கவிதை
கொரோனா பயம்

காலம் பொன் போன்றது இப்போதைக்கு விட்டு விடுங்கள் உயிர் அதைவிடப் புனிதமானது பயணத்தை நிறுத்துங்கள் உலகை உருவாக்கும் முயற்சியில் உங்கள் வாழ்க்கையை ஒப்புவியுங்கள் கண்களில் ஒளிக்கீற்றை வரவழைத்து மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள் நம்பிக்கை என்ற ஒரு சிறு சொல்லே காலத்தை மாற்றும் அற்புதம் என்று நம்புவோமாக இதயத்துடன் இதயம் பேசுவோம் சொற்கள் மௌனித்து போகுமுன் உமக்காய் இன்னும் உம் மக்களுக்காய் உங்கள் கைகளைக் கழுவுங்கள் மரணத்துக்காய் திறக்கப்பட்ட பெருங் கதவை முழுவதுமாய் மூட உதவுங்கள் வெற்றுச் சாளரங்களின் […]
நீ கேட்டால் நான் மாட்டேனென்று

அவளருகே சென்றேன்.. அவயங்களைப் பருகினேன்.. அணைக்க முயன்றே அருகினில் நெருங்கினேன்… அதெல்லாம் இருக்கட்டும், அங்கேயே நில்லென்றாள்.. அங்கம் தொடாமலே அன்பினைக் காட்டென்றாள் …. காதலின் ஸ்பரிசம் காற்றுப்புகா நெருக்கம் காமனவன் கணைதவிர்த்துக் காத்திடும் மருந்துமன்றோ! காததூரம் நிற்பதற்குக் கால்கடுக்க வந்ததேனோ? காதலியே சற்றுமென்னைக் காருண்யமாய் நோக்கிடென்றேன்! இன்பமொரு எல்லைக்குள் இருப்பதுவும் முறைதானே இன்றந்தப் பெருமாசை இதயத்துள் எழுந்ததென இல்லத்துள் நீபுகுந்து இக்கணமே வாவென்பாய் இப்பேதை கொள்கவென இலைவிரித்துப் பரிமாறவோ? சாக்காடு என்றென்று சான்றோரும் கண்டிலரே சாதல் வருவதற்குள் […]
உழவுத் தொழில்

காலையில் எழுந்து கதிரவன் தொழுது கடமையை நாளும் செய்திடுவோம்! கதிரவன் கொடுத்த உழவுத்தொழிலை உயிர்மூச்சென்றே போற்றிடுவோம்! பஞ்சமில்லாமல் பார்ப்பதுயெல்லாம் பாரினில் அவனின் செயல்தானே! வஞ்சனை செய்து வாழ்வை அழித்தால் வீழ்வது பூமியில் நாம்தானே! உழவுத்தொழிலை உயிர்மூச்சாக்கி உழைத்தது நமது நாடன்றோ! உழவர் வாழ்வை உயர்த்தச் செய்வது உயர்ந்தோர் செய்யும் செயலன்றோ! பசியைப் போக்கிடும் உழவர் வாழ்வினில் பட்டினிச் சாவினைத் தடுத்திடுவோம்! பசுமை நிறைந்த பாரினைக் கண்டிட உழவர் வாழ்வினைப் […]
இதுவா வாழ்க்கை?

தொலைக்காட்சிப் பெட்டிநம்மின் வீட்டிற் குள்ளே தொகைகொடுக்க வந்தபின்னே புத்த கங்கள் விலைகொடுத்து வாங்குவதை நிறுத்தி விட்டோம் வீற்றிருந்து படிப்பதையும் விட்டு விட்டோம் ! அலைபேசி நம்கைக்கு வந்த பின்போ அழகான கையெழுத்தில் நலங்கள் கேட்டுக் கலையாக எழுதிவந்த கடித மெல்லாம் காணாமல் போனதுவே கையை விட்டே ! பொன்னாக மேசையின்மேல் கணினி வந்தே பொலிவாக […]
காதல் தோல்வி

காலையில் எழுந்ததும்.. கன்னியின் நினைவு.. காலம்பல கடந்தும் கருமையின் அதிர்வு கால்கள் அனிச்சையாய்க் கழிவறை அடைந்ததும் காத்து வைத்திருந்த, கசங்கிய புகைப்படம் ரகசியமாய் எடுத்து ஒருமுறை ரசித்ததும் ரதியவளின் சிரிப்பு கசங்கலின் மத்தியில் ரணங்களைக் குணமாக்கும் வெண்ணிறப் பற்கள் ரகமான வரிசையில் ரசனையுடன் நடமாடியது! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் ஒருத்திக்காகவே உயிர் வாழ்ந்த உண்மை ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு உணர்வும் ஒருத்தியோடு இணைந்து உயர்ந்த பெருமை! மிதிவண்டி ஏறி மின்னலெனப் பறப்பவன் […]
மை பூச ….

