\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கவிதை

நெஞ்சு பொறுக்குதில்லை

நெஞ்சு பொறுக்குதில்லை

நெஞ்சு பொறுக்குதில்லை துஞ்ச விடுவதுமில்லை வெஞ்சினம் மிகுந்து கிஞ்சித்தும் இரக்கமின்றி வஞ்சித்துக் கொன்றவர்க்கு அஞ்சி நடுங்குவமோ கெஞ்சிக் குழைவமோ எஞ்சியிருக்கும் நாளெல்லாம் மிஞ்சிநிற்குமே இவ்வடுவும் வனத்து விலங்கதுவும் மனவொழுக்கம் கொண்டிருக்கும் இனத்துச் சோதரரை சினத்துக் கொல்லாதடா! அனத்திக் கெஞ்சியவரை கனத்தக் கழியாலடித்து பிணமாக்கி மகிழ்ந்தாயே தினவெடுத்த கல்நெஞ்சனே நனவுடன்தான் இருந்தாயா?   அதிகாரம் எவர்தந்தார் சதிகாரச் செயலதற்கு? விதிபோற்றவே காவலர் விதிமுடிக்கும் காலனல்ல உதிரஞ்சொட்டக் கதறியவரை சிதிலமாக்கித் தின்றாயே! மதியிழந்து போனீரே! உதிர்ந்தவை  இருஉயிரென்றாலும்  அதிர்ந்தது அகிலமன்றோ? […]

Continue Reading »

கொலைக் குற்றம்

கொலைக் குற்றம்

கண்களைக் குத்திக் கிழித்திடும் இமைகள்! நாவினைக் குத்தி நறுக்கிடும் பற்கள்! விரல்களில் புகுந்து வெளிவரும் நகங்கள்! பயிரினை மேய்ந்து பிரித்திடும் வேலிகள்!!!   சட்டங்கள் இயற்றிடத் துறையொன்று உண்டு! இயற்றியதைக் காத்திட காவலென்ற ஒன்று! காத்திடும் வேலையை அழித்தலாக்கியது என்று? வேலையைக் கொலையாய் மாற்றியது இன்று!!!   கால்வயிற்றுக் கஞ்சிக்குக் கால்கடுக்க உழைத்தவர்! காலையில் தொடங்கி காரிருளில் முடிப்பவர்! காலம்பல உழைத்தாலும் காசுபணம் காணாதவர்! காவல்துறை வன்முறைக்குக் காவாகிப் போனவரவர்!!!   அப்பாவைக் கண்முன்னே அடித்து நொறுக்குகையில் […]

Continue Reading »

அவன் போராளி

அவன் போராளி

வெடித்து முழங்கிய துப்பாக்கிச் சின்னங்களால் துளையுண்டு உயிர்த்தெழுந்த வெள்ளைப் பூக்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தக்கூடப் பிரக்யை அற்றுத்   தொலைவில் தன் பார்வையைப் பதித்தவாறே  வருகிறான் அவன் நிற்கக்கூட நாதியற்றுத் தளர்ந்துவிட்ட  வயோதிப மாதுபோல அவன்  சுமந்து வந்த AK-47… பசித்திருக்கிறது… “பையில் பாணும் தண்ணீரும் இருக்கிறது இரவு விடிகிறபோது அதிகாலையில்  பார்த்துக்கொள்ளலாம்” என முணுமுணுக்கிறது அவன்வாய்   இறந்துபோன தன் சகாக்கள் பற்றிய நினைவுகளோடு -தூக்கிப்போகிறான். அரையிருட்டில் சரசரவெனத் தூறிய மழைக்குள் சல்லடை போடுவதற்குப் […]

Continue Reading »

வேற்றுமையைக் காட்டுவது ஏனோ?

வேற்றுமையைக் காட்டுவது ஏனோ?

சாம்பல் மேடுகள் சரிவரச் சமைக்கிறதா – இன்று போரில் உயிர்த்த வெண்புறாக்களுக்கு விடிவில்லை. மல்லுக்கட்டிப் புறநகர்ச் சமைந்த மாந்தர்க்கில்லை – சரிநிகர் வாழ்விங்கு செல்லரித்துப் போன மனப்புண்ணை ஆற்றுதல்தான் என்ன வகை? மந்திரி சகமாந்தர் என ஆரைத்தான் நம்புவது ஐயோ! வேற்று நாடுகள் தாமும் வேற்றுமையைக் காட்டுவது ஏனோ? தோலுக்கு ஒவ்வோர் நிறம்  சதைத் தொகுப்பிற்கு ஒவ்வோர் நிறை மாந்தர் தம்முன் வேற்றுமைதான் எத்தனையோ! அண்டிப் பிழைக்க வந்து தாய்நாடு நாம் துறந்தோம் வந்துசேர் நாட்டிற்கூடப் பெண்டீர் […]

Continue Reading »

தண்டனை

தண்டனை

இந்திய பீனல் கோடுகள் வளைந்து நெளிகின்றன!!   நீதி தேவதை காதுக்கும் கவசம் கேட்கிறாள்!   சட்டங்கள் தடுமாறுகின்றன புதிதாய்க் குற்றங்கள் !!   யார் கொடுத்தச் சுதந்திரம்? அன்னாசியில் அணுகுண்டு வைத்து – அப்பாவி யானைக்குக் கொடுக்க!   கருவறைக்குள்ளும் கை குண்டு வைப்பார்களோ?   அரஜாகத்தின் உச்சகட்டம் – இந்த நரகாசுரர்கள் தண்டிக்கப்படுவார்கள்!!   எடுக்கட்டும்  கடவுளவன் இன்னொரு அவதாரம் தீபாவளிப் போல்- இன்னொரு பண்டிகை வரட்டும்!!   கடவுளின் சொந்த நாட்டில் இவ்வரக்கர்கள் […]

