! விளக்காய் ஒளி வீச விழைந்தே அவதரித்தேன்! விலங்கான மனிதர்களால் விளங்காத துயரடைந்தேன்! விலகிப் போகையிலே விழவைத்துச் சிரித்தனர்! விளங்கா வயதினையும் விதைக்குள்ளே ஒழித்தனர்! விலக வேண்டும் இனவெறி! விலக்க வேண்டும் வன்முறை! விளக்க வேண்டும் மானுடர்க்கே விரிவாக அஹிம்சைதனை!! வெ. மதுசூதனன்.
பெண்மை

பிறப்பில் தொடங்கி என்னை இறப்பு வரைக்கும் இங்கே சிறப்பாய்க் காத்தவள் பெண், மறுப்பு இதற்கேது சொல்? கருவில் தாங்கி, கற்பக தருவாய் ஈன்று, என்னை வருவாய் மலரேயென்று அற்புதத் திருவாய் மலர்ந்தவள் அன்னை! சிறுவனாய் நான் அலைகயிலே சிறியதாய்த் தோன்றும் செயலும் ஒருவனாய்ச் செய்திடத் தகுந்த திறமையைக் கற்றிடாக் காரணத்தால் அருகிலே வந்து அமர்ந்து பெருகிய நற் பாசத்தோடு மருகிய விழிநீர் துடைத்து உருகியே உதவியவள் அக்காள்! பள்ளி போகும் பருவத்திலே […]
காதல் கிளை பரப்பிய மரம்

ஒற்றை சிவப்பு ரோஜா! உலர்ந்த மலர், சீரற்ற அளவில் அழுத்தியது கையை. உலர்ந்த சிவப்பு! திறந்த பழைய புத்தகம்! என் காலத்தை நினைவுபடுத்தியது. அது உன்னை இன்னும் எனக்கு, நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது. நான் பொக்கிஷமாக வைத்திருக்கும் பரிசு நீ. அதை நீ எனக்கு வழங்கிய நாள், எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. உன் கருவிழி உருட்டி என்னை ஏறிட்டுப் பார்க்கையில் நீ அங்கேயே என்னை மையம் கொள்ள வைத்து விட்டாய். அன்று நீ என் இதயத்தில் தூவிய […]
காதல் எப்படி பேசுகிறது

காதல் எப்படி பேசுகிறது கன்னக்குழி அழகில் மெல்லிய இதழ் விரிப்பின் சிவப்பில் மிரளும் கண் விழியின் தவிப்பில் பெருமூச்சுக்கு இடையில் வரும் மூச்சில் புன்னகையின் இதழவிழ்ப்பில் அன்பு தளும்பும் மென்மொழியில் சீரற்ற இதயத் துடிப்பில் தனிமையில், மௌனத்தில் மற்றும் கண்ணீரில் காதல் பேசுகிறது. மின்னும் கண் பயத்தில் இணை சேர்ந்த மகிழ்ச்சியில் பெருமிதத்தில், பெரும் இதயத்துள் காதல் பிரகாசத்துடன் நிரம்பி வழிகிறது. அன்பான முகத்தில் சிலிர்த்து நடுங்கும் உடலின் அசைவில் வெட்கத் தொடுதலில் மகிழ்ச்சி மற்றும் வலிகளின் […]
புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2022

கண் விழித்து நான் எழுந்தேன்…. கனவின் நங்கை கண் முன்னே! கிள்ளி எனை நான் உணர்ந்து காண்பது நனவென உறுதி செய்தேன்! கன்னியவள் அருகே கனிவுடனே வந்து கவனத்தை நெருடி காதலுடன் பருகி கள்ளமற்ற சிரிப்பை கரையின்றி வழங்கி குறும்புப் பார்வையில் குழப்பம் விலக்கினாள்! காலம் காட்டி நாட்களாய்க் கிழிக்கப்பட கருவிருந்து வெளி வந்தேன் என்றாள்! காலச் சக்கரம் ஓராண்டு சுழன்றிட கடமை மாறாது அடுத்ததாய் உதித்தேனென்றாள்! நானே ஆண்டு இரண்டாயிரத்து இருபத்தொன்று, நாசமிகு […]
LED LIGHTS

