கவிதை
வேற்றுமையைக் காட்டுவது ஏனோ?

சாம்பல் மேடுகள் சரிவரச் சமைக்கிறதா – இன்று போரில் உயிர்த்த வெண்புறாக்களுக்கு விடிவில்லை. மல்லுக்கட்டிப் புறநகர்ச் சமைந்த மாந்தர்க்கில்லை – சரிநிகர் வாழ்விங்கு செல்லரித்துப் போன மனப்புண்ணை ஆற்றுதல்தான் என்ன வகை? மந்திரி சகமாந்தர் என ஆரைத்தான் நம்புவது ஐயோ! வேற்று நாடுகள் தாமும் வேற்றுமையைக் காட்டுவது ஏனோ? தோலுக்கு ஒவ்வோர் நிறம் சதைத் தொகுப்பிற்கு ஒவ்வோர் நிறை மாந்தர் தம்முன் வேற்றுமைதான் எத்தனையோ! அண்டிப் பிழைக்க வந்து தாய்நாடு நாம் துறந்தோம் வந்துசேர் நாட்டிற்கூடப் பெண்டீர் […]
தண்டனை

இந்திய பீனல் கோடுகள் வளைந்து நெளிகின்றன!! நீதி தேவதை காதுக்கும் கவசம் கேட்கிறாள்! சட்டங்கள் தடுமாறுகின்றன புதிதாய்க் குற்றங்கள் !! யார் கொடுத்தச் சுதந்திரம்? அன்னாசியில் அணுகுண்டு வைத்து – அப்பாவி யானைக்குக் கொடுக்க! கருவறைக்குள்ளும் கை குண்டு வைப்பார்களோ? அரஜாகத்தின் உச்சகட்டம் – இந்த நரகாசுரர்கள் தண்டிக்கப்படுவார்கள்!! எடுக்கட்டும் கடவுளவன் இன்னொரு அவதாரம் தீபாவளிப் போல்- இன்னொரு பண்டிகை வரட்டும்!! கடவுளின் சொந்த நாட்டில் இவ்வரக்கர்கள் […]
இலட்சியப்பெண்

மனிதஇனம்பிறந்தது அதில்பெண்ணினமும்கலந்தது! தாயின்கருவில்இருந்தபோது அடைந்திராததுன்பமுண்டோ? அதையும்வென்றுஜனித்துவிட்டாள் பூமிதனில்இலட்சியப்பெண்!! வறுமைஎன்னும்காரிருள் தன்னைவிழுங்க அவ்விருளையும்எதிர்த்து வீறுநடைகொண்டாள்தன்இலக்கில்!! எத்தனைதுன்பம் எண்ணிலடங்காஇன்னல் குடும்பச்சுமையைச்சுமந்தவளாய் வறுமைஅரக்கியைத்தோற்கடிக்க தன்னம்பிக்கைகொண்டெழுந்தாள் இலட்சியப்பெண்!! காலம்கடந்ததுகண்கள் உறக்கம்இழந்து விடியலைநோக்கி விழித்துக்கொண்டிருந்தது! உறவுஎன்னும்ஓடம்கரைசேர துடுப்பாய்இருந்தஅவள் அடைந்துவிட்டாள் தன்இலட்சியத்தை!! – சிவராசாஓசாநிதி
சொர்க்கம் நேரிலே!

செல்வத்தில் முதற் செல்வம் உடல்நலம் – இதைச் சிந்தையிலே ஏற்றால்தான் வரும் பலம் உள்ளத்தில் அமைதிமிக அவசியம் – இதை உணர்தலே ஆரோக்கிய ரகசியம் இயற்கைநெறி தவறிடாமல் வாழ்வதே – நம் இதயபலம் உடல்நலத்தைக் காண்பதே! செயற்கை முறை வா.ழ்க்கையினைத் தவிர்ப்பது – தூய சிந்தனையில் உடல்நலத்தை அழைப்பது தூயகாற்று தூயநீர் உணவுகள் – இவை தொடர்ந்துவரும் நலத்துக்கான நனவுகள்! ஓயாது தென்றலாய் காற்றுதான் – நம் உடல்நலத்தைக் காப்பாற்றும் ஏற்றுதான். உடல்நலம் கடிகாரம் உண்மைதான் – […]
எது?