அஞ்சு வருசத்துக்கு ஒரு வாட்டி கெஞ்சிக் கூத்தாடி வருவாண்டி…… கொஞ்சிப் பேசித் தலையாட்டி வஞ்சிக்க வழிபாத்து நிப்பாண்டி…… கையக் காலைப் புடிச்சுத்தான் பொய்யப் புளுகைச் சொல்வாண்டி செய்ய முடியாச் செயலெல்லாம் மெய்யா நடக்கும்னு விடுவாண்டி …… மானங் கெட்ட பொழப்பாலே போன வருசம் அடிச்ச கொள்ளை தானப் பிரபுவாத் தான் மாறி வானம் வழியாக் கொடுப்பாண்டி …. தண்ணி நீஞ்சும் மீன் புடிக்க பண்ணி வைச்ச புழுவதுடி….. கண்ணி வச்சு மான் புடிக்க பின்னிப் பிணைஞ்ச வலையதுடி […]
கயமைக்குக் கல்லடி

கடவுளரைப் பழித்திடும் கருங்காலிக் கூட்டமது கண்ணியம் இன்றியே குரைப்பதும் தொடர்ந்திடுது கைகளில் ஒலிப்பெருக்கி கைதட்டச் சிறுகூட்டம் கண்ணனின் லீலைகளைக் காலித்தனமாய்ப் பேசியது! கருத்துத் தெளிவாய்க் கைகுவித்துக் கேட்டிட்டால் கருணை பலகொண்டு கனிவாய் விளக்கிட கடுந்தவம் புரிந்து கைங்கரியம் பலசெய்த கடவுள்நிகர்ப் பெரியோர் கண்டம் முழுதுமுண்டு!! கலகம் விளைவித்தால் கல்லா நிறையுமென்றும் கண்மூடித் தாக்கிட்டால் கனகம் கிடைக்குமென்றும் கடவுளரை ஏசிட்டால் கணக்கின்றிக் கொட்டுமென்றும் காசொன்றே குறிக்கோளான கயவர்களை நிராகரிப்போம்! கயவான சொல்லதற்குக் கருத்தாய் மறுப்புண்டோ கதிகலங்கி நின்று கண்ணீர்விடும் […]
நாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன்

ஏதோ ஒரு நிறுவனத்தின் இலவசப் பரிசாக அவனிடம் ஆண்டின் ஆரம்பத்திலேயே வந்து சேர்ந்த நாட்குறிப்பு நான் ! புதிதாய்ப் பரவசத்துடன் என்னைக் கையிலெடுத்தப்போது என்னுள் அவன் உதிர்த்த உறுதிமொழிகளை அடிக்கடி நினைவூட்டியபடிதான் இருக்கிறேன் ! எழுதப்பட்டிருந்த வரிகளில் அவனது கடந்த காலத்தை காட்டிக் கொண்டிருக்கிறேன் என்றே என்னைப்பற்றி அவன் எண்ணுவதுண்டு ! ஏனோ அவனுக்கு வருவாயை வங்கியிலும் வாழ்க்கையை எனக்குள்ளும் சேமிக்கத் தெரியவேயில்லை ! அன்றாடமில்லை என்றாலும் என்றோ சில நாட்களில் எழுத்துப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தேன் நான் […]
நான் நானில்லை

நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே நீங்கள் அதுவல்ல நான்! வரிக்கிறீர்களே என்னைப்பற்றி அதுவல்ல நான்! வசப்பட்டதில் வசித்துக்கொண்டிருக்கிறேனே அதுவுமல்ல நான்! என் சிறகுகளை பார்த்திருக்க முடியாது நீங்கள். ஏனெனில் அவை முழுமையாய் விரிக்கப்பட விடவேயில்லை! ஒருவேளை கட்டுக்களை விடுவித்து என் சிறகுகளை விரித்திருந்தால் நான் யாரென பாதியாவது தெரிந்திருக்கும்! நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே நீங்கள் அதுவல்ல நான்! – ருக்மணி