Continue Reading »

இலட்சியப்பெண்

இலட்சியப்பெண்

மனிதஇனம்பிறந்தது அதில்பெண்ணினமும்கலந்தது! தாயின்கருவில்இருந்தபோது அடைந்திராததுன்பமுண்டோ? அதையும்வென்றுஜனித்துவிட்டாள் பூமிதனில்இலட்சியப்பெண்!!   வறுமைஎன்னும்காரிருள்  தன்னைவிழுங்க அவ்விருளையும்எதிர்த்து  வீறுநடைகொண்டாள்தன்இலக்கில்!!   எத்தனைதுன்பம் எண்ணிலடங்காஇன்னல் குடும்பச்சுமையைச்சுமந்தவளாய் வறுமைஅரக்கியைத்தோற்கடிக்க தன்னம்பிக்கைகொண்டெழுந்தாள் இலட்சியப்பெண்!!   காலம்கடந்ததுகண்கள் உறக்கம்இழந்து விடியலைநோக்கி விழித்துக்கொண்டிருந்தது! உறவுஎன்னும்ஓடம்கரைசேர  துடுப்பாய்இருந்தஅவள் அடைந்துவிட்டாள் தன்இலட்சியத்தை!!                    –       சிவராசாஓசாநிதி

Continue Reading »

சொர்க்கம் நேரிலே!

சொர்க்கம் நேரிலே!

செல்வத்தில் முதற் செல்வம் உடல்நலம் – இதைச் சிந்தையிலே ஏற்றால்தான் வரும் பலம் உள்ளத்தில் அமைதிமிக அவசியம் – இதை உணர்தலே ஆரோக்கிய ரகசியம் இயற்கைநெறி தவறிடாமல் வாழ்வதே – நம்  இதயபலம் உடல்நலத்தைக் காண்பதே! செயற்கை முறை வா.ழ்க்கையினைத் தவிர்ப்பது – தூய  சிந்தனையில்  உடல்நலத்தை அழைப்பது தூயகாற்று தூயநீர் உணவுகள் – இவை  தொடர்ந்துவரும் நலத்துக்கான நனவுகள்! ஓயாது தென்றலாய் காற்றுதான் – நம்  உடல்நலத்தைக் காப்பாற்றும் ஏற்றுதான்.  உடல்நலம் கடிகாரம் உண்மைதான் – […]

Continue Reading »

எது?

எது?

அன்பேஇல்லாததால் ஆனந்தமேஇல்லாமற்போனது! இன்பமேஇல்லாததால் ஈகையேஇல்லாமற்போனது! உழைப்பேஇல்லாததால் ஊக்கமேஇல்லாமற்போனது! எழுச்சியேஇல்லாததால் ஏற்றமேஇல்லாமற்போனது! ஐக்கியமேஇல்லாததால் ஒற்றுமையேஇல்லாமற்போனது! ஓதுவதேஇல்லாததால் ஒளடதமேஇல்லாமற்போனது! அஃதேஇன்றையவாழ்வானது!!!   –      முனைவர்சு. சத்தியா

Continue Reading »

என் புன்னகைக்குப் பின்னால்

என் புன்னகைக்குப் பின்னால்

என் புன்னகைக்குப் பின்னால்  பார்க்கவும் முடியாமல் தவிர்க்கவும்  முடியாமல் சில வடுக்கள்…… காயங்கள் காய்ந்த பின்பும் முத்திரைகளாய் !   என் புன்னகைக்குப் பின்னால்  கேட்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் சில பதில்கள்…. கேள்விகள் மட்டும் விஷக் கணைகளாய் !   என் புன்னகைக்குப் பின்னால்  ஏற்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் சில வார்த்தைகள் …… குத்திக்கிழிக்கும் தொடர் அம்புகளாய்!   என் புன்னகைக்குப் பின்னால் இறக்கவும் முடியாமல் சுமக்கவும் முடியாமல் சில சுமைகள்…. அழுத்தம் கூட்டும் […]

Continue Reading »

கடவுளைக் காண்பீர்!

கடவுளைக் காண்பீர்!

பொன் கொண்டோர், பொருள் கொண்டோர், மண், மாளிகை கொண்டோர், பூமியை  ஆண்டோரையும் கண்டீர்!  பூவையர் மனம்  வென்றோரைக் கண்டீரோ?  மங்கையரின்றி ஒரு  மார்க்கம் உண்டோ – இந்த மானிட உலகில்?    அன்பைப் பொழியும் தாயாக,  காதலால் கசிந்துருகும் தாரமாக, சோதனையில் தோள்தாங்கும்  உற்ற சகோதரியாக,  தாயோ தந்தையோ மூப்படைந்ததும்  மடிதாங்கும் சேயாக …  பெண்ணைக் கண்டோர்  உண்டிங்கு!    ஆனால், சமூகப் பாகுபாடின்றி, கருணையே வடிவாக  மானிட உயிரைக் காத்திட அச்சமின்றி, அருவெறுப்பின்றி அன்போடு அரவணைக்கும்  […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad