\n"; } ?>
Top Ad
banner ad

கட்டுரை

அபாயகாலத் தயார்நிலைப் பொட்டலம்

அபாயகாலத் தயார்நிலைப் பொட்டலம்

(English Version) நாம் வாழும் சூழல்களில் கோடைக்கால அடைமழைகளும், பனிக்காலப் புயல்களும் பொதுவாக ஏற்படும் விடயங்கள். இப்பேர்ப்பட்ட கால நிலைகளில் நாம் நிதானமாக ஆலோசித்து முன்கூட்டியே செயல்படுவதன் மூலம், நாம் எமக்கும் எமது குடும்பத்திற்குமான கடைசி நேர அசௌகரியங்களைத் தவிர்த்திட வழிபண்ணிக்கொள்ளலாம். இதற்கு நாம் இலகுவாக கையில் எடுத்துச் செல்லக்கூடிய தயார்நிலைப் பொட்டலங்களை அமைத்துக் கொள்வது சாலவும் நன்று. எந்த அபாயக்கால பொழுதையும் எதிர்கொள்ள நாம் எமது குடும்பத்திற்கு 72 மணித்தியாலங்கள் அல்லது 3 நாட்களுக்குத் தேவையான […]

Continue Reading »

பேரவை தமிழ்விழா -29

பேரவை தமிழ்விழா -29

வட அமெரிக்காவில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது மொழி, பண்பாடு, மரபுக்கலைகள் மற்றும் தொன்மைப் போன்றவற்றைத் தக்கவைத்துக் கொள்வதோடு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்காகவும், மற்றும் இங்கு வசிக்கின்ற தமிழர்களை அமைப்பாக்கிடும் நோக்கத்திலும் ஆங்காங்கே தொடங்கப்பட்டவை தமிழ்ச் சங்கங்கள். வட அமெரிக்கா முழுவதும் வேரூன்றியுள்ள பெரும்பாலான தமிழ்ச் சங்கங்களை ஒற்றைக் குடையின் கீழ் திரட்டிய கூட்டமைப்பு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க விடுதலை நாள் விடுமுறையில் – ஜூலை மாத முதல் வாரத்தில் – […]

Continue Reading »

போக்கிமான் –கோ

போக்கிமான் –கோ

* டிவிட்டர், ஃபேஸ்புக் பயனார்களின் எண்ணிக்கை முறியடிப்பு * ஏரிக்கரையில் பிணம் மிதப்பதைக் கண்ட சிறுமி * மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவர்கள் * ஒரே மாதத்தில் 120% வளர்ச்சியடைந்த நிறுவனப் பங்கு இதையெல்லாம் சில நாட்களாக ஆங்காங்கே கேட்டிருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள். ‘பாக்கெட் மான்ஸ்டர்ஸ்’ – ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சதோஷி தஜிரி (Sadoshi Tajiri) என்ற ஜப்பானியரின் மூளைக்குள் உருவான கற்பனை அரக்கர்கள் இன்று உலகின் சில பகுதிகளில் கோடிக்கணக்கானவர்களை ஆட்டி வைத்துக் […]

Continue Reading »

தமிழில் இணையதளப் பெயர்கள்

தமிழில் இணையதளப் பெயர்கள்

உங்கள் கணினி இணைய உலாவியில் (browser), என்றேனும் www.panippookkal.com என்பதற்குப் பதில் பனிப்பூக்கள்.com என்று தட்டச்சுச் செய்து, பின்பு திருத்தியிருக்கிறீர்களா? இனி திருத்த வேண்டாம். அதுவும் உங்களைப் பனிப்பூக்கள் தளத்திற்குச் சரியாகக் கொண்டு வந்துவிடும். அதாவது, இணையத்தளங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், தமிழ் போன்ற மற்ற உலக மொழிகளிலும் வைப்பதற்கு வழிவகைகள் இருக்கின்றன. இனி, அழகுத்தமிழிலேயே இணையதளங்களுக்குப் பெயர் வைக்கலாம். அவ்வாறே, உலாவியில் தமிழில் குறிப்பிட்டு, அத்தளங்களுக்குச் சென்று அடையலாம். இது எப்படிச் செயல்படுகிறது? முதலில், பொதுவாக […]

Continue Reading »

ஆட்டிஸம் – பகுதி 8

ஆட்டிஸம் – பகுதி 8

(ஆட்டிஸம் – பகுதி 7) ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை உள்ள குடும்பத்திற்கு, நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் சமூகமாக ஒன்று கூடுதல் ஒரு கடினமான சோதனையாகக் கூடும். பல கேள்விகளையும், பல விதமான பார்வைகளையும் சந்திக்க வேண்டிவரும். அதுபோன்ற இடங்களுக்குக் கிளம்புவதற்கு முன்னர், குழந்தை இன்று எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்குமா, அதிகமாகச் சிரித்துக் கொண்டிருக்குமோ அல்லது அழுது கொண்டிருக்குமோ, எங்காவது மோதிக் கொண்டு காயப்பட்டுக் கொள்ளுமோ, மற்ற சக குழந்தைகளுடன் சரியாகப் பழகுமோ – இது போன்ற […]

Continue Reading »