அன்பேஇல்லாததால் ஆனந்தமேஇல்லாமற்போனது! இன்பமேஇல்லாததால் ஈகையேஇல்லாமற்போனது! உழைப்பேஇல்லாததால் ஊக்கமேஇல்லாமற்போனது! எழுச்சியேஇல்லாததால் ஏற்றமேஇல்லாமற்போனது! ஐக்கியமேஇல்லாததால் ஒற்றுமையேஇல்லாமற்போனது! ஓதுவதேஇல்லாததால் ஒளடதமேஇல்லாமற்போனது! அஃதேஇன்றையவாழ்வானது!!! – முனைவர்சு. சத்தியா
என் புன்னகைக்குப் பின்னால்

என் புன்னகைக்குப் பின்னால் பார்க்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் சில வடுக்கள்…… காயங்கள் காய்ந்த பின்பும் முத்திரைகளாய் ! என் புன்னகைக்குப் பின்னால் கேட்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் சில பதில்கள்…. கேள்விகள் மட்டும் விஷக் கணைகளாய் ! என் புன்னகைக்குப் பின்னால் ஏற்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் சில வார்த்தைகள் …… குத்திக்கிழிக்கும் தொடர் அம்புகளாய்! என் புன்னகைக்குப் பின்னால் இறக்கவும் முடியாமல் சுமக்கவும் முடியாமல் சில சுமைகள்…. அழுத்தம் கூட்டும் […]
கடவுளைக் காண்பீர்!

பொன் கொண்டோர், பொருள் கொண்டோர், மண், மாளிகை கொண்டோர், பூமியை ஆண்டோரையும் கண்டீர்! பூவையர் மனம் வென்றோரைக் கண்டீரோ? மங்கையரின்றி ஒரு மார்க்கம் உண்டோ – இந்த மானிட உலகில்? அன்பைப் பொழியும் தாயாக, காதலால் கசிந்துருகும் தாரமாக, சோதனையில் தோள்தாங்கும் உற்ற சகோதரியாக, தாயோ தந்தையோ மூப்படைந்ததும் மடிதாங்கும் சேயாக … பெண்ணைக் கண்டோர் உண்டிங்கு! ஆனால், சமூகப் பாகுபாடின்றி, கருணையே வடிவாக மானிட உயிரைக் காத்திட அச்சமின்றி, அருவெறுப்பின்றி அன்போடு அரவணைக்கும் […]
அன்னையர்க்கு அர்ப்பணம்

கையினிலே கல்லொன்று கனத்திட்டால் களைந்திடுவோம் தோள்களிலே தொங்கியதை தேவையென்றால் தவிர்த்திடுவோம் முதுகில்சிறு மூட்டையென்றால் முழுவதுமாய் மறுத்திடுவோம் அவ்வளவேன், அரைக்கிலோ அரிசிதூக்க அழுதே அலறிடுவோம்!! மாதமும் மாறிவர மாதவளுள் மகவுதோன்ற வருகின்ற வாரங்களில் வயிறதுவும் வளர்ந்துவர இயல்பது இல்லாததாகி இடுப்புவலி இயல்பென்றாக பின்னெலும்பு பிளக்கும்வகை பிள்ளையதைப் பிரசவித்தவள்!!! உள்ளிருந்து உருவாகி உணர்வுகளை உரித்தாக்கி உதரத்தில் உறைந்திருந்து உதிரத்தை உறிஞ்சியுண்டு உயர்வான உண்மைக்கு உவகையான உறவுமாக உயிரும் உடலுமாய் உன்னதமாய் உதித்ததது!! சிசுவது சிரிப்பதற்கும் சிரந்தூக்கிச் […]
இப்போது வேண்டுவதெல்லாம்

பனி விலகி வசந்த காலம் வந்தது தொட்டுவிடும் தூரத்தில் கோடை எட்டிப் பார்க்கிறது! காட்டாற்றின் கரையதனில் கதையளந்த காலம் போய் கையறு நிலையில்மனிதர்கள் நாம் சுவரில் ஒட்டிய பல்லிகளாய் – இன்னும் மடித்துப் போடப்பட்ட காகிதத் தாள்களாய் கசங்கிக் கிடக்கின்றோம் தனி அறைகளில் பல்லாயிரம் உயிர் தின்றும் அடங்காது ஆர்ப்பரிக்கும் பூதமாய் இன்னும் வேண்டும் என அடம் பிடிக்கிறது இந்தக் கொடூர கொரோனா!! உலக மீட்பர்கள் தாங்கள் என்று தமக்குத் தாமே […]
சாபம் பொய்யாகட்டும் ….

மகா அசுரன் கொரோனாவின் கோரத்தாண்டவத்திலும் இனிய பல சம்பவங்கள் நிஜமாய் நிகழும்போது,,,, கல்மனம் கொண்ட மனிதனே உதவும் உள்ளங்களாக உலவும் போது,,,, கடவுளே கதவைச் சாத்திக்கொண்டபோதும், எமனே அஞ்சி ஒதுங்கிட, மருத்துவர்களோ…. கொரோனாவையும் நோயாளியையும் சவாலோடு சந்திக்கும்போது…. (சில )மனிதனே உன் இதயத்தில் இன்னுமா இரக்கம் பிறக்கவில்லை??? நீ காட்டுவாசியானதேனோ? மிருகத்தனமாய் தாக்குதல் தொடுத்து மருத்துவரின் மரண உடலையே கதறவைத்தாயே… சர்வ வல்லமையும் கொண்ட சமூகமே அதிர்ந்து போனதே… நீ , கொரோனாவை […]