நிலவைக் கண்காணிக்க சூரியன் நியமித்த சீலிப்பர் செல்கள்! இரவில் ஒமிழும் வெளிச்ச கூடுகள்! வண்ணத்துப்பூச்சிகளும் தேனிக்களும் சீருடை அணிந்து இரவு வேலைக்குத் தயாராகின்றன மதி குழம்பி!! பூக்கள் மொட்டு மலர தயக்கம் காட்டி மவுனம் காக்கின்றன!! நிலவு அவசரமாய் அறிவிக்க போகிறது இனி பகலிலும் தடை இன்றி ஒளிருவதாய்!’ மனிதர்கள் இரவைப் பகலாக்கி இன்பம் காண்பதாய் நினைத்து கொண்டு – உறவை வீணாக்கித் துன்பம் காண்கிறார்களோ இச்செயற்கை ஒளியில்? – இளங்கோ சித்தன்
சபிக்கப்பட்டவர்களின் கனவு!

எனக்கு உள்ளே ஒரு நெருப்பு கனன்று கொண்டிருக்கின்றது. மன அழுத்தம், சிதளூரும் காயங்கள், மற்றும் நெஞ்சு நிறைந்த வலிகள், எல்லாம் ஒன்றுகூடி ஒவ்வொரு நொடியும் என்னை விரட்டுகின்றன. இருள் ஆழமாக, அதிகமாக என்னைப் பின்தொடர்ந்து வருகிறது. மிகவும் சிக்கலான கோடுகள் என்னைச் சுற்றி வரையப்படுகின்றன. என் சுதந்திரம் சிறைபிடிக்கப்பட்டபோது யதார்த்தம் செத்துப்போனது. நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்த ஒரு பின்னிரவில், நிலவு மறைந்து போனது, மீளா இருள் எங்கும் வியாபித்தது. மின்மினிகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டிப் […]
முதிர்காதல்

புத்தாடை அணிந்து புறப்பட்டுச் செல்கையில் புழுதி பறந்திடும் புல்லட்டின் வேகத்தால்! புரவியில் விரைந்திடும் புருஷோத்தமன் என புன்னகை மத்தியில் புருஷனாய் வரித்திட்டாள்! நடைபாதை போகையிலே நளினமாய்த் தொடர்ந்திடுவான்! நகைத்துத் திரும்பிடிலோ நயமாய் மறைந்திடுவான்! நமுட்டுச் சிரிப்புடனே நயனமிவன் மீதிருக்க நம்பிக்கை ஒளிதந்து நட்பாய் இதழ்குவித்தான்!! காலையில் எழுகையில் காளையின் நினைப்பு! கால்வண்டிப் பயணத்தில் காதலனைத் தேடல்! காலம் முழுக்கக் காதலாய் வாழ்வோமென காரிகை அவளும் காந்தர்வமாய் மணந்திட்டாள்! வழிபாட்டுத் தலங்களிலும் வழிபடும் வேளையிலும் […]
மீண்டு வாராய்!

இறந்து விட்டான் என்றிருந்தோம்.. இனிய கம்பன் – இறந்தே விட்டானென்றிருந்தோம்.. இல்லையெனச் சொல்வதற்கும் இகம் மகிழச் செய்வதற்கும் இன்னுமொரு முறை பிறந்து வந்தான்!!! சிலம்பதனை இசைத்து விட்டுச் சிதைநோக்கிப் போனான் இளங்கோ – எனச் சிதைந்துபோன தமிழ் மனங்கள் சிலிர்ப்புறவே மீண்டு வந்தான்!! ஔவையவள் பெண்ணுருவாய் அவதரித்துச் சென்று, பின்னர் ஆசையாய் ஆண் பிறப்பெடுத்து அவனியிலே பிறிதொருமுறை பிரவேசித்தாள்!! பறந்து போனான், நமையெல்லாம் மறந்து போனான் பாரதியெனப் பாரெலாம் புலம்பிற்று.. பரலோகம் சென்ற அவன் பாதியிலே திரும்பி […]