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 7

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 7

அடுத்தடுத்த வாரங்களில் இரண்டு பெருங்கட்சிகளின் மாநாடு நடந்து முடிந்து விட்டன. கிளீவ்லாண்ட், ஓஹையோ வில் ஜுலை 18-21 நடைபெற்ற குடியரசுக் கட்சி மாநாட்டில் அக்கட்சி சார்பில் டானல்ட் ஜான் ட்ரம்ப் அதிபராகவும், மைக்கேல் ரிச்சர்ட் பென்ஸ் துணை அதிபராகவும் முன்னிறுத்தப்பட்டுள்ளனர். பிலடெல்ஃபியா, பென்சில்வேனியாவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி மாநாட்டில் ஹிலரி ராடம் கிளிண்டன் அதிபராகவும், டிமோதி மைக்கேல் கெய்ன் துணை அதிபராகவும் அறிவிக்கப்பட்டனர். குடியரசுக் கட்சி மாநாடு பொது மக்களாலும், ஊடகத் துறையினராலும், அரசியல் நோக்கர்களாலும் பெரிதும் […]

Continue Reading »

ஆட்டிஸம் – பகுதி 7

ஆட்டிஸம் – பகுதி 7

(ஆட்டிஸம் – பகுதி 6) செய்த விஷயங்களையே திரும்பத் திரும்பச் செய்வதென்பது ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் காணப்படும் பொதுவான ஒரு பழக்கமாகும். தங்களுக்கென்று ஒரு சூழலை, கிட்டத்தட்ட ஒரு கூடு போல வகுத்துக் கொண்டு, அதனை விட்டு வெளியில் வராமல் வாழ்ந்து கொண்டிருப்பது அவர்களின் வழக்கமாகும். அந்தக் கூட்டை விட்டு வெளியே வந்தால் அவர்கள் மிகவும் அமைதியிழந்து காணப்படுவர். மன அழுத்தம் அதிகரித்து, பதட்டம் மிகுந்து துயரப்படுவர். சிகிச்சை செய்யும் முறைகளும், பள்ளிகளும் அந்தக் குழந்தைகளை வழக்கமான […]

Continue Reading »

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 6

அமெரிக்கத் தேர்தல்  – பகுதி 6

(அமெரிக்கத் தேர்தல்  – பகுதி 5) ஒரு வழியாக ஜூன் மாதம் பதினான்காம் தேதியோடு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ப்ரைமரிகள் முடிவடைந்தன. குடியரசுக் கட்சி சார்பில், அனைத்து போட்டியாளர்களும் சில வாரங்களுக்கு முன்னர் விலகிக் கொண்டுவிட டானல்ட் ட்ரம்ப் மட்டுமே எஞ்சியிருந்தார். ஹிலரி கிளிண்டன் கடைசி நேர பலத்த போட்டிக்குப் பின்னர், பெரும்பான்மையான பிரதிநிதிகளின் ஆதரவோடு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் என்ற நிலையை எட்டியுள்ளார். தான் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதைத் தன்னந்தனியாக வந்து செய்தியாளர்கள் முன் […]

Continue Reading »

பிள்ளைகளும் பெற்றார்களும் புத்தகம் வாசித்தல்

பிள்ளைகளும் பெற்றார்களும் புத்தகம் வாசித்தல்

சின்னஞ்சிறு சிட்டுக்களாகிய எமது குழந்தைகளின் மூளைகள் துரிதமாக வளரும் உடல் அங்கமாகும். புத்தகம் வாசித்தல் பயிற்சியானது சுகாதீனமான மூளை வளர்ச்சியின் அத்திவாரம். சிறு பிள்ளைகள் மூளையின் வளர்ச்சியில் 90 சதவீதமானது  தாயார் தன்னுள்ளே சுமக்கும் தறுவாயிலிருந்து 5 வயது வரை நடைபெறும். மூளையானது மற்றைய உடல் தசைகள் போன்று பயிற்சியால் வலிமையடையும் பாகம். ஆயினும் ஒரு வித்தியாசம் என்னவென்றால் அது தனது பிரதான வளர்ச்சியைப் பிள்ளையின் முதல் 60 மாதங்களிலேயே பூர்த்தி செய்து கொள்ளுகிறது. உடலின் வெளிப் […]

Continue Reading »

இந்திய தரிசனம்

இந்திய தரிசனம்

நான் அமெரிக்காவில் கம்பெனி மாறியவன். பெங்களுர் ஏர்போர்டில், என்னை அமெரிக்காவிற்கு அனுப்பிய, நான் பணிபுரிந்த முந்தைய நிறுவனத்தின் வரவேற்பு விளம்பரத்தைப் பார்த்த போது, “வாடா மவனே வா” என்று எனக்காகவே வைத்ததைப் போலவும், வைவதை போலவும் இருந்தது. பெங்களூர் ஏர்போர்ட்டில் வை–ஃபை தேவையென்றால், அதற்கு நாம் நமது மொபைல் நம்பரைக் கொடுத்து, அதில் அவர்கள் அனுப்பும் OTPயை எடுத்து எண்டர் செய்து, அதை அவர்கள் சரி பார்த்து, பிறகு இலவச வை–பை கொடுக்கிறார்கள். எந்த நாட்டு மொபைல